Credit: Shyam Shanmugaam

அதிமுகவில் பொதுக்குழுப் பரபரப்பு படு சூடு. குடகு மலையின் தலைநகரான மடிகேரியில் கூடி “காவிரிப் பிரச்னையை எப்படித் தீர்ப்பது?” என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்கள். அவர்கள் தங்கியிருக்கும் விடுதியின் வாசலில் இருந்து மொபைலில் பேச முயன்ற சில நண்பர்களுக்குக் கிடைத்தது – “அவுட் ஆப் ரீச்” என்ற கன்னட அறிவிப்பு மட்டுமே. பொதுக்குழு முடிந்த பிறகே அவர்களது குடகு பயணம் முற்றுப்பெறும்.

பதற்றத்தை வெளிக்காட்டாமல் ஆலோசனையில் உள்ளது எடப்பாடி தரப்பு. எனக்குக் கிடைத்த தகவலின்படி இன்று இரவு எடப்பாடி, ஓபிஎஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கூடி சில அவசர முடிவுகளை எடுத்துச் சில அழைப்புகளை வெளியிட உள்ளார்க

தராசு ஷ்யாம்

ள். தற்போதைய அட்வகேட் ஜெனரல் விஜய நாராயணன் (ஏ.ஜி. ஆவதற்கு முன்) அலுவலகத்திலிருந்து முக்கிய சிவில் கோர்ட்களில் பொது கேவியட் போடப்பட்டுள்ளது. எனவே நீதிமன்றம் தலையிடுவதற்கான வாய்ப்பு இல்லை என்ற நம்பிக்கை காணப்படுகிறது.

திராவிட இயக்கங்களின் வரலாற்றை ஆராய்ந்தால் சிக்கலான சூழலில் கூடும் பொதுக்குழுவிற்கான அழைப்பிதழ்கள் நேரடியாக டெலிவரி செய்யப்பட்டு அதிருப்தியாளர்கள் வராமல் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் இந்த முறை கூரியர் தபாலில் அனைவருக்குமே அழைப்பிதழ்கள் அனுப்பப்படிருக்கின்றன. ஆனாலும் “இன்விடேஷன் தங்களுக்கு வரவில்லை” என்று டிடிவி ஆதரவாளர்கள் அவரவர் பகுதியில் நீதிமன்றத்தை நாளை அணுகும் வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக அந்தமான், கர்நாடகா, மும்பை போன்ற பகுதிகளில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் சிவில் நீதிமன்ற வழக்குத் தொடர்ந்து பொதுக்குழுவுக்குத் தடை வாங்க முயற்சிப்பார்கள் என்ற பயம் எடப்பாடி-ஓபிஎஸ் காம்போவுக்கு உள்ளது.

பொதுக்குழு தடை செய்யப்பட்டால் அது தங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று டிடிவி தரப்பு கொண்டாடும். நீதிமன்றம் தலையிட மறுத்தால் எடப்பாடி தரப்புக்கு அட்வான்டேஜ். பொதுக்குழு முடிகளை எதிர்த்து டிடிவி அணி மீண்டும் கோர்ட் படியேறும்.

வரும் வாரத்தில் தேர்தல் கமிஷன் ஏதாவது ஒரு முடிவு அறிவிக்கும் என்ற பரபரப்பும் உள்ளது. அது எத்தகையதாக இருந்தாலும், தாவா சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகும் என்ற பயமும் உள்ளது.

டிடிவி தரப்பு நினைக்கிற மாதிரி எதுவும் நடக்காவிட்டாலும் போட்டி அதிமுகவாக அந்த அணி இயங்கும். எதுவாக இருப்பினும் டிடிவி தரப்பு தற்போது தமிழகத்தில் உள்ள சசிகலா எதிர்ப்பை மறைக்க பாஜக எதிர்ப்பு அரசியலை பலமாக கையில் எடுக்கும் என்று நம்பலாம். இதைப் பயன்படுத்தி தமிழகம் முழுவதும் தனக்கான பலமான ஆதரவு தளத்தை அமைக்க டிடிவி தரப்பு முயற்ச்சிக்கும்.

பகிர்

There are no comments yet