Credit: தோழர். ஆலஞ்சி
தமிழகம்..
கேடுக்கெட்டவர்களின் கையில் சிக்கி மூச்சுதிணறுகிறது.. சரியான காரணம் தேவையில்லை சட்டவிதிகளைப்பற்றி காலகாலமாக கடைப்பிடிக்கப்பட்ட விதிகள் மரபுகளை பற்றியோ கவலையில்லை இந்த நேர அற்பசுகம் போதுமென்கிற மனநிலை அரசியலில் தமிழகத்தை தலைகுனிய வைத்திருக்கிறது..
..
எந்தகட்சிக்கு மாறினார்கள் அதிமுகவே இப்போதில்லாத போது அணிகளுக்குள் ஏற்பட்டிருக்கிற கருத்துமோதல் எப்படி கட்சிதாவல் ஆகும்.. நிறைய கேள்விகளை நீதிமன்றம் கேட்கலாம் அதற்கு நிறைய காலம் பிடிக்கும் அதுவரை மூச்சுவிட்டுக்கொள்ளலாம் ஆட்சியாளர்கள்.. சபாநாயகரின் வானாளாவிய அதிகாரம் என்பது சட்டவிதிகளுக்குட்பட்டதென புரியாமல் பேசிகிறாரா சபாநாயகர்.. பன்னீர் கோஷ்டி அதிமுக முதல்வர் எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தபோது என்ன செய்தாரென சாதாரணமாக அரசியல் பேசாதவர்கூட கேட்கிறார்கள் அப்போதைய மௌனத்தின் பின்னில் யார் இருந்தார்களோ அவர்களே இன்றைய 18 பேரின் தகுதிநீக்கத்திலும் என்று என் அப்பன் குதிருக்குள் இல்லையென்ற தமிழிசையின் பேச்சு காட்டிக்கொடுத்திருக்கிறது…..
..
ஒரு வகையில் 19 இடங்களை காலியாக அறிவித்த செயல் தேர்தல் ஆணையத்தை இடைத்தேர்தலை நோக்கி நகர்த்தியிருக்கிறது.. ஏதேதோ காரணம் சொல்லி காலம்தாழ்த்தும் செயல் இனியும் எடுபடாது .. நீதிமன்றம் தகுதி நீக்கத்தை ரத்து செய்தாலேயொழிய இடைத்தேர்தல் வந்தே தீரவேண்டும் அது விரைந்து வர நடவடிக்கையெடுத்தால் நல்லது.. திமுகவின் பலம் இன்னும் கூடும்.. எடப்பாடியை வீட்டுக்கு அனுப்பி வைக்க ஏதுவாகும்..
..
இப்போது இரண்டே வழிகள் தான்.. நீதிமன்ற தடை அல்லது இடைத்தேர்தல் திமுக இடைத்தேர்தலை சந்திக்க தயாராவதே நல்லது ..
சில விவரகேடுகள் திமுக உறுப்பினர்கள் ராஜினாமா செய்யலாமென்கிறார்கள் அது அபத்தமான முடிவாகிப்போகும் .. இந்த சூழலில் மத்தியரசு என்ன நிலைப்பாட்டை எடுக்க போகிறென்பது முக்கியத்துவம் வாய்ந்தது.. இப்போது சட்டமன்றத்தை முடக்கி வைத்தால் மட்டுமே ஆளும் பாஜகவிற்கு மக்கள் மத்தியில் நடுநிலையோடு இருப்பதை போன்ற தோற்றத்தையாவது தரும் ..
..
சட்டமன்றத்தை முடக்கி வைக்கலாம் அல்லது புதிய தேர்தலை நோக்கி நகர்த்தலாம் அதுதான் சரியான நடைமுறை ஆனால் அதை மோடி இடம் எதிர்ப்பார்ப்பது வீண்..
There are no comments yet
Or use one of these social networks