Credit: San Saravanakkumar Saran

சென்னை: அம்மாவுக்காக ஓட்டுப் போட்டுத் தேர்வான இந்த ஆட்சியில் நான் அவர்களை தகுதி நீக்கம் செய்ய மாட்டேன் என பிடிவாதம் பிடித்த தனபாலின் மனதை மாற்றியது எடப்பாடியின் தரப்பு. கடைசி வரை மனம் மாறாமல் இருந்த தனபாலை உங்களுக்கும் அமைச்சர் பதவி தருகிறோம், நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்ததும் கண்டிப்பாக அமைச்சரவையில் முக்கியமான இடம் உண்டு. உங்களுக்கு மட்டுமல்ல 3 தலித் எம்.எல்.ஏகளுக்கும் அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகே தனபால் 18 எம்.எல்.ஏகளை தகுதி நீக்கம் செய்துள்ளார். இந்த சம்பவம் 15 நாட்களுக்கு முன்பே நடந்துள்ளது. முதலில் வெளிவந்த அரசாணையில் 19 எம்.எல்.ஏகளின் பெயர்களை குறிப்பிட்டு அரசாணையை வெளியிட்டவர்கள் அடுத்து கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் எடப்பாடி தரப்பினரிடத்தில் சரண்டர் ஆனதும் அவரது பெயரை மட்டும் நீக்கிவிட்டு இரண்டாவது முறையாக அரசாணையை வெளியிட்டனர்.

இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த பிறகு புதிய சபாநாயகராக செம்மலையை அமர்த்திவிட திட்டமிட்டுள்ளனர். இதற்காக பேச்சு வார்த்தை நடந்து கொண்டியிருக்கும் வேலையில்தான் மதுரை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா முதல்வர் என் தொகுதிக்கு ஒரு பைசா செலவழிக்கவில்லை என எடப்படிக்கு எதிராக வாள் சுத்துகிறார். இதன் பின்னணியில் என்ன இருக்கிறது என விசாரித்தால் ராஜன் செல்லப்பா அமைச்சர் பதவி கேட்டு நச்சரித்து வருவதாகவும் அதற்காகத்தான் இப்போது எடப்பாடியின் அரசை பட்டும் படாமல் பேசி மிரட்டி பேட்டி கொடுத்து பேசி வருவதாக சொல்கிறார்கள். அரசியல் , அதிகார போதைக்கு மீடியாவை ஊறுகாய் போல தொட்டுக் கொள்ளவே இந்த திடீர் பேட்டி என்கிறார்கள்.

பகிர்

There are no comments yet