Credit: Poovannan Ganapathy
நீட் வெறியர்களில் முக்கியமான ஒருவராக விளங்குபவர் பத்திரிக்கை ஆசிரியர் மாலன். ஆனால் அதற்காக கூசாமல் பொய்களை,பாதி உண்மைகளை கட்டுரையாக எழுதி மக்களை ஏமாற்றும் அளவுக்கு செல்வார் என்பதை எதிர்ப்பார்க்கவில்லை.நீட் தரும் நன்மைகள்,அதன் உண்மைகள் என்று அச்சம் தவிர் தினமணியில் கட்டுரை எழுதி இருக்கிறார்.ஆனால் அதில் உண்மை மிக மிக அரிதான ஒன்றாக இருப்பது மிகுந்த வருத்தத்தை தருகிறது
மத்திய அரசு நடத்தும் நுழைவு தேர்வுகள் பெண்களுக்கு,இட ஒதுக்கீடு பெறும் சாதிகளுக்கு எதிராக இருப்பதை தெளிவான சான்றுகளோடு பல முறை விளக்கினாலும் மறுபடியும் முயலுக்கு மூன்று கால் என்று அவர் வாதிடுவது விந்தை தான்.மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவமாணவிகளை பற்றிய முழு தகவல்களை அரசு வெளியிட்டால் முகமூடி கிழிந்து பொய்கள் வெளியாகி விடும் என்பதால் அரைகுறை தகவல்கள் மற்றும் பொய்களை அரசும் ,நீட் வெறியர்களும் பரப்புகிறார்கள்
சென்ற ஆண்டு சேர்ந்த பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு,இந்த ஆண்டு சேர்ந்த பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு என்ற அடிப்படை தகவல் கூட இன்னும் வெளிவராத நிலையில் மாவட்டம் சார்ந்த தகவல்கள் முன் நிறுத்தப்படுவதால் பின் உள்ள காரணங்களை புரிந்து கொள்வது கடினம் அல்ல .மத்திய அரசு நடத்தும் IITJEE ,AIIMS நுழைவு தேர்வுகளில் பெண்கள் முறையே 8 சதவீதம் மற்றும் 20 சதவீத இடங்களை பெறுகிறார்கள்.மத்திய அரசு தமிழ்நாடு போல பிளஸ் டூ அடிப்படையில் மாணவ மாணவர்களை சேர்த்தால் ஐம்பது சதவீத இடங்களை இந்த ஆண்டே அவர்கள் பெறுவார்கள் .
பிளஸ் டூ மூலம் மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படும் முறை இருந்த தமிழகத்தில் பெண்கள் ஆண்களுக்கு இணையாக மருத்துவம்,பொறியியல் கல்லூரிகளில் பல பிரிவுகளில் இடங்களை பிடித்தார்கள்,நுழைவு தேர்வுகள் அதுவும் மத்திய அரசு நடத்தும் நுழைவு தேர்வுகள் பெண்களுக்கு எதிரானவை என்பதை ஆயிரம் சான்றுகள் தெளிவாக விளக்குகின்றன.இன்னும் சில ஆண்டுகளில் AIIMS ,IIT போல மருத்துவ கல்லூரிகளும் மாறி விடும் என்ற உண்மையை எதிர்கொள்ளாமல் அச்சம் தவிர் என்று எழுதுவதை விட பொய்மை உண்டோ
அடுத்து இட ஒதுக்கீடு பற்றி பல பொய்களை அடித்து விடுகிறார். பிளஸ் டூ மூலம் மாணவமாணவிகள் சேர்க்கப்பட்ட போது இருந்ததை விட இப்போது யாருக்கு அதிக இடங்கள் என்பதை தெளிவாக மறந்து, மறைத்து விடுகிறார்.மத்திய அரசு தொகுப்பில் உள்ள 400 க்கு அருகிலான இடங்களில் பெரும்பாலான இடங்கள் இட ஒதுக்கீடு பெரும் சாதிகளின் கீழ் வராத உயர்சாதிகளுக்கு தான் செல்லும்.அவர்கள் மத்திய அரசு தொகுப்பின் கீழ் வரும் இடங்களுக்கு போட்டி போட உதவும் பாட திட்டத்தில் படிப்பது தான் அதிகம்.இதனால் தமிழக அரசு கோட்டாவான 85 சதவீத இடங்களில் அவர்கள் இடங்களை பிடிப்பது வெகு குறைவு.
