போட்டோ தாங்க்ஸ் : தி ஹிந்து

சென்னை: நீட் தேர்வு சர்ச்சை அரசியல் தலைவர்களிடையே கருத்து மோதல்களை உருவாக்கிய நிலையில் திமுக அமைப்புச் செயலாளர், எம்.பி., ஆர்.எஸ்.பாரதி தமிழிசை மற்றும், கிருஷ்ணசாமி ஆகியோருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

நெல்லையில் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி எம்.பி. கூறியதாவது: திமுக தலைவர் கருணாநிதியால் டாக்டரான தமிழிசை சவுந்தரராஜன் தற்போது நீட் எழுதுவாரா? இதே போல் நீட் தேர்வு விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படும் டாக்டர் கிருஷ்ணசாமி தற்போது நீட் தேர்வு எழுதத் தயாரா? இதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் நவம்பர் 17க்குள் நடைபெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு குறித்து தமிழக அரசு கேள்வி எழுப்பியுள்ளது, இதனால் உச்ச நீதிமன்றம் தமிழக அரசு மீது கோபமடைந்துள்ளது. நாங்கள் ஏற்கெனவெ கேவியட் மனு தாக்கல் செய்துள்ளோம். எனவே டிசம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும். இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தலை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உள்ளாட்சியைப் பொறுத்தவரை சின்னம் ஒரு பொருட்டல்ல, தமிழகத்தில் எப்போது தேர்ந்தல் வந்தாலும் திமுக வெற்றி பெறும். இவ்வாறு கூறினார் ஆர்.எஸ்.பாரதி.

இதையடுத்து எங்கே நம்மையும் நீட் தேர்வு எழுத சொல்வார்களோ என்று பாமக தலைவர் ராமதாசும், அவரது மகன் அன்புமணி ராமதாசும் தாங்கள் வெட்டிப் போட்ட மரங்களில் தலை மறைவாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

There are no comments yet