Credit: தோழர். ஆலஞ்சி 

ஜனநாயக மரபுகள் மீறப்படும் போது மட்டுமே,நீதிமன்றம் தலையிடவேண்டும் ஆனால் நீதிமன்றங்கள் தான் வழிநடத்துமென்கிற நிலை சரியான ஜனநாயக வழிமுறையாகாது..
..
நீதிமன்றத்தில் எல்லாவற்றுக்கும் தீர்வென்கிற நிலை ஏற்பட்டால் பிறகெதற்கு சட்டமன்ற ஜனநாயகம்.. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசெதற்கு மக்களாட்சியின் தத்துவமே சிதைக்கபடுகிறது ..நீதிமன்ற தலையீடென்பது ஜெயலலிதா அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு அதிகமானது எந்தவொரு முடிவையும் எதிர்ப்பதும் கடைசியில் நீதிமன்றம் தலையிட்டு குட்டு வாங்கி செயல்படுத்துவதும்.. அரசை ..
அரசின் தலைவரின் பதவியை பறித்து கேவலப்படுத்துவதும் சர்வசாதாரணமானது ..
எல்லா எல்லை மீறல்களையும் ஜெயலலிதா செய்தார் எதிர்கட்சிகள் சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தை நாடவேண்டிவந்தது .. அது தொடர்ந்து இப்போது அரசை செயல்படுத்த கூட நீதிமன்றம் தலையிட வேண்டிய பரிதாபகரமான நிலை..
..
சட்டமன்றத்தில் தனியாக ஒருவர் கட்சி மாறினால் அல்லது கொறடா உத்தரவை மீறினால் நீக்கலாம் ஆனால் தனி அணியாக செயல்பட்டால் அவர்களை அங்கரீப்பதுதான் ஜனநாயக மரபு ..இதற்கு நிறைய முன்னுதாரணங்கள் இருக்கிறது.. தேமுதிக வினர் அணி மாறி செயல்பட்டபோது ஜெயலலிதா கண்ணசைவை ஏற்று சபாநாயகர் அனுமதிக்கவில்லையா..
அதை செய்ய தவறுகிற போதுதான் நீதிமன்றம் தலையிடவேண்டிய நிலை ஏற்படுகிறது..
..
தமிழகம் இதுவரை கண்டிராத கேவலங்கள் அரங்கேறுகிறது.. ஜெயலலிதா என்ற தனிநபரின் கையாலாகாதத்தனம் ..
தான் செய்வதை சரியென நம்பவைக்கிற சர்வாதிகாரத்தனம்.. முட்டாள்களை வைத்து பொம்மலாட்டம் காட்டி கயிறு நழுவியபோது ஆட்டம் மவுசிழந்ததைப்போல அதிமுக நகைப்பிற்கு இடமாகி நிற்கிறது.. எந்தவொரு கொள்கையுமில்லாமல் திமுக எதிர்ப்பையும் எம்ஜிஆரின் கவர்ச்சியையும் நீண்டநாட்கள் கொண்டுசெல்ல முடியாதென்கிற யதார்த்தம் தெரியாமல் போனதால் சிக்கி சின்னாபின்னமாகியது அதிமுக..
..
ஆளுமை இல்லாத தலைமையால் தனிநபர் துதிபாடலை, கேட்டு கேட்டு இதுதான் சிறந்தொரு தலைமைத்துவமென நம்பி சில அறிவிலிகளின் துதிபாடல்கள்..ஒரு கட்சியை ஆழ புதைத்திருக்கிறது.. ஜனநாயக கட்டமைப்பில்லாத இயக்கம் சரிந்துவிடுமென்பதற்கு அதிமுக எடுத்துக்காட்டாய் விழங்குகிறது.. திமுகவின் ஜனநாயக நடவடிக்கைகளை உட்கட்சி தேர்தலில் நடைபெறும் கைகலப்புகள் சலசலப்புகளை கேலி செய்தவர்கள்..அது ஜனநாயக உயிர்ப்பென்பதை அறியாமல் போனார்கள் ..
திரு.சேஷன் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த போது இந்தியாவில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி (கிளை அமைப்புகளுக்குகூட) இயங்குகிற கட்சி திமுக மட்டும்தான் என்றார்.. தேர்தல் ஆணைய விதிகளின்படி திமுக மட்டுமே கட்சியாக அங்கரீக்கவேண்டுமென்றார் ..
..
ஜனநாயகத்தின் வேர் உட்கட்சி ஜனநாயகத்தில் இருக்கிறது ..
கட்சியின் பொதுக்குழுவில் யார் வேண்டுமானாலும் பேசலாம் மாற்றுகருத்தை சொல்லலாம்.. வீரபாண்டி, கோ.சி.மணி..
நெல்லிக்குப்பம், ..என எல்லோருமே மாற்று கருத்தை சொல்லியிருக்கிறார்கள்..தலைமை அதற்கு விளக்கம் தந்திருக்கிறது சில யோசனைகளை ஏற்று தீர்மானத்தில் திருத்தம் செய்திருக்கிறது.. வெறுமனே வடை பொங்கல் சாப்பிட்டு தலையாட்டி வருவதல்ல பொது செயற்க்குழு கூட்டங்கள்.. உட்கட்சி ஜனநாயகமே கட்சியின் வேரில் நீர்பாய்ச்சும்..
தழைத்தோங்கும்..
இதெல்லாம் அதிமுகவில் இல்லாததால் தான்
என்னவென்றே அறியாததால்தான் இன்று அழிவின் விழும்பில் நிற்கிறது..

பகிர்

There are no comments yet