சென்னை: மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக செயல்படும் தேசவிரோத கும்பல்களே அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் அனுதாபத்தை ஏற்படுத்தும் நோக்கில் அனிதாவை சிலர் பயன்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். நீட் எதிர்ப்பாளர்களிடம் இருந்து வந்த அழுத்தங்களின் காரணமாகவே மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதாக கிருஷ்ணசாமி கூறியுள்ளார். மாணவி அனிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுவதால் தமிழக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இல்லையென்றால், சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் பல்வேறு ஆதாரங்களை அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவக் கல்வியில் பாரபட்சமற்ற அணுகுமுறையைக் கொண்டு வரவே நீட் தேர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கிருஷ்ணசாமி, இது மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தும் என்றும் கூறினார். நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் முழுமையாக தயாரானால், பிற மாநிலங்களிலும் மருத்துவ இடங்களைப் பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். பாடத் திட்டத்தின் தரத்தை உயர்த்த திமுக, அதிமுக அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய கிருஷ்ணசாமி, இதன் காரணமாகவே, ஆண்டுக்கு 34 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்கு தேர்வாகும் நிலை உள்ளதாகவும் தெரிவித்தார். கிருஷ்ணசாமி திமுகவை குற்றம் சாட்டியதை கேள்விப்பட்ட அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை ‘மத்திய அரசின் திட்டமிட்ட கொலை’ என்று தி.மு.க-வின் அரியலூர் மாவட்டச் செயலாளர் சிவசங்கர் கூறியுள்ளார். அனிதாவின் மரணம் குறித்து நம்மிடம் பேசிய சிவசங்கர் ‘அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை மத்திய அரசின் திட்டமிட்ட கொலை. அனிதாவை ஒராண்டு நீட் பயிற்சி வகுப்பில் சேர்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால், அனிதாவின் தந்தை “அனிதா படிச்சதெல்லாம் போதும். நீட் வகுப்பு எல்லாம் வேணாம்” என்று குடும்பச் சூழல் காரணமாக விரக்தியுடன் கூறினார். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வந்த அனிதாவின் இந்த முடிவு அதிர்ச்சியளிக்கிறது. இந்த இழப்பைக் கடந்துசெல்ல முடியவில்லை. மத்திய அரசு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்குத் துரோகம் செய்து கொண்டிருக்கிறது. இன்னும் பல அனிதாக்கள் வெளியே தெரியாமல் இருக்கிறார்கள். அனிதாவின் மரணமே கடைசி மரணமாக இருக்க வேண்டும்’ என்று முடித்தார். இதற்கிடையே நமது உங்கள் நியூஸ் கப்சா நிருபர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணசாமி தன் மகளுக்கு டாக்டர் சீட் வாங்கிய பித்தலாட்டதை கண்டுபிடித்துள்ளார். வெகுண்டெழுந்த கப்சா நிருபர் தனது கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு கூறியதாவது: “2015 சட்டமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசிக்கொண்டிருந்தபோது அமைச்சர் ஒருவர் எழுந்து உங்கள் மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும் முதலமைச்சரிடம் வந்து மெடிக்கலில் சேர உதவி கேட்டீர்கள். அடுத்த நிமிடமே அம்மா அவர்கள் மெடிக்கல் சீட் கொடுத்தாரே மறந்துவிட்டீர்களா எனக் கேட்க அப்போது கிருஷணசாமி நான் மறக்கவில்லை. அதற்காக இப்போதும் நன்றி கூறுகிறேன் எனக்கூறி முதலமைச்சரைப் பார்த்து வணக்கம் போட, இந்தவணக்கத்தை வேறு எங்காவது போடு என்பதுபோல் வெடுக்கென்று முதலமைச்சர் முகத்தை திருப்பிக்கொள்ள டாக்டர் கிருஷ்ணசாமியின் சுயநலம் அப்போதே சட்டமன்றத்தின் மேஜைமீது ‘பொத்’தென்று விழுந்தது.
