புது டெல்லி / சென்னை: பல்வேறு துறைகளில் சாதனை புரிவோருக்கு பல்கலைக்கழகங்கள் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது தொன்று தொட்டு நடைபெறும் நிகழ்வாகும். பல பள்ளிகள், பொது மற்றும் தனியார், அவர்கள் கௌரவ டாக்டரேட் டிகிரி வழங்குவதன் மூலம் சமூகத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்யும் நபர்களை அங்கீகரிக்கின்றனர். புகழ்பெற்ற தத்துவஞானிகள், இசைக்கலைஞர்கள், அரசியல்வாதிகள், ஆசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஆகியோர் பெரும்பாலும் தங்களின் சிறந்த சாதனைகள் மற்றும் சிறந்த நன்மைகளை வழங்குவதற்கான சாதனைகளைப் பெறுகின்றனர். சிலர் பணம் கொடுத்து வாங்குவதாகவும் கூறப்படுவதுண்டு. டாக்டர் பட்டம் பெற்ற அரசியல்வாதிகள் நர்ஸ் கேட்பதாக பல்வேறு நகைச்சுவைகளும் பத்திரிகைகளில் வெளிவந்து நையாண்டி செய்யப்படுவது உண்டு.

இந்தியாவில் பல சினிமா கலைஞர்கள் அரசியல்வாதிகள் டாக்டர் பட்டம் வாங்கியுள்ளனர். தமிழக முதல்வர் சி.என்.அண்ணதுரைக்கு அண்ணாமலைப் பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கியது தொட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் டாக்டர் பட்டம் பெற்ற வரலாறு உண்டு. பின்வரும் பெரும் பட்டியல் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றவர்களுடையதாகும்.
* சென்னை மேயர் மா. சுப்ரமணியம் ஹரியானா மாநிலத்தின் ஒரு பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். (2012)
* நடிகர் தமன்னா CIAC கவுரவ டாக்டர் பட்டம் ஜூலை 22 2017
* நடிகர் ஷாரூக் கான் உருது மொழியை பிரபலப் படுத்தியதற்காக மவுலானா ஆசாத் பல்கலை டாக்டர் பட்டம். (2016)
* நடிகர் பிரபு சதயபாமா பல்கலை டாக்டர் பட்டம் மே 2011
* நடிகர் விஜய் 2007ல் டாக்டர் பட்டம் பெற்றார்.
* நடிகர் கமல்ஹாசன் டாக்டர் பட்டம் ஜேப்பியார் பல்கலை 2017
* நடிகர் நாசர் வேல்ஸ் பல்கலை டாக்டர் பட்டம் மே 2016
* செயல் தலைவர் ஸ்டாலின் டாக்டர் பட்டம் அண்ணா பல்கலை
* இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் டாக்டர் பட்டம் அண்ணா பல்கலை
* கலைஞர் கருணாநிதி அண்ணாமலைப் பல்கலை டாக்டர் பட்டம்
* நாவலர் நெடுஞ்செழியன் மதுரைப் பல்கலை டாக்டர் பட்டம்
* பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா எஸ்.ஆர்.எம். பல்கலை டாக்டர் பட்டம்
* ஜெ.ஜெயலலிதா 6 டாக்டர் பட்டங்கள் பல்வேறு பல்கலைகள்
* நடிகர் அமிதாப் பச்சன் எகிப்து அகடமி ஆப் ஆர்ட்ஸ் டாக்டர் பட்டம்
* ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகத் பசு பாதுகாவல் டாக்டர் படடம்
* கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் டாக்டர் பட்டம் பெங்களூரு பல்கலை
* பழம்பெரும் நடிகை பி.பானுமதி ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம்
* தங்க மங்கை பி.டி.உஷா டாக்டர் பட்டம் ஐஐடி கான்பூர்
* கவிஞர் வைரமுத்து கோவை பாரதியார் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம்
* நடிகர் மோகன்லால் ஸ்ரீ சங்கரா சமஸ்கிருத பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம்
* நடிகை மனோரமா அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம்
* நடிகர் சிவாஜி கணேசன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம்

