சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் போன்றோர் எங்களுடன் இணைவார்கள் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தலைவர் தீபா தெரிவித்துள்ளார்.

பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் அவரது படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு தீபா செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேலும், அதிமுக. தொண்டர்களை சாதாரணமாக நினைக்க வேண்டாம். அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் என் பக்கம்தான் உள்ளார்கள். இரட்டை இலை சின்னம் எனக்கே கிடைக்கும். அச்சமயம் அரசியல் மாற்றம் ஏற்படும்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் போன்றோர் எங்களுடன் வந்து இணைவார்கள் என்று தெரிவித்தார்.

பகிர்

There are no comments yet