தலித் குழந்தைக்கு அத்தகைய உதவி பெற்றதில் தவறே இல்லை.ஆனால் இப்படி புறவாசல் வழியாக உதவியைப் பெற்றுக் கொண்டவர் தம்மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதி என முழங்கி வருவதுதான் வேதனை. தோழர் பிரின்சு, திமுக எம்எல்ஏ சிவசங்கர் மீது குற்றம் சுமத்துகிறார் கிருஷ்ணசாமி, பாஜக அதிமுக வேடிக்கை பார்க்கிறார்கள். ஊடகங்கள் இந்த நியாயவாதியை தேடிப்பிடித்து அவர் கருத்தைக் கேட்கிறார்கள். எத்தனை முறை அனிதா டெல்லி சென்று வந்தார்? அதற்க்கான பணம் கிடைத்தது எப்படி? சாதாரண +2 மாணவி உச்ச(நீதி)மன்றம் வரை பின்புலம் இல்லாமல் செல்ல இயலுமா? நீட் தேர்வுக்கு மருத்துவர்கள் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மருத்துவக் கல்வி தரத்தின் உயருவதற்காகவே நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது” என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார். இந்த ஆள் புரிந்துதான் பேசுகின்றாரா? என்று தெரியவில்லை.. வடஇந்தியாவில் இன்றளவும் ஏதோ ஒரு நுழைவு தேர்வு வைத்துதான் எம்.பி.பி.எஸ்.இடம் நிரப்புகிறார்கள்..அப்படியிருக்கையில் உ.பி.கோரக்பூரில் எந்தளவு மருத்துவதரம் உயர்ந்திருக்கிறது என்பதை சென்ற மாதம் முழுதும் பத்திரிக்கைகளில் படித்தும் இப்படி பேசுகிறார் என்றால், இவர் சார்ந்த சமூக அக்கறை மட்டுமே இதில் வெளிப்படுகிறது. என்று கொதித்தார்.
அரியலூரைச் சார்ந்த அனிதா என்ற மாணவியின் எதிர்பாராத மரணம் மிகுந்த வருத்தத்திற்குரியது. ஆனால், அவரது மரணம் பல சந்தேகங்களுக்கு வழி வகுத்திருக்கிறது.
1) அங்காடியில் மூட்டை தூக்கும் ஏழை தொழிலாளியின் மகள் உச்சநீதிமன்றத்திற்கு சென்று வழக்காடுகிறார் என்றால், அவரது பின்னணியில் இருந்த நபர் யார்.. அமைப்பு அல்லது அரசியல் கட்சி எது..?
2) NEET தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 10 நாட்களுக்குப் பிறகு அவர் மரணமடைந்திருக்கிறார் ; அவர் மரணக் குறிப்பு எதையும் விட்டுச் செல்லவில்லை.. இவ்விரண்டு விஷயங்களைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, மருத்துவக் கல்லூரியில் இடம் பெற இயலாததுதான் அவர் மரணத்திற்கு காரணமா..அல்லது வேறு ஏதேனும் ஒரு நிகழ்வா என்ற சந்தேகம் எழுவது நிச்சயம் அல்லவா..?
3) உச்சநீதிமன்றத்திற்கு சென்று வழக்காடும் அளவிற்கு மனதைரியம் உடையவராயிருப்பவர் எப்படி தற்கொலை முடிவுக்கு வர முடியும்..?
4)அவர் +2 தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் அவருக்கு சென்னை IIT யில் ஏரோநாட்டிகல் என்ஜீனியரிங் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிட்டிய நிலையில் அவர் அதை நிராகரித்து மருத்துவ படிப்பையே நாடியிருக்கிறார். அப்படியிருக்க NEET தேர்வு 3 முறை எழுதலாம் என்பது அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அவர் அடுத்த முறை NEET தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரியில் எளிதாக சேர்ந்திருக்க முடியும் என்ற சூழ்நிலையில் அதற்காக அவர் எப்படி தற்கொலை செய்து கொள்வார்..?
5) உச்சநீதி மன்றத்திற்கு சென்று வழக்காடியவர், போராடியவர், தான் பாதிக்கப்பட காரணமாக இருந்த விஷயங்களை மக்கள் முன் வைத்து மக்களிடம் ஒரு விழிப்புணர்வை உண்டாக்கவே விரும்புவார். ஆனால் அவர் தனது மரணத்திற்கு காரணம் என்று எவ்வித குறிப்பையும் விட்டுச் செல்லாதது பெரும் ஐயத்தை உருவாக்குகிறது.
எனவே அவரது மரணம் தற்கொலையா.. அரசியல் மற்றும் ஏதேனும் ஒரு இலாபத்திற்காக பிறரால் தூண்டிவிடப்பட்டதா..அல்லது கொலையா.. என்பது பற்றிய விஷயங்கள் அனைவருக்கும் தெரிய வேண்டியது அவசியம்.
ஒரு முழுமையான விசாரணையின் மூலமே உண்மையை வெளிக் கொண்டுவரமுடியும். அரசு இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
அனிதாவின் மரணம் வருத்ததிற்குரியது.
There are no comments yet
Or use one of these social networks