சென்னை: தமிழகம் முழுவதும் சிறப்பு காவல்படையினர் தங்களின் முகாம்களுக்கு திரும்பி தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற டிஜிபி ராஜேந்திரனின் உத்தரவு தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி விட்டது. இப்போதெல்லாம் 10 நிமிடத்திற்கு ஒரு பிரேக்கிங் செய்திகள் வெளியாகின்றன. இன்று பிற்பகலில் வெளியான பிரேக்கிங் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. சிறப்பு

காவல்படையினர் முகாமிற்கு திரும்புவதற்காக டிஜிபி போட்ட சாதாரண உத்தரவுதான் பரபரப்பை கிளப்பி விட்டது. அதே நேரத்தில் தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளருடன் காவல்துறை தலைவர், உள்துறை செயலர் ஆலோசனையில் ஈடுபட்டனர். மாநில சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமை செயலாளர் கிரிஜா ஆலோசனையில் ஈடுபட்டதால் பரபரப்பு அதிகமானது.

உடனே சமூக வலைத்தளங்களில் வதந்திகள் தீயாக பரவின. திமுக தலைவர் கருணாநிதி, அதே போல சிகிச்சை பெற்று வரும் சசிகலா கணவர் நடராஜன் தொடர்பாகவும் வதந்திகள் பரவின.

தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவியதால் ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டதாகவும் ஒரு வதந்தி கிளம்பியது. அத்துடன் சட்டசபை முடக்கப்பட உள்ளதாகவும் வதந்திகள் உலா வந்தன.

இந்த வதந்திகள் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருந்த நேரத்திலேயே காவல்துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. தமிழத்தில் பரவி வரும் டெங்கு கொசுக்களை பிடிக்கவே படைகளை தயாராக இருக்க சொன்னோம், தேவைற்ற வதந்திகளை பரப்பவேண்டாம் டிஜிபி ராஜேந்திரன் நமது கப்ஸா நிருபருக்கு விளக்கம் தந்தார்.

பகிர்

There are no comments yet