Credit: தோழர். ஆலஞ்சி

அம்மா சிறை சென்றிருந்தாலும் அவரை கட்சியிலிருந்து நீக்கி இருப்போம்- OS மணியன்.
“அம்மாவின் இறப்பைவிட ஆட்சிதான் பெரிதென்று இருந்தோம்…”
எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ. ராமசந்திரன் தடாலடி..!
..
இதை சொல்ல தைரியமே வந்தமைக்கு நன்றி ஆனால் இந்த தைரியம் ஜெயலலிதா விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டபோது .. அழுதுபுழம்பி பதவியேற்கும் போது ஏன் வரவில்லை அப்போது ஜெயலலிதா நீக்க ஏன் சொல்லவில்லை .. குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டபோது ஏன் ஜெயலலிதாவைப்பற்றி குறை கூறவில்லை..
இப்போது வரவா போகிறார் என்றெண்ணி ஏதேதோ பேசி திரிகிறார்கள்..
எம்ஜியார் என்ற துரோகியால் தோற்றுவிக்கப்பட்ட கட்சியில் துரோகிகளே உள்ளனர் என்பதற்கு இது ஒரு சாட்சியாய் திகழ்கிறது அதிமுக கூடாரம் ..
..
பேரறிஞர் அண்ணா 1967 ல் திமுகழகம் வெற்றி பெறுகிற செய்தியை தம்பிமார்கள் மகிழ்ச்சியோடு வந்து சொன்னபோது .. ஆட்சி வந்துவிட்டது கட்சி போய்விடுமோ என அஞ்சுகிறேன் என்றார்.. அதே போல எம்ஜிஆர் திமுகவை கைக்குள் கொண்டுவர வேண்டும் அல்லது உடைத்து வெளியேற நேரம் பார்த்தார்
திராவிட இயக்கத்தை சாய்க்கவேண்டுமென காத்திருந்த கூட்டம் தங்களின் அம்பை வெளியே கொண்டுவந்தது .. நல்லவேளையாக காலம் நமக்கு கலைஞரை கைக்காட்டியிருந்தது நாவலர் போன்ற பலவீனமானவர்கள் தலைமைப் பொறுப்பிற்கு வந்திருந்தால் கட்சியை சிதைத்திருப்பார்கள்.. கலைஞர் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் அவரின் தனக்கு மநிதிரி பதவி வேண்டுமென கேட்டார் .. அதை சாதூர்யமாக மறுத்தார் கலைஞர் .. கட்சியின் பொறுப்பிற்கு வரவேண்டுமன விரும்பி பொருளாளர் பதவிக்கு வர விரும்புவதாக சொன்னார் .. போட்டியிட்டு வென்றுவாருங்கள் என கலைஞர் சொல்லிவிட்டார் அப்போது பொருளாளர் பதவிக்கு முசிறியை சேர்ந்த கணேசன் போட்டியிடுவதாக சொன்னவுடன் எம்ஜிஆர் கலைஞரிடம் வந்து நீங்கள்தான் பேசி அவரை பின்மாற சொல்லவேண்டுமென்றார்..
கலைஞர் நீங்களே பேசி பாருங்கள் என்ற போது மறுத்து கலைஞரையே பேசி சொல்கிறார் .. 9 மாவட்ட செயலர்கள் பரிந்துரையோடு போட்டியிடுகிறேன் கூத்தாடிக்கா நான் விலக முடியாதென்றார் கலைஞர் தான் பேசி அவரை விலக வைத்து எம்ஜிஆர் பொருளாளராக்கினார்.. அப்போது எங்கள் பேராசான் பெரியார் சொன்னார் கலைஞருக்கு என்னவாயிற்று சகதியில் கால்வைத்துவிட்டாரே என்றார்..
ஆம் இயக்கத்திற்குள் சகதியானார் .. சகுனியாய் காய் நகர்த்தி தன்னை உயர்த்தி கொண்டுவந்தவரை..காங்கிரஸிலிருந்து அழைத்துவந்து அழகு பார்த்தவரையே முதுகில் குத்தினார் அன்று தொடங்கிய துரோக வரலாற்று தன் கடைசி பக்கத்தை எழுதிக்கொண்டிருக்கிறது..
துரோகத்தால் விளைந்தது
துரோகிகளாலேயே துடைத்தெறியப்படுகிறது ..
..
விதைத்த வினை விளைந்து நிற்கிறது.. ஜெயலலிதா தன்னோடிருந்தவர்களை எக்காலத்திலும் நம்பவில்லையென்பதற்கு இவர்களின் இன்றைய செயல் நமக்கு பாடம் நடத்துகிறது.. எதையும் ஜனநாயக முறைப்படி/செயல்படாத அணுகாத எந்த கட்சியும் புதைந்துப்போகுமென்பதற்கு அதிமுக மிகச்சிறந்த உதாரணம்..
..

பகிர்

There are no comments yet