Credit:தோழர். ஆலஞ்சி and Mëëran Abdu
பொய் சொன்னோம்
அப்போலோவில் அம்மா நல்லா இருக்காகனு
பொய் சொன்னோம்
தேர்தல் ஆணையத்தில் சின்னம்மா தான் அடுத்த பொதுசெயலாளர்னு
பொய் சொன்னோம்
ஆர்கே நகரில் தினகரனுக்கு வாக்கு அளிக்க
பொய் சொன்னோம்
தமிழகத்தில் நீட் தேர்வு இல்லைனு
பொய் சொன்னோம்
அம்மா ஆட்சி தமிழகத்தில் நடக்குதுனு
பொய் சொன்னோம்
அம்மா மரணத்தில் சந்தேகம்னு
பொய் சொன்னோம்
சின்னம்மா காலில் விலவில்லை
என்று பொய் சொன்னோம்
பாஜகவுக்கு நாங்க அடிமை இல்லைனு
பொய் சொன்னோம்
தினகரன் எங்களை மிரட்டினாரனு
பொய் சொன்னோம்
தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடக்குதுனு
பொய் சொல்வோம் இன்னும் சொல்வோம்
எங்கள் பதவியே காப்பாற்றி கொள்ள
நாங்கள் சம்பாதித்த பணத்தை பாதுகாக்க
இப்படிக்கு
தமிழக அமைச்சர்கள்……
ஜெயலலிதா இட்லி சாப்பிட்டாரென பொய் சொன்னோம் திண்டுக்கல் சீனிவாசன்..
உண்மையில் வெட்கப்படவேண்டும்..
அமைச்சராக இருந்துக்கொண்டு மக்களை ஏமாற்றியிருக்கிறீர்..இது அயோக்கியத்தனமன்று தெரியவில்லையா பதவிக்காக பீ திங்க கூட தயங்கமாட்டீர்களா..
எவ்வளவு அலட்சியமாக பொய் சொன்னதாக அதுவும் தமிழக முதல்வராக இருந்தவரின் நிலைப்பற்றி உண்மையை எடுத்துச்சொல்லவேண்டிய அமைச்சரும் அதிகாரவர்க்கமும் மூடி மறைத்து மக்களை நம்பவைத்து ஏமாற்றியிருக்கிறார்கள்.. தாங்கள் எடுத்துக்கொண்ட சத்திய பிரமாணத்திற்காக உண்மையாக இருப்பேன் என்ற வாக்கியத்திற்கெதிராக அரசியல் அமைப்பையே கேலிக்கூத்தாகிக்கியிருக்கிறார் ..
..
உண்மையானவனாக விசுவாசியாக இருப்பேனென்பது அரசியல் சாசன சட்டத்திற்கு மட்டுமல்ல மக்களுக்கும் தான் என்பதை மறந்திருக்கிறார் உண்மையை மறைத்து ஒட்டுமொத்தமாக அரசியலமைப்பையே ஏமாற்றியிருக்கிறார்கள்.. ஜெயலலிதாவின் கையெழுத்தை பெற முடியவில்லையென்று கைநாட்டு பெற்றதாக சொன்னதும் பொய்..
இப்படி நிறைய சட்ட மீறல்களை செய்திருக்கிறார்கள் இந்த அயோக்கியர்கள்..
ஜெயலலிதா மீது இவர்களுக்கு கரிசனமெல்லாம் இல்லை மாறாக பதவி தொடர்ந்திருக்கவேண்டுமென்பதற்காக அன்று சசிகலா என்ன சொன்னாரோ அதையே திரும்ப சொல்லியிருக்கிறார்கள் அமைச்சர்கள் மட்டுமல்ல அதிகாரிகளும் விசாரணை வளையத்திற்குள் வரவேண்டும்.. சுகாதாரத்துறை செயலராக இருக்கும் ராதாகிருஷ்ணன் (ஆர்.வெங்கட்ராமனின் பேரன்) இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லபோகிறார்.. முதல்வரின் நிலை குறித்து தவறான தகவலை தருகிறார்களென அறிந்தும் மௌனம் காத்ததேன்..
..
ஒட்டுமொத்த அயோக்கியர்களின் கூடாராமாக அதிமுக இருந்திருக்கிறது.. இன்றைக்கு சசிகலாவோடு பிணக்கத்தால் இதையெல்லாம் வெளியே கொண்டுவருகிறார்கள்.. அப்போலோ அதிபரின் செய்தியாளர் சந்திப்பு கடைசி கட்டத்தில் உயிருக்கு போராடுவதாக நாடகம் ஆடியதெல்லாம் பொய்யா உண்மையில் நடந்ததென்ன .. இந்த உண்மையெல்லாம் வெளிவரவேண்டும் நிச்சயமாக தளபதி தலைமையில் வரும் ஆட்சியில் இவர்களையெல்லாம் சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்.. உண்மை சிலகாலம் மறைக்கலாம் நெடுங்காலம் ஏமாற்ற முடியாது..
..
கலைஞர் போட்டோவை வெளியிடுங்கள் என்றார் அப்போதே போட்டோவை வெளியிட்டிருந்தால் இத்தனை மர்மங்களும் பொய்களும் வந்திருக்காது..
இன்று..
இந்த அயோக்கியர்களின் முகமூடி கிழிந்து தொங்குகிறது.. ஜெயலலிதா சசிகலாவிடம் மட்டுமல்ல மக்களிடமும் கபடநாடகம் போட்ட வேடதாரிகள்.. சாயம் வெளுக்கிறது..
.
உண்மையில் ஜெயலலிதாவிற்கு நடந்ததென்ன.
..
There are no comments yet
Or use one of these social networks