முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் மனு கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசியலில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு அரசியல் நிகழ்வுகள் நடந்து வருகிறது. முக்கியமாக அதிமுகவில் பல மாற்றங்கள் நடந்துள்ளது. அதிமுக அணி இரண்டாகி பின்னர் மூன்றாகி அதன் பின்னர் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்ததன் பின்னர் அதிமுக அணி , தினகரன் அணி என செயல்பட்டு வருகிறது.

எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என தினகரன் அணியினர் 19 பேர் மனு கொடுத்த நிலையில் அவர்களிடம் சட்டப்பேரவை தலைவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் 19 பேரும் விளக்கம் அளிக்க வராத நிலையில் திடீரென இன்று காலை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்து சட்டப்பேரவை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

அவரது அறிவிப்பில் இந்திய அரசமைப்புச்சட்டம் 10 வது அட்டவணையின் படி ஏற்படுத்தப்பட்டுள்ள 1986 ஆம் ஆண்டு சட்டபேரவை விதிகளின் படி (கட்சி மாறுதல் காரணம் காட்டி தகுதியின்மையாக்குதல்) விதிகளின் கீழ் சட்டப்பேரவை தலைவர் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்து ஆணையிட்டதன் காரணமாக தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்து விட்டார்கள். இவ்வாறு சட்டப்பேரவை தலைவர் அறிவித்துள்ளார்.

கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்படி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தாம் சார்ந்திருந்த கட்சியில் இருந்து விலகினாலோ அல்லது கட்சி கொறடா உத்தரவுக்கு எதிராக சட்டப் பேரவையில் வாக்களித்தாலோதான் அவரது பதவியைப் பறிக்க முடியும். இந்த 18 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் மேற்சொன்ன இரண்டு விதிகளுமே பொருந்தவில்லை. எனவே, பேரவைத் தலைவரின் உத்தரவு சட்டத்துக்கு மாறானது என்பது தெளிவாகிறது.

ஆளும் கட்சிக்குப் பெரும்பான்மை இல்லை என்பது தெளிவாகத் தெரியும் நிலையில் தமிழக சட்டப்பேரவையைக் கூட்டி ஆளுங்கட்சி தனது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பிற அரசியல் கட்சிகளும் தொடர்ந்து ஆளுநரை வலியுறுத்தி வந்தன. ஆனால் பெரும்பான்மை இல்லாத அரசு நீடிப்பதற்கு உதவும் விதமாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். இது கண்டனத்துக்கு உரியதாகும்.

பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையைக் கூட்ட உத்தரவிட வேண்டும் என்று திமுக தொடுத்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் பேரவைத் தலைவர் எடுத்துள்ள இந்த நடவடிக்கை உயர் நீதிமன்றத்தை அவமதிப்பதாக மட்டுமின்றி வாக்களித்த மக்களைக் கேவலப்படுத்துவதாகவும் உள்ளது. இது பேரவைத் தலைவர் என்னும் பதவியின் கண்ணியத்துக்கு உகந்ததுதானா என்பதைப் பேரவைத் தலைவர் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பகிர்

There are no comments yet