மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த எம்.மலம்பட்டியைச் சேர்ந்தவர்கள் கதிரேசன் – மீனாட்சி தம்பதி. நடிகர் தனுஷ் சிறுவயதில் காணாமல் தங்களது மகன் என உரிமை கோரியும் பராமரிப்புத்தொகை மாதம் ரூ.65000 வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியும், மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்தத் தம்பதியினர் வழக்கு தொடர்ந்தனர். தனுஷுக்கு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது அப்போது அவர் உடலில் மச்சங்கள் அழிக்கப்பட்டதாக சர்ச்சையும் பரபரப்பும் எழுந்தது. கையெழுத்து போலி என்றும் கூறப்பட்டது. மேலூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, நடிகர் தனுஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ரஜினி/தனுஷின் பணபலம் வேலை செய்ததால் கதிரேசன் – மீனாட்சி தம்பதி தொடர்ந்த மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரல் மாதத்தில் உத்தரவிட்டது.
நீதிபதி பி.என். பிரகாஷ் கடந்த ஏப்ரல் மாதம் இவ்வழக்கில் பிறப்பித்த உத்தரவு: படினோறாம் வகுப்பு படிக்கும் வரை தங்களுடன் இருந்த மகன் காணாமல் போனதாகவும், அவர் தான் பிறகு தனுழ் என்ற பெயருடன் திரைப்படங்களில் நடிப்பதாகவும் மேலூர் தம்பதி கூறுவதை ஏற்க முடியவில்லை. இவர்கள் தரப்பில் வழக்கு தொடர எந்த முகாந்திரமும் இல்லை. 2002-2003 ஆம் ஆண்டுகளில் காணாமல் போன தங்களது மகன் கலைச்செல்வன் தான் தனுஷ் என்பதை நிரூபிக்க கதிரேசன் தம்பதியரிடம் போதிய ஆதாரம் இல்லை. கதிரேசன் தம்பதியரின் மகன் உண்மையிலேயே காணாமல் போய் இருக்கலாம். கதிரேசன் தம்பதியரின் பராமரிப்பு செலவுக்கு மாதம் 65000 வீதம் ஓராண்டுக்கு ரூ.7 லட்சத்து 85 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற தொனியில் மனு உள்ளது. என்று நீதி மன்றம் தீர்ப்பளித்தது. பின்னர், வழக்கு தள்ளுபடி ஆனதால் கஸ்தூரிராஜாவின் குலதெய்வம் கோவிலுக்கு சென்ற தனுஷ், அங்கு தங்களது கேரவன் சொகுசு வாகனத்துக்கு பொது மின்சாரத்தை திருடியதாக (வாகனம்) அரசு மின்துறை அதிகாரிகளால் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் 15000 அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டது. இப்படி 20 ஆண்டுகளாக அரசியலுக்கு வருகிறேன், போர் வரட்டும் என்று புருடா விடும் பிதலாட்ட ரஜினிக்கு மருமகனாக வாய்த்த புரட்டு தங்கமகன் தனுஷ் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டை மேலூர் தம்பதியினர் முன்வைத்து பிரச்சனையை தூசி தட்டி உள்ளனர். தற்போது மேலூர் தம்பதி, போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து நீதிமன்றத்தைத் தவறாக வழி நடத்தியதற்காக நடிகர் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, உயர் நீதிமன்றக் கிளைப் பதிவாளரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ’தனுஷ் வழக்கில் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் தனுஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில், தனுஷின் கையெழுத்து போலியாக போடப்பட்டுள்ளது. இதை உள்நோக்கத்துடன் தனுஷ் செய்துள்ளார். இவரது செயலால் நீதிமன்றத்தின் மதிப்புக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது. இதனால் போலி ஆவணம் தாக்கல் செய்தது தொடர்பாக விசாரணை நடத்தி, இதில் தொடர்புடைய அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மேல்நடவடிக்கைக்காக சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக மதுரை உயர் நீதிமன்றப் பதிவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து மேலூர் கதிரேசன் நமது சிறப்பு கப்சா நிருபரிடம், “தற்போது நீட் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட ‘அனிதா’ மரணம் அதிர்ச்சி அளிக்கிறது என்று மத்திய அரசையும் மாநில அரசையும் குறிப்பிடாமல் மொட்டையாக அறிக்கை விட்டுள்ளார் ரஜினி. தமிழக அரசு 7 லட்சம் திமுக சார்பில் 10 லட்சம் அனிதா குடும்பத்துக்கு வசூலாகி உள்ளது. இதை கண்டது எங்களுக்கு நாவில் எச்சில் ஊறியது, முன்பு வழக்கு தள்ளுபடி ஆனபோது கைச்செலவுக்கு தனுஷ் கொடுத்த கொசுறு பணம் செலவாகி விட்டது. தற்போது அனிதா குடும்பம் போல் நாங்களும் பெரிசாக எதாவது செய்து வாழ்க்கையில் செட்டிலாக பழைய வழக்கை தூசி தட்டினோம். டுபாக்கூர் அறிக்கை விடும் ரஜினிக்கு எதிராக தமிழக அரசு இந்த வழக்கை முன்னெடுத்து, எங்களுக்கு நிவாரண தொகையை பெற்றுத்தரும் என்று நம்புகிறோம்..” என்றார்.
பகிர்

There are no comments yet