அகமதாபாத் / டெல்லி: மோடி பிரதமரான பிறகு, பாஜக தலைவர் அமித்ஷா மகன் ‘ஜே-ஷா’வின் சொத்து மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. அமித்ஷா மகனின் நிறுவனத்தின் வரவுசெலவு 16,000 மடங்கு உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. அந்நிறுவனத்தின் நிகர லாபம் தொகை வெறும் 50,000 ரூபாயில் இருந்து 80,00,00,000 ரூபாயாக ஒரே ஆண்டில் உயர்ந்துள்ளது. சாதாரண ஸ்டாக் புரோக்கராக தொழில் செய்து வந்த ஜேஷா நிறுவனம், காற்றாலை உற்பத்தி செய்யும் மிகப்பெரும் நிறுவனமாக அரசாங்க கடன் பெற்று விஸ்வரூபமெடுத்துள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதுபற்றி செய்தி வெளியிடும் ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என்று ஜேஷாவின் வழக்கறிஞர் பகிரங்க மிரட்டல் விடுப்பதையும் பார்க்க முடிகிறது.

அமித் ஷா மகனின் ஊழலை படிக்க இங்கே க்ளிக் செய்க https://thewire.in/185512/amit-shah-narendra-modi-jay-shah-bjp/

நரேந்திர மோடி பிரதமரான பிறகு அமித்ஷாவின் மகனின் சொத்து மதிப்பு 16000 மடங்கு உயர்ந்துள்ளது. மார்ச் 2013-2014ஆம் ஆண்டு ‘டெம்பிள் எண்டர்பிரைஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.6,230 மற்றும் ரூ.1,724 நஷ்டம் கணக்கு காட்டியுள்ளது. 2014-15 ஆம் ஆண்டுகளில் ரூ.18,728 மற்றும் ரூ.50,000 லாபம் காட்டியுள்ளது. ஆனால் 2015-16ஆம் ஆண்டுகளில் ரூ.80.5 கோடி லாபம் ஈட்டி அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ராஜ்யசபா எம்.பி மற்றும் ரிலையன்ஸ் குழுமத்தின் பெரும்புள்ளி பரிமல் நத்வானியின் மருமகன் ராஜேஷ் கண்ட்வாலாவிடம் இருந்து 15.78கோடி ரூ. வாராக்கடன் மேற்கண்ட நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து கடிதம் அனுப்பிய ஒரு ஆங்கில ஊடகத்திற்கு ஜேஷாவின் வழக்கறிஞர் மிரட்டும் தொனியில் ஒரு கடிதம் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. சென்ற காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா ரியல் எஸ்டேட் தொழிலில் டி.எல்.எப் நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்று பன்மடங்கு பணம் சம்பாதித்த போது இதே பாஜக கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

இப்போது ஆங்கில பத்திரிகை கேள்வி எழுப்பியதும் திருடனுக்கு தேள் கொட்டியது போல் பதில் வருகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சியின் ஆட்சிக் காலங்களில் அவர்களின் உறவினர்கள் சொத்துக்கள் அளவுக்கதிமாக உயர்ந்தால் கேள்வி எழுப்பும் உரிமை ஊடகங்களுக்கு உண்டு. ‘பொருட்கள் விற்பனை’யால் வந்த லாபம் என்று 51 கோடி ரூபாய் வந்ததாக கணக்கு காட்டப்படுகிறது என்ன பொருள் என்பது மோடிக்கு அமித் ஷாவுக்கும் தான் வெளிச்சம். நிறுவனத்தின் அனைத்து லாபமும் விவசாயப் பொருட்கள் விற்பனை மூலம் கிடைத்ததாகவும், 80 கோடி என்பது ஒரு பெரிய பணமல்ல, 50000 தொடங்கி ஒரே வருடத்தில் 80 கோடி சம்பாதித்து தந்த பிசினஸ் 2016 ஆம் ஆண்டு நஷ்டத்தால் ‘திடீரென’ நிறுத்தப்பட்டது என்றும் வழக்கறிஞர் தமது கடிதத்தில் கூறியுள்ளார். தனது கட்சிக்காரர், உண்மையாகவும், நேர்மையாகவும், சத்தியத்துடனும், நாட்டு நலனை கருத்தில் கொண்டும், சட்டபூர்வமாகவும், இந்தியாவை வளைத்துப்போடும் நோக்கோடு, மன்னிக்கவும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நோக்கோடு செயல்பட்டு வருவதாகவும், இந்த செய்தியை வெளியிட்டால் (இல்லாத) மானநஷ்ட வழக்கு தொடுக்கப்படும் என்றும் ஆங்கில ஊடகத்திடம் ஊளையிட்டுள்ளார்.

இதுகுறித்து டெல்லி கப்சா நிருபரிடம் பேசிய மோடி, “ஊரான் அமித்ஷாவின் பிள்ளை ஜேஷாவை ஊட்டி வளர்த்தால் என் பிள்ளைகளாகிய மித்ரோன்கள் தானே வளருவார்கள். எனக்குத்தான் குடும்பம் குட்டி இல்லை, அமித்ஷா மகனாவது கால் வயித்து டீ குடிக்கட்டும். பணமதிப்பிழப்பின் போது அச்சடித்த புதுநோட்டுக்களை இது போன்ற நல்ல காரியத்துக்கு தான் பயன்படுத்தினேன். மிச்ச மீதியை சேகர் ரெட்டி போன்றோருக்கு ரயிலில் அனுப்பி வைத்தேன். ஐம்பதினாயிரம் வரவு வந்த நிறுவனத்தில் விவசாயத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களை விற்று 80 கோடிக்கு லாபம் ஈட்டி இந்திய விவசாய வரலாற்றில் ஒரு புரட்சியை உண்டு பண்ணியுள்ளேன்.” என்றார்.

பகிர்

There are no comments yet