Credit: Abu Haashima

அய்யா …
உங்க கைவசம் 98 எம்.எல்.ஏ.
இத்தனைக்கும் 
ஆளும் கட்சி தலை பிஞ்சுபோன கருவாடா இருக்கு.
ஆளாளுக்கு நாட்டாம பண்ணி சின்னா பின்னமாகிக் கிடக்கு.
மெஜாரிட்டி பலம் இல்லே..
அப்படி இருந்தும்
ஒரு விபத்து மாதிரி அரசியலுக்கு வந்து
அரசியலே தெரியாத
டீக்கடைக்காரனும்
எடப்பாடியும்
பரம்பரை அரசியல்வாதியான
உங்களுக்கு
தண்ணிகாட்டுறாங்க.
இல்லே … இல்லே …
பாய்லர் வெந்நியையே ஊத்துறாங்க.

என்ன காரணம் ?
வாத்தியார் பிள்ளை மக்கு என்பதுதான் காரணம்.
இங்கே சமூக வலைத் தளத்தில்
கழகத் தோழர்கள் என்னதான்
நாகரீக அரசியல்
கண்ணிய அரசியல்னு
சப்பைகட்டு கட்டினாலும்
எதிரி பலகீனப்பட்ட நேரத்திலும் கூட
அவனை வீழ்த்த முடியவில்லை என்பது
உங்களின் அரசியல் வீழ்ச்சியை காட்டுகிறது.

சாதுரியமோ
சாணக்கியத் தனமோ
இல்லாமல் அரசியல் செய்வதென்பது
இன்றைய காலத்தில் இயலாத காரியம்.

அரசியல் களமென்பது போர்க்களம்.
எதிரியை தாக்கவிட்டு தவிப்பது
கோழைத்தனம்.
உள்ளே நுழையணும்.
அதிரடியா தாக்கணும்.
எதிரிகளை துவம்சம் செய்யணும்.
நீங்களும் அப்படி செய்திருக்கணும்.

கூவாத்தூருக்கு எம்.எல்.ஏ.க்களை கடத்தியபோது அங்கேயே பெரும் தொண்டர் படையுடன் சென்று
அவர்களை மீட்டிருக்கணும்.
இல்லே …
அவர்களுக்கு எதிரா மக்கள் சக்தியை
திரட்டி இருக்கணும்.
நீங்க எதுவுமே செய்யலே.
சட்டசபையில
சட்டையை கிழிச்ச காமெடியோட சரி !

ஜெயாவின் மர்ம மரணம்
பன்னீர் தனி கோஷ்டி அமைச்சது
ஜல்லிகட்டு போராட்ட எழுச்சி
நெடுவாசல் கிளர்ச்சி
கதிராமங்கலம் சோகம்
அனிதா மரணம்
நீட் எதிர்ப்பு
எதையுமே ஆளுங்கட்சிக்கு எதிராக
பெரும் ஜனத்திரள் போராட்டமாக
மாற்றும் யுக்தி வலுவான எதிர்கட்சியாக இருந்தும் உங்களிடம் இல்லே.

ஒப்புக்கு சப்பாணியா
பூமேடை ராமையா பிள்ளை
மீட்டிங் போட்டு பேசுவது மாதிரி
ஒரு பொதுக்கூட்டம் போட்டு பேசுவது
அரசியல் சாதுரியமா ?

98 எம்.எல்.ஏ.க்களை ஜெயிக்க வச்சவன்
தமிழன்தானே.
ஏகதேசம் தமிழகத்தின் பாதித் தமிழர்கள்
உங்க பக்கம்தானே இருக்காங்க.
அப்புறமும்
தீவிர போராட்டத்தில் இறங்க ஏன் இந்த
தொடை நடுக்கம் ?

பேஸ்புக்ல தங்கள் வீரதீர பராக்கரமத்தை
பேசுறவங்க பப்ளிக்கில வந்து பாருங்க.
திமுகவுக்கு ஓட்டு போட்டவனெல்லாம்
என்ன பேச்சு பேசுறாங்கன்னு தெரியும்.
” இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான் “னு கிண்டலடிக்கிறாங்க.

நாளுக்கொரு அறிக்கையும்
பேட்டியும் கொடுக்கும்
மேல்தட்டு அரசியல் செய்துதான்
காங்கிரஸ் காணாம போச்சு.
அதே வழியைத்தான் இப்போது
நீங்களும் கடைபிடிக்கிறீங்க.
இது
எதற்குமே உதவாத அரசியல்.

சும்மா …
உதயநிதி படத்தையும்
சந்தானம் காமெடியையும்
பார்த்துகிட்டிருந்தா
தனக்குத்தானே சிரித்துக் கொண்டிருக்கலாம்.
ஒரு பத்து தடவையாவது பாகுபலி படத்தை பாருங்க.
கோழைக்கும் வீரம் வரும் காட்சியை
திரும்பத் திரும்ப போட்டுப் பாருங்க.
ராஜேஷ் குமார் கதைகளை படிங்க.
சாண்டில்யன்
கல்கி எழுதிய
கதைகளின் போர் வியூகங்களை
படிச்சுப் பாருங்க.
யூசுப் எழுதிய
சிந்து நதிக்கரையினிலே நாவலை
படிச்சுப் பாருங்க.
கொஞ்சமாவது அரசியல்லே
வீரமும் விவேகமும் வரும்.
தளபதின்னா என்ன அர்த்தம்னு தெரியும்.

இல்லே …
இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுன்னா
உங்களையெல்லாம்
ஓரம்கட்ட
பெரிய அரசியல்வாதி யாரும் வரத் தேவையில்லே.
சி.ஆர்.சரசுவதியே போதும்.

There are no comments yet