திருச்சி: நீட் தேர்வுக்கு ஆதரவாக பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆளில்லாத பொதுக்கூட்டத்தில் தமிழிசை கூறியதாவது: “நீங்கள் கோடிக்காக நடித்தபோது எங்களைப்போன்றோர் தெருக்கோடியில் பணியாற்றிக் கொண்டிருந்தோம்.

ஒரு சிலரைப் பார்த்துவிட்டு நீங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறீர்கள். நான் பல்லாயிரக்கணக்கான மாணவர்களைப் பார்த்துவிட்டு நீட் வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். ஆனால், நீட் குறித்து ஒரு நடிகருக்குத் தெரியுமா இல்லை ஒரு மருத்துவருக்குத் தெரியுமா? உண்மைநிலையை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நிலையில் நாங்கள் இருக்கிறோம்.

ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் கிராமப்புறத்துக்கு சரியான பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது. நீட் தேர்வு என்றால் என்னவென்று தெரியாத 6-ம் வகுப்பு மாணவர்களைக் கூட கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்துக்கு தூண்டி வருகின்றனர்” என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டினா

மேலும் அவர் பேசும் போது பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ் ஆட்சி மொழியாகும் தனியார் மருத்துவ கல்லூரியில் ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க உதவியர் மோடி. ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட சொல்லமுடியாத மோடியை மோசடி செய்பவர் என கூறுகின்றனர்.

பிரதமர் மோடியை பற்றி விமர்சிக்க திமுகவுக்கு உரிமை இல்லை . 18 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த தி.மு.கவால் கச்ச தீவை மீட்க முடியவில்லை. திருச்சியில் எதிர்கட்களின் சார்பில் நடைபெற்ற கூட்டம் எதிர்மறை அரசியல் எதிர்ப்பு கூட்டம் என்று கூறினார்.

There are no comments yet