Credit: Elango Kallanai

ஆட்சி கலைப்பு முன்பே திட்டமிடப்பட்டது. அதைத் தவிர்க்க பாஜக ஆர்வம் காட்டியது. அதன் பயனாக எடப்பாடி பழனிச்சாமி ஆறு மாதம் தொங்கினார். மோதியின் விருப்பம் பன்னீரை வைத்து பாஜகவை வளர வைப்பது தான். அதற்கு முட்டுக்கட்டையாக சசிகலா இருப்பார் என்று அவரை உள்ளே வைத்தார்கள். அடுத்த பூதம் தினகரன் வந்தது. திமுகவை வரவிடக்கூடாது என்பது மட்டும் தான் தமிழக பாஜகவின் நிலைப்பாடு. பதவிகளை வைத்துக் கொண்டு பலத்தைப் பிரயோகித்தும் பார்த்து வெற்றி பெற முடியவில்லை. அரசியலில் தமக்கு எதிர்காலம் வேண்டும் என்று நினைத்த ஒரு கூட்டம் தினகரன் பக்கம் நின்று கொண்டது. அதன் விளைவாக ஆட்சி கலைப்பு இப்போது நிஜமாக திரண்டு வருகிறது என்றே கணிக்கிறேன். இதேயளவு நெருக்கடி இருந்திருந்தால் ஸ்டாலின் சமாளித்திருப்பாரா? அல்லது மத்திய அரசுடன் இணங்கிப் போவதே மாநிலங்களுக்கு நல்லது என்று பேசியிருப்பாரா என்பது அனுமானத்தால் விளக்க முடியாது. எல்லோருக்கும் முட்டும் எல்லை தெரிந்துவிட்டது. இனி முறுக்கினால் உடையத் தான் செய்யும் என்பது விளங்குகிறது. தன்னுடைய அணிக்கு ஒரு கொறடாவை போட்ட பின்னர் தினகரன் ஆட்சிக் கலைப்பை கையில் எடுத்துக் கொண்டார். நேற்றுவரை முறுக்கிய ஆட்கள் மழுப்பலாக பேசத் துவங்கிவிட்டார்கள். 


ஜூன் மாதம் என்னிடம் சொன்னவர்கள் அக்டோபர் பதினேழுக்குள் இவ்வாட்சி தினகரனால் நீக்கப்படும் என்றனர்.  வைகோவின் திராவிட உரை என்பது தமிழகம் பாஜகவை ஏன் ஏற்காது என்பதைப் பற்றிய தெளிவைத் தருகிறது. அண்ணாவின் பிறந்தநாளில் தமிழ்நாடு தன்னுடைய அடையாளம் பற்றிய தெளிவை மோதி மாதிரி ஒரு ஆளுக்கு சொல்வது இனிப்பாகத் தான் இருக்கிறது.
எச் ராஜா சாரணர் தலைவர் பதவி வாங்கியுள்ளார். தமிழிசை அக்கா பாரத் பெட்ரோலியப் பதவி வாங்கியுள்ளார். இதெல்லாம் டம்மிகள் என்பதைத் தான் இது காட்டுகிறது. பன்னீர் செல்வம் துணை முதல்வர் பதவி வாங்கி ஒரு மாதத்திலேயே இழக்க இருக்கிறார். சமாதானத் தூதுகள் இனி பலனளிக்காது என்றே தோன்றுகிறது. அதிமுக திமுக களத்தை தங்கள் பக்கம் வளைக்க முடிவெடுத்துவிட்டனர்.
நல்ல முடிவை எடுக்க துணிந்துவிட்டதற்காக தினகரனை பாராட்டாமல் இருக்க முடியாது. அதிலும் அவரை சிறைக்கு அனுப்புவோம் என்று கடைசி வரை மிரட்டுகிறார்கள். 

தமிழக அரசியலில் இந்தத் தீபாவளிப் பட்டாசு ஆட்சிக் கலைப்பு தான். பாஜக முகத்தில் கரி பூச இன்னொரு தேர்தல் வருகிறது. கவர்னர் ஆட்சியை ஒரு வருடம் நீடிக்க வைக்க முயல்வார்கள். ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க இன்னும் கொஞ்ச நாள் பொறுக்கத் தான் வேண்டும்.
தமிழ் நிலம் காவிகளைப் பந்தாடுவதை மீண்டும் பார்க்கலாம்.

பகிர்

There are no comments yet