திருச்சி: நீட் தேர்வை எதிர்த்து டிடிவி தினகரன் தலைமையில் திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக மற்றும் பாஜக வினரால் பொதுக்கூட்டம் நடத்தப்பட்ட அதே இடத்தில் அதிக அளவில் பொதுமக்களை கூட்டி இந்த பொதுகூட்டம் நடைபெற்றது. பலர் மைதானத்திற்கு உள்ளே செல்ல முடியாமல் பாதி பேர் வெளியே நின்றுள்ளனர்.

இதில் டிடிவி தினகரன் பேசியதாவது: ’’தனது கடைசி உயிர் மூச்சு வரை ஜெயலலிதா நீட் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தார். சமூகநீதியில் இந்தியாவில் முதலிடம் தமிழ்நாடு தான். 69 சதவிகித இட ஒதுக்கீட்டை பெற்றார். 2005 ல் மருத்துவ , இன்ஞிசினியர் சேர்க்கைக்கு தேர்வு தேவை இல்லை என அன்றே அகற்றி கட் ஆப் மதிப்பெண் முறை கொண்டு வந்த காரணத்தால் தான் கிராம புற ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மாணவர் படிக்கிற நிலமை இருந்து வந்தது. ஆனால் மன்மோகன் 2011ல் ஒட்டு மொத்தமாக நீட் வேண்டும் என்பதை ஜெயா எதிர்த்து உறுதியாக இருந்து போராடி வந்தார். 2013 ல் கூட உச்சநீதிமன்றம் நீட் வேண்டாம் என சொன்னார்.

தமிழகத்தில் இன்று நடைபெறுகிற துரோக ஆட்சி அம்மா பாதையிலிருந்து பிரிந்து தவறான பாதையில் சென்று தவறான வாக்குறுதி நீட் விலக்கு என சொன்னதால் தான் அனிதா மரணம் போன்ற துர் சம்பவங்கள் நிகழ காரணம் என குற்றச்சாட்டு. இது போன்ற தற்கொலைகள் தொடக்கூடாது என்பதால் மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி தான் இந்த கூட்டம். தமிழகத்தில் நடைபெறுகிற ஆட்சி ஜெயலலிதாவின் ஆட்சி அல்ல. சசிகலா எம்ஜிஆர் ஆட்சியை உருவாக்க தான் ஓபிஎஸ் முதல்வராக்கப் பட்டார். ஆனால் ஓபிஎஸ் எதிரிகளுடன் தொடர்பு வைத்திருந்தார். அவர் திமுகோவோடு சேர்ந்து செயல்படுகிறார் என ஈபிஎஸ் சசிகலாவிடம் வைத்த கோரிக்கையினால் ஆட்சிப் பொறுப்பும், கட்சித் தலைமையும் ஓருவரிடமே இருக்க வேண்டும் என விரும்பிதால் சசிகலா முதல்வராக ஏற்றுக்கொண்டார். உச்சநீதிமன்ற தீர்ப்பால் முதல்வராக பதவியேற்க முடியாமல் போனது.

எம்ஜிஆரால் உருவாக்கப் பட்ட இலவச மதிய உணவுத் திட்டத்தால் பயனடைந்த பல மாணவர்கள் பல துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதா எம்ஜிஆர் ஆட்சியை உருவாக்கினார். 2011 ல் புரட்சித் தலைவர் ஆட்சியை உருவாக்கினார். சசிகலா நினைத்திருந்தால் ஜெயா மரணத்துக்கு பிறகு அவரே முதல்வராகி இருக்க முடியும். ஆனால் கட்சியை சேர்ந்த ஒருவர் இருக்க வேண்டும் என்பதால் ஓபிஎஸ், ஈபிஎஸ் அடுத்தடுத்து முதல்வராக்கப் பட்டார்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தில் நிச்சயம் நீதி கிடைக்கும். ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைப்பை அறிவித்து விட்டு சசிகலா நீக்கப்படுவார் என சொன்ன காரணத்தால் ஆளுநரை சந்தித்தோம். அவரிடம் முறையிட்டும் எடப்பாடி 117 உறுப்பினர் நம்பிக்கையை இழந்து விட்டதாகவும் சொல்லியும் பலனில்லை.

மீண்டும் எடப்பாடி அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்கும் சூழலை உருவாக்கி அனைத்து அமைச்சர்களும் வீட்டுக்குப் போவார்கள். நாம் திமுகவோடு கை கோர்க்க முடியாது. ஆட்சி கவிழ்ந்த பிறகு எப்போது தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம் இது சபதம். அது தான் ஒன்றரை கோடி தொண்டரின் மனநிலையும். கவர்னர் கவர்னராக செயல்படுகிறாரா அல்லது எடப்பாடியின் அவைத் தலைவராக செயல்படுகிறாரா என்ற கேள்வி எழாமல் ஆளுநர் எடப்பாடியை அறுதிப் பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வேண்டுகோள். பிப்ரவரி 14 சசிகலா நினைத்திருந்தால் டிடிவியான என்னை முதல்வராக்கியிருக்க முடியும். எங்களுக்கு பதவியில் முக்கியமில்லை. எடப்பாடி கொங்கு மண்டலம், ஜாதியை சொல்லி பேதம் உருவாக்க பதவியில் ஒட்டிக் கொள்ள விரும்புகிறார் எடப்பாடி என குற்றச்சாட்டு. கொங்கு மண்டல நிர்வாகி எடப்பாடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டுகோள் வைத்த தாகவும் நினைவு கூர்ந்தார். தேனி, மதுரை, நெல்லை உட்பட பல இடங்களிலும் பொது்மக்கள் உட்பட பொது மக்கள் அனைவரும் கூறுவது மக்கள் விரோத, ஊழலாட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே கோரிக்கையாக எழுந்துள்ளது. குழுமூர் மக்கள் கூட இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது தான் கோரிக்கையாக வைக்கப் படுகிறது.

இந்த கட்சியை காப்பாற்ற 21 பேர் போராளிகளாக இருக்கிறார்கள். பழனியப்பன், செந்தில் பாலாஜி மீதும் பொய் வழக்கு போடப் பட்டுள்ளது. அதில் பழனியப்பன் ஜாமீன் வாங்கி விட்டார். அஇஅதிமுகவை காப்பாற்ற போராடுகிற எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்துவிட்டு மெஜாரிட்டி நிருபிக்க முயல்கிறார்கள். நீதிமன்றம் இருப்பதையே மறந்து விட்டு செயல்படுகிறார்கள். நிச்சயம் ச.ம.உ அனைவரும் எடப்பாடியை தோற்கடித்து அவர்களை வீட்டுக்கு அனுப்புவார்கள். அம்மா ஆட்சியை அமைக்க உறுதியேற்க வேண்டும். சமூக நீதி காக்க மத்திய அரசு தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க சட்டமியற்ற வேண்டும்’’
இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.

பகிர்

There are no comments yet