ஆனால் இந்த ஆண்டு இரண்டு சதவீத இடங்களில் இருந்து பத்து சதவீத இடங்களுக்கு சற்றே குறைவான இடங்கள் அவர்களுக்கு கிடைத்துள்ளது.இதனை அழகாக மறைப்பதன் பின் உள்ள மர்மம் என்ன .இட ஒதுக்கீடு பெரும் சாதிகளுக்கு இழப்பு இல்லை என்று எப்படி கூசாமல் பொய் சொல்ல முடிகிறது என்று தெரியவில்லை.
பி சி இஸ்லாமியர்களை தவிர்த்து இட ஒதுக்கீடு பெரும் அணைத்து சாதியினருக்கும் இடங்கள் சென்ற ஆண்டை விட குறைந்துள்ளன.எஸ் சி -அருந்ததியினர் இடங்கள் நிரம்பவில்லை.அவை உள் ஒதுக்கீடு இடங்கள் என்பதால் பட்டியல் இனத்தின் கீழ் உள்ள மற்ற சாதிகளுக்கு கொடுக்கப்பட்டது.மாற்று திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு இடங்களில் பெரும்பான்மை இடங்கள் நிரம்பவில்லை .இதனை மறைப்பதை விட கயமை உண்டோ .பி சி இஸ்லாமியர் இடங்களிலும் பல இடங்கள் கேரளா மாநில இஸ்லாமியர்களுக்கு சென்றிருக்க வாய்ப்புகள் மிக அதிகம்.அரசு இந்த ஆண்டின் மாணவர் சேர்க்கையை முழுமையாக ஆராய்ந்தால் பல உண்மைகள் புலப்பட கூடும்.
சென்ற ஆண்டு சி பி எஸ் யீ பாடத்திட்டத்தில் படித்து தமிழ்நாடு அரசு கோட்டாவில் இடம் பிடித்தவர்கள் வெகு வெகு அரிது.ஆனால் இந்த ஆண்டு நீட் வந்த பிறகு மூன்றில் ஒரு பங்கு இடங்கள் அவர்களுக்கு தான். நீட் தொடர்ந்தால் இது அதிகரித்து கொண்டே செல்லுமே தவிர குறையாது.படிக்கும் மாணவமாணவிகளில் நான்கு சதவீத மாணவமாணவிகள் கூட சி பி எஸ் யீ பள்ளிகளில் படிக்கவில்லை.ஆனால் மூன்றில் ஒரு இடம் சி பி எஸ் யீ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு தான் கிடைத்துள்ளது.இதனை நன்மையாக பார்க்க உள்நோக்கம் உள்ள தமிழக அரசு,தமிழ்நாட்டு மக்கள்,சமசீர் கல்வி மீது மிகுந்த வெறுப்பு கொண்ட ஒருவரால் தான் முடியும்.
மாவட்ட வாரி இடங்களை வைத்து நடக்கும் பிரச்சாரம் கோயபெல்ல்ஸ் பிரச்சாரத்துக்கு இணையானது அரியலூர் ,மாவட்டத்தில் இருந்து 21 பேர் என்று சொல்வது நீதித்துறையின் அரராஜகத்தால்,மத்திய அரசின் அநீதியினால் உயிரை இழந்த அனிதாவை கிண்டல் செய்ய சொல்லப்படும் ஒன்று .ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்த பிரிவில் இருந்து,எந்த பாடத்திட்டத்தில் இருந்து ,எந்த பள்ளியில் இருந்து படித்த மாணவமாணவிகள் இடம் பிடித்தார்கள் என்று பார்த்தால் இப்படி பொய்யாக பிரச்சாரம் செய்ததை எண்ணி கொஞ்சம் அறவுணர்வு இருந்தாலும் வருத்தம் வரும்
There are no comments yet
Or use one of these social networks