Credit: தோழர். ஆலஞ்சி

இன்று வந்தால் நாளை முதல்வராகிவிடலாமென்ற கனவோடு வருகிறார்கள் யதார்த்தம் என்னவென்றியாமல்
எம்ஜிஆர் வந்தாரே உடனே ஆட்சி அதிகாரத்தில் வந்துவிடவில்லையா என கேட்போருக்காகவும் இந்த பதிவு..
..
முதலில் அரசியல் கட்சிக்கு கட்டமைப்பு கிராமங்கள் தோறும் வேண்டும் அதாவது சிற்றூர்களில் கூட செயல்படுவதற்கான அமைப்புரீதியாக செயல்பட ஆட்கள் தேவை மற்றொன்று இன்றைய காலகட்டத்தில் பெருமளவு பொருட்செலவு செய்ய வேண்டி வரும் ..செயல்படும் ஆட்கள் எந்த நோக்கக்தில் பணிபுரிகிறார்களென்று அறிந்திருத்தல் வேண்டும்..
எம்ஜிஆர் தனிக்கட்சி கண்டபோது திமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் எல்லா ஊர்களில் குறிப்பிட்டளவு அவரோடு சென்றார்கள் அதோடு அவரது கவர்ச்சி அரசியலும் .. அந்த நேரத்தில் திமுகவிற்கு ஏற்பட்ட பின்னடைவும் பலம் சேர்த்தது.. அதிலிருந்து மக்கள் தெளிய தொடங்கியபோது மக்களவை தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை எம்ஜிஆருக்கு தந்தார்கள் .. உடனே எம்ஜிஆர் காங்கிரஸோடு கைகோர்த்தார் கடைசிவரை அதைவிடவில்லை என்பதும்.. அடுத்தடுத்த தேர்தல்களில் இந்திரா சாவும் எம்ஜிஆரின் நோவும் ..சாவும் நோவும் அவருக்கு கைக்கொடுத்தது.. அதோடு எழுபதுகளில் இருந்த நிலை இப்போதில்லை அப்போது கண்மூடிக்கொண்டு ஆதரித்த மடத்தனமெல்லாம் இப்போது கரைசேர்காது.. காரணம் மக்களுக்கு அன்றாட அரசியல் செய்திகளை உன்னிப்பாக கவனிப்பதோடு மட்டுமல்லாமல் அரசியல் தெளிவும் பெற்றிருக்கிறார்கள் அறியாமை ஒரளவு விலகியிருக்கிறது..
..
திரு.விஜயகாந்த் போன்றவர்கள் வெற்றிப்பெற முடியாமைக்கு போதுமான கட்டமைப்பு இல்லையென்பது மிக முக்கிய காரணம் சினிமாவை மட்டுமே நம்பி வருகிற ரசிகர்கள் நீண்டகாலம் கூடவே இருக்கமாட்டார்கள் தெளிவற்ற கொள்கை செல்லரித்துபோன வேரை போன்றது.. சிறிய காற்று போதும் வேரோடு சாய்த்துவிடும்.. அதீத மேதாவித்தனமும் அல்லது அதீதமான முட்டாள்த்தனமும் அரசியலுக்கு லாயக்கற்றது ..
எதை எப்போது செய்யவேண்டுமென்ற அரசியல் அறிந்திருக்கவேண்டும்.. அதிமுக சிதைந்து வருகிற வேளையில் ஆசை அதிகம் வருகிறது வெற்றிடம் இருப்பதை போன்ற தோற்றம் அது ஒருவகை பொய்யான தோணல்.. அதிமுகவிற்கு மாற்றாக திமுகவை முன்னெடுப்பார்கள் திமுகவின் எதிராக வரவேண்டுமென்ற நிலையில் அதிமுகவை அறவே புறக்கணித்து தேமுதிகவைப்போல துடைந்தெறிவார்களென சொல்லமுடியாது சில காலம் தோல்வியை தொடர்ந்து தரலாமே தவிர கிராமபுறத்திலும் செல்வாக்கோடு அல்லது கட்சிரீதியான அமைப்பாக இருப்பதால் அவ்வளவு சீக்கிரம் வேராடு சாய்த்துவிட முடியாது சரியான தலைமையில்லாததால் தடுமாறுகிறதே தவிர அது வெற்றிடமல்ல….
..
தொண்டு செய்து வந்ததெல்லாம் போய் தொலி இருந்தால் வரலாமென்ற நிலை வந்ததற்கு வருத்தபடவேண்டும்.
..
புதியதாய் கனவு காண்பவர்களுக்கு ஒரு செய்தி விஜயகாந்த், அன்புமணி,சீமான் போன்றவர்கள் வரிசை காத்திருக்கிறது அவ்வளவுதான்..

பகிர்

There are no comments yet