தமிழக அரசு மீது தொடர்ந்து ஊழல் குற்றசாடுகளை சமூக ஊடகமான ட்விட்டரில் மட்டும் கூறிவரும் கமல்ஹாசன், ஜல்லிக்கட்டு போராட்டம், உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகளின் போது ட்விட்டர் மூலம் குரல் கொடுக்க ஆரம்பித்து தொடர்ந்து வருகிரார். மாணவி அனிதாவின் மரணம், நீட் தேர்வு போன்றவற்றுக்க்கும் குரல் கொடுத்து உள்ளார்.. நீட் தேர்வு குறித்து குரல் கொடுது வரும் கமல் தற்போது ட்விட்டரில் “தயவாய் நீட்டி முழக்காதீர்கள், இது விடை காணும் வேளை, அனிதாவின் மரணம் போன்றவர்களுக்கு, சாவு மணி அடிப்போம், நம் சந்ததியின் எதிர்காலம். கூடி யோசிப்பொம், வெகுளாதீர்! மதி நீதியையும் வெல்லும்!” என்று பதிவு செய்துள்ள கமல் ஹாசனின் டுவீட் தான் ட்விட்டர் டிரெண்டாக வலம் வருகிறது.
அரசியல் நோக்கர்கள் கமலின் வார்த்தைவாய் கூர்ந்து கவனித்து வருகின்றனர். இரண்டொரு நாட்களுக்கு முன் ரிலீசான கதிராமங்கலம் போராளி ‘வளர்மதிக்கு’ ஆதரவாகவும். ட்வீட் செய்தார். நீட் தேர்விற்கு எதிராக அவர் வெகுநாட்களுக்கு முன்பிருந்தே தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அரசுக்கு பல கோரிக்கைகளும் வைத்தார். ஆட்சியை கலைத்து விடுங்கள் என்று ஓப்பன் ஸ்டேட்மெண்டும் விடுத்தார். ஆனால், நீட் தேர்வு கட்டாயம் என்கிற சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் தனது மருத்துவர் கானவு கலைந்த காரணத்தினால், அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி அனிதா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேலும், நீட் தேர்விற்கு எதிராக தமிழகத்தின் பல இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பல்வேறு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பள்ளி போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு, கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘லங்கேஷ் பத்ரிகே’ என்ற பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் கவுரி லங்கேஷ். பல்வேறு பிரபல ஆங்கில நாளேடுகளில் பணியாற்றிய இவர் வகுப்புவாதம், மதவாதத்துக்கு எதிராக செயல்பட்டவர்.

தொடர்ந்து பாஜகவுக்கு எதிராகவும், இந்துத்துவாவை எதிர்த்தும் பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்தார். இதனால் இந்துத்துவ அமைப்புகள் கௌரி லங்கேஷ் மீது அவதூறு வழக்குகளை தொடர்ந்தன. இந்நிலையில் செப்டம்பர் 5-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு இந்தியா முழுவதும் கடும் கண்டனக் குரல்கள் எழுந்து வருகிறது. கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: துப்பாக்கியால் ஒரு குரலை மவுனமாக்கி விவாதத்தை வெல்வதைவிட மோசமான வெற்றி எதுவும் கிடையாது. கவுரி லங்கேஷ் மறைவுக்கு வருந்திக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் கப்சா நிருபரிடம் கூறும்போது, “நான் ஒரு சினிமா கலைஞன், சினிமா என்றாலே Make believe அதாவது கதை நடப்பது போல் நம்ப வைத்து ரசிகனிடம் பணத்தை பிடுங்குவது. இந்த சினிமா பித்தலாட்டத்தில் பழம் தின்று கொட்டை போட்ட நான் பட வாய்ப்பில்லாததால், கலாசாரத்தை சீரழிக்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் தோன்றுகிறேன், சிங்கிள் பேமெண்டாக 20 கோடி கொடுத்தார்கள்.. தற்போது, சமூக அக்கறை உள்ளவன் போல் காட்டிக் கொள்ள ட்விட்டர் மிகவும் உதவியாக இருக்கிறது. நண்பர் ரஜினி புகைப்படம் எடுத்து ரசிகனை ஏமாற்றுவதுபோல், நான் புரியாத மொழிநடையில் ட்விட்டரில் பாடாவதி பாடல்களை பாடி ஏமாற்றி வருகிறேன். விரைவில் ட்விட்டர் தளத்திலேயே அரசியல் கட்சி துவங்கி, ட்விட்டரிலேயே தேர்தலில் போட்டியிட்டு, ட்விட்டரிலேயே முதல் அமைச்சர் ஆவேன். எனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்புகளுக்கு டட்விட்டரிலேயே என்னை பாலோ பண்ணுங்கள்” என்றார்.
பகிர்

There are no comments yet