சென்னை:ஊழல், மதவாதத்தை எதிர்க்கும் தைரியமும், நேர்மையும் கொண்ட கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சென்னை வந்தார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தில் அவரை சந்தித்தார். அவருக்கு பூச்செண்டு கொடுத்து கமல் வரவேற்றார்.

தனியறையில் சுமார் ஒரு மணி நேரம் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை இருவரும் கூட்டாக சந்தித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது:ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவரும் எனக்கு உறவினர்கள். அரவிந்த் கேஜ்ரிவாலும் நானும் ஊழலுக்கு எதிராகப் போராடுபவர்கள். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அவரை வாழ்த்துவதன் மூலம் அவரை நான் கவுரவிக்க விரும்புகிறேன் என்று கமல் பேசினார்.

அடுத்துப் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாவது: நடிகர் கமல்ஹாசனின் ரசிகன் நான். அவரது ஒற்றுமை உணர்வும் அர்ப்பணிப்பையும் அறிவேன். நாங்கள் இருவரும் ஒருமித்த கருத்தை உடையவர்கள். நாடு இன்று ஊழல் மதவாதத்தில் சிக்கி உள்ளது. நாங்கள் இருவரும் ஊழல் மதவாதத்தை எதிர்ப்பவர்கள். இன்று நாங்கள் இருவரும் அதைப்பற்றித்தான் பேசினோம். தைரியமும், நேர்மையும் கொண்ட கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும். இன்று நாங்கள் பல விஷயங்களை பரிமாறிக்கொண்டோம். எதிர்காலத்திலும் இந்த சந்திப்பு தொடரும். இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் பேசினார்.

பின்னர் கமல் ஹாசன் நமது தனிமையில் கூறியதாவது: ஊழலுக்கு எதிரி என்று சொல்லிக்கொண்டே ஊழலின் பல்கலைக்கழகம் கருணாநிதியை சந்திப்பேன். பாஜகவுக்கும் மோடிக்கும் எதிராக பேச மாட்டேன், அனால் இஸ்லாமியருக்கு எதிராக திரைப்படங்கள் எடுப்பேன். வாரிசு அரசியலை எதிர்ப்பேன், ஆனால் என் மகள் அக்ஸராவை வைத்து கஜரிவாலை விமான நிலையத்தில் வரவேற்பேன். அந்த வகையின் தான் கேஜரிவாலை சந்தித்தேன். அவர் அண்ணா ஹசாரேக்கு துரோகம் செய்து டெல்லி முதல்வரானார், நான் கவுதமிக்கு துரோகம் செய்து பிக் பாஸ் ஆக்கியுள்ளேன் ஆகவே நாங்கள் இருவரும் உறவினர் என்று உளறிக்கொட்டினார்.

பகிர்

There are no comments yet