சென்னை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் 6வது நாளாக நடைபெறும் புஷ்கரத் திருவிழாவில் இன்று காலை தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டு வழிபாடு செய்தார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறைதினம் என்பதால் வெளியூரிலிருந்து பக்தர்கள் பல்லாயிரக் கணக்கானோர் குவிந்துவிட்டனர். வாகன நெரிசலால் நகரமே ஸ்தம்பித்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை 4.00 மணிக்கு துர்கா ஸ்டாலின் ரகசிய விசிட்டாய் துலாக்கட்டத்தில் புனிதநீராடுவதாக ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், 5.10 மணிக்கு துலாக்கட்டத்திற்கு துர்கா ஸ்டாலினும், அவரது தம்பி டாக்டர் ஜெயராஜ மூர்த்தியின் மனைவியும் வருகை தந்தார்கள். அவர்களை புஷ்கரகமிட்டி ஒருங்கிணைப்பாளர் மகாலெட்சுமி வரவேற்றார். சுவாமி சன்னிதியில் சங்கல்ப்பம் செய்துகொண்ட அவர்களை காவிரிக்கு அழைத்துச் சென்று கிணற்றுநீரை மொண்டு அவர்கள் தலையில் புனிதநீர் தெளித்தார் மகாலெட்சுமி. அதிகாலையில் அன்னதானம் செய்ய வாய்ப்பில்லை என்பதால் 10 பேருக்கு வஸ்திரதானம் செய்தார் துர்க்கா ஸ்டாலின். அதன்பின் 8.30 மணியளவில் மாயூரநாதர் திருக்கோயிலுக்கு துர்கா ஸ்டாலின் சென்றார். கோயில் குளத்தில் பாதம் நனைத்து, தலையில் தண்ணீர் தெளித்துக்கொண்டபின் சுவாமி தரிசனம் செய்தார். அக்கோயிலிலும் வரலாறுகாணாத பக்தர்கள் கூட்டம். அம்மன் சன்னிதியில் நீண்ட கியு வரிசை நின்றது. துர்க்கா ஸ்டாலினும் வரிசையில் நின்றார். ஆனால், அங்கிருந்தவர்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டு வணக்கம் தெரிவித்து, உடனே உள்ளேபோக வழிவிட்டார்கள். தரிசனம் முடித்துவந்த அவர், தங்கியிருந்த தனியார் விடுதியில் காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு, அவரது சொந்தஊரான திருவெண்காடு நோக்கிச் சென்றார்.

அங்கு கண்ணீரும் கம்பலையுமாக கப்சா நிருபரிடம் பேட்டி அளித்தார். “வயசு பெண்புள்ளையை பெத்த அம்மா வயித்துல நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பதுபோல் என் கணவர் ஸ்டாலின் சட்டசபைக்குப் போய்விட்டு கோபாலபுரம் திரும்புவாரா, சட்டையைக் கிழித்துக் கொண்டு கீழ்பாக்கம் போவாரா என்று தினம் தினம் நரக வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். பத்துப் பேருக்கு வஸ்திர தானம் செய்தால் சட்டைக் கிழிப்பு தோஷம் நிவர்த்தி ஆகும் என்று குடும்ப ஜோசியர் சொன்னார். பெரியார் பிறந்தநாளும் அதுவுமாக கோவிலுக்கு வரும்படி ஆகிவிட்டது. வந்த போது முக்காடு போட மறந்து விட்டதால் சிலர் அடையாளம் கண்டுகொண்டு விட்டனர்.

கடவுள் மறுப்பு கொள்கை எல்லாம் கணவருக்கும் மாமா கருணாவுக்கும் தான். எங்களுக்கு மான ரோஷம் கிடையாது. மாமா காலையில் எழுந்ததும் வீட்டில் இருக்கும் சாமி படங்களுக்கு ‘ஸ்வாஹா’ சொல்லிவிட்டுத்தான் யோகா செய்வார். அதனால் தான் பூரண ஆயுசோடு ‘செக்குமரம்’ போல் கட்டுமரமாக உள்ளார். அவ்வப்போது கோவிலுக்கு செல்லும்போதெல்லாம் எங்கள் குடும்பம் ஒரு பித்தலாட்ட பீஸ் என்று இப்படி நிரூபணம் ஆகி விடுகிறது, பகுத்தறிவும் பல்லிளித்து விடுகிறது. என்ன செய்ய? அடுத்ததாக நவராத்திரி, சரஸ்வதி பூஜை வருகிறது, தீபாவளி பலகாரம் வேறு செய்ய ஆரம்பிக்க வேண்டும், நேரமாகிறது வழி விடுங்கள்” என்று கோயில் பிரசாதத்தை கப்சா நிருபரின் கையில் திணித்துவிட்டு கிளம்பினார்.

பகிர்

There are no comments yet