டாக்டர் பட்டமும் தமிழக அரசியலும் தமிழக அரசியல்வாதிகளுக்கு பட்டங்கள் என்றாலே, ஒரு கிளுகிளுப்புதான், கிளர்ச்சிதான், மயக்கம்தான், கிறக்கம்தான் மாற்றிமாற்றி கொடுத்துக் கொள்வதில் அவர்களுக்கு இணை அவர்கள் தாம். அதிலும் டாக்டர் பட்டம் என்றால் அவ்வளவு தான் உயிரைக்கூட விடுவார்கள். கஷ்டப்பட்டு படித்து பெறும் டாக்டர் பட்டம்: ஒரு மாணவன் கஷ்டப்பட்டு, பட்டம் பெற்று, முதுநிலை பட்டம் பெற்று, எம்.ஃபில் செய்து பிறகு ஆராய்ச்சி செய்து பிஎச்.டி பட்டத்தைப் பெறுகிறான். இதில் கெயிட் படுத்தும் பாடுவேறு உள்ளது. பல நேரங்களில், அத்தகைய மாணவர்களை வீட்டுவேலை எல்லாம் செய்ய பணித்துள்ளார்கள். மாணவிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். கொடூரமான உச்சக்கட்டநிலை என்னவென்றால், ஒருதடவை படுக்கைக்கு வந்தால்தான், கையெழுத்துப் போடுவேன் என்று மிரட்டிய கெய்டுகளும் இருக்கிறார்கள். அவ்வாறு நொந்து, சுண்ணாம்பாகி பாடம் பெறுகின்ற நிலையில், இன்று கேவலம், யார்-யாரெல்லாம் எந்த கஷ்டமும் பெறாமல் டாக்டர் பட்டத்தைப் பெற்ருச் செல்வதில் எந்த கௌரவமும் இல்லை. உண்மையில் அவ்வாறு பட்டங்களை அள்ளித்தருவதனால், கஷ்டப்பட்டு பெறுபவர்கள் நொந்து போவார்கள், மிகவும் மனது கஷ்டப்படுவார்கள்.

நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அள்ளித்தரும் டாக்டர் பட்டங்கள்: நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் புற்றீசல் போலக் கிளம்பிவிட்டப் பிறகு, டாக்டர் பட்டத்தின் கதி, கேவலமாகி விட்டது, சினிமா நடிகர், நடிகை என்று எல்லோருக்கும் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்[4]. அதிலும் டி.எஸ்.சி என்ற டாக்டர் பட்டம், மிகவும் கௌரவமான, அதிகம் படித்துள்ளவர்களுக்கு, தலைசிறந்த ஆராய்ச்சியாளர்களுக்கு, தகுதி, திறமை, அனுபவம் முதலியவற்றைப் பார்த்து, பரிந்துரை செய்யப்பட்டு கொடுக்கப்படும். ஆனால் சமீபத்தில், ஏதோ சம்பந்தமேயில்லாமல் அத்தகைய பட்டம் கொடுத்ததில், வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

முதலமைச்சர், கவர்னர் முதலியவர்களின் தனி டாக்டர் என்ற தகுதியில் கொடுக்கப்பட்டப் பட்டங்கள்: விரும்புவோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் (டி.எஸ்சி.) வழங்குவதா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆளுநரின் தனி டாக்டர், முதல்வரின் தனி டாக்டர் என்ற ஒரே காரணத்திற்காக இலவசப் பொருட்களை வாரி வழங்குவது போல கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்குவதா என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது[6]. முதல்வரின் தனி டாக்டர் கோபால் மற்றும் ஆளுநரின் டாக்டர் உள்ளிட்ட 7 டாக்டர்களுக்கு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சமீபத்தில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது. சென்னை பல்கலைக்கழகத்தின் 150 வருட நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவிற்குக் கொடுத்தது மிகவும் வருத்தப் படவேண்டிய விஷயம் தான் ஒரு விஞ்ஞானி, படிப்பாளி, பண்டிதன் என்று இல்லாமல் இப்படி கூட்டணி கட்சியின் தலைவர் என்ற தகுதியில் கருணாநிதி பரிந்துரைத்து, அதை செனேட்டும் ஒப்புக் கொண்டு கொடுத்துள்ளது மிகவும் கேவலமான செயல்தான்.

இதை கண்டிக்கும் வகையில் மோடி வெளியிட்டுள்ள கப்சா அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இனி கவுரவ டாக்டர் பட்டம் கொடுப்பதற்கு முன் அந்த லிஸ்டையும் பிரபலமானவரின் தகுதிக்கு ஏற்ப ஒரு பெரும் தொகையையும் பாஜக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும், நானும் அமித் அண்ணனும் அவற்றை பரிசீலனை செய்து தனியாக ஒரு ‘நீட்’ தேர்வு நடத்தி பொருத்தமானவர்களை தேர்ந்தெடுப்போம். தேர்வானவர்கள் தேர்தல் காலங்களில் எங்கள் அடிமைகளாக பாஜக ஆதரவு பிரசாரம் செய்ய வேண்டும் அவ்வப்போது நாங்கள் கொண்டு வரும் திட்டங்கள் பற்றி எழும் சர்ச்சைகளை திசை திருப்ப டாக்டர்கள் கிருஷ்ணசாமி, தமிழிசை போன்று உதவி புரியவேண்டும். மீறுவோர் மீது ரெய்டு பாயசம் போடவும் அளிக்கப்பட்ட டாக்டர் பட்டத்தை திரும்ப பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கடுமையாக கூறப்பட்டுள்ளது.

மற்ற ஆதாரங்கள்Academic degradation
பகிர்

There are no comments yet