சென்னை: 18 எம்.எல்.ஏக்கள் தகுதியிழப்பு செய்யப்பட்ட நிலையில் அந்தத் தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அளிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என ஆளுநருக்கு கடிதம் கொடுத்து தனி அணியாக செயல்பட்டு வந்த நிலையில் 18 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தொகுதியை காலியிடம் என அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அளிக்க அரசு தரப்பு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்த அறிவிப்பு குறித்து உயர் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தினகரன் தரப்பு அறிவித்துள்ள நிலையில் இந்த கடிதம் எழுதப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் சாரணர் இயக்கத் தேர்தலில் பாஜகவை சேர்ந்த எச் ராஜா கேவலமாக தோல்வியுற்றதால், தமிழக பாஜக நிர்வாகிகளை நம்பாமல் உத்திரப்பிரதேசத்தில் இருந்து வேட்பாளர்களை கொண்டு வந்து போட்டியிட செய்யலாமா என்று மோடி அமித்ஷாவுடன் ஆலோசித்து வருவதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கி

பகிர்

There are no comments yet