புதுடில்லி / சென்னை: பிரதமர் மோடிக்கு இன்று 67வது பிறந்தநாள் என்பதால், அதனை உற்சாகமாகக் கொண்டாட பாஜகவினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதையொட்டி பா.ஜ.க.வினர்,பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்குமாறு நாட்டில் பல இடங்களில் துண்டு பிரசுரம் வழங்கி அழைப்பு விடுகின்றனர் பிரதமர் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் உட்பட ஏராளமான பாஜகவினர் டெல்லியின் இந்தியா கேட், மும்பையின் ஜூஹூ கடற்கரை உள்பட 15 சுற்றுலாத் தலங்களில் இரண்டு மணி நேரம் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
தமிழத்தில் மோடியின் பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாட இபிஎஸ் ஓபிஎஸ் கூட்டணி முடிவு செய்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ”தங்களுக்கு எனது இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்தையும், இந்திய நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பணியாற்ற தங்களுக்கு வலிமையை அளிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்”
உங்கள் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த வருடங்களில் எங்களது மறைந்த தலைவி ஜெயலலிதாவுக்கு நடித்தது போல் கோவில்களில் தீ மிதித்து மண் சோறு சாப்பிடுவோம். நீங்கள் விரும்பினால் டெல்லி வந்து உங்கள் வீட்டுக்கு முன்பும் ரோட்டில் படுத்து அங்கபிரதட்சணம் செய்கிறோம் என்று கூறியுள்ளனர்.
இதெல்லாம் ஜெயலலிதாவுக்கு மட்டுமே செய்து வந்தோம், இப்போது அவர் இல்லாததால் பழக்கத்தை விட முடியவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்த்துள்ளது. இதனால் மற்ற ஜெயலலிதா அபிமானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்
There are no comments yet
Or use one of these social networks