தோழர். ஆலஞ்சி

Credit: தோழர். ஆலஞ்சி

காலதாமதமாகும் எந்த செயலும் பயனற்று போகும் என்பதற்கு மிக சமீபத்திய உதாரணம் தினகரன்.. எந்தவொரு முடிவையும் ஆய்ந்து செயல்படுத்தாமல் போனால் ..இதுதான் கதி..
கையில் வைத்திருந்த கடைசி ஆயுதமும் பறிக்கப்பட்ட நிலையில் பரிதாபகரமாய் நிற்கிறது சசிகலா வகையறா..
..
அதிமுகவினர் கொள்கை அடிப்படையிலோ அல்லது விசுவாசத்திலோ அங்கே யாரும் இல்லை.. எப்படியாவது சம்பாதிக்கலாம் என்ற ஒற்றை குறிக்கோளில் இணைந்தவர்கள் மகோரா காலத்திலேயே கவர்ச்சியை மூலதனமாக்கி ஒருவகை மாயதோற்றத்தை மனதில் விதைத்து வந்தவர்கள் காலபோக்கில் தெளிய தொடங்கியபோது பணம் சம்பாதிக்கும் வழியாக அரசியலை முன்னெடுத்தார்கள்.. அதில் ருசிகண்டவர்கள் .. விசுவாசம் நம்பிக்கை.. கொள்கை இவையெல்லாம் எதற்கும் உதவாதென்று முடிவெடுத்ததால் யார் பக்கம் வேண்டுமானாலும் தாவுகிறார்கள் ..
..
கட்சியா ஆட்சியா என்கிற நிலை வந்த போது கட்சியை காப்பாற்றியிருக்கவேண்டும்.. 1987ல் ஜானகி ஜெயா மோதிக்கொண்டபோது கட்சி வந்தால் ஆட்சிக்கு எப்போது வேண்டுமானாலும் வந்துக்கொள்ளலாமென்ற சோவின் யோசனையை ஏற்றதால் தான் ஜெயலலிதாவால் சிலகாலம் நிற்க முடிந்தது.. ஆட்சியை கைப்பற்ற நினைத்திருந்தால் கட்சி காலாவதியாகி இருக்கும்..
..
சசிகலா தினகரன் செய்ய தவறியது இதுதான்.. எடப்பாடிக்கு எதிராக வாக்களித்த பன்னீர் கோஷ்டியை கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக கூறி பதவி நீக்கம் செய்திருந்தால் கட்சி கட்டுபாட்டில் இருந்திருக்கும்.. இரண்டாவதாக சசிகலாவையும் தினகரனையும் விலகி வைத்தால் இணையலாமென்ற பன்னீரின் கோரிக்கை ஏற்ற போதே ஆட்சியை ஆட்டம் காண வைத்திருக்கவேண்டும்.. ஆட்சியை காப்பாற்ற நினைத்து கடைசியில் கைபிடி நழுவுகிற நிலைக்கு வந்து நிற்கிறது....
அதிமுககாரர்களை பணம் பதவியை காட்டி விலைக்கு வாங்கிவிடலாமென்ற அடிப்படை கூட தெரியாமல் அரசியல் செய்தது ஏற்கனவே பதவியை,பணத்தை,காட்டி வழிநடத்தியது மறந்து போய்விட்டதோ என்னவோ.. இப்போது சசி&தினகரனிடம் இருக்கும் கடைசி துருப்புசீட்டு ஆட்சியை கலைக்க பயன்படவேண்டுமே தவிர இன்னமும் காலம் தாழ்த்துவதென்பது ஆழ புதைக்குழியில் அமர்ந்து தானே மண்ணை அள்ளி போட்டு மூடி கொள்வதற்கு சமம்..
காரணம் இப்போது உடனிருப்பவர்கள் நீண்டநாட்கள் நம்பிக்கையோடிருப்பார்களென நம்ப முடியாது காரணம் இவர்கள் யாருக்கும் கட்சி கொள்கை விசுவாசம் நம்பிக்கை இவையெல்லாம் என்னவென்றே தெரியாது..
விரைந்து முடிவெடுக்க வேண்டும்.. தனி அணியாக செயல்படுவதாக சபாநாயகருக்கு அறிவித்துவிட்டால் அவரால் தகுதிநீக்கம் செய்ய முடியாது.. பின் சட்டசபையில் பார்த்துக்கொள்ளலாம்….

பகிர்

There are no comments yet