சென்னை: துணை முதல்வர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் இன்றிரவு டெல்லி பயணிக்கிறார். நாளை பிரதமர் மோடியை அவர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. துணை முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக பிரதமர் மோடியை சந்திக்கப் போகிறார் ஓ.பன்னீர் செல்வம். கடந்த 6 ஆம் தேதியன்று டெல்லி சென்ற ஓபிஎஸ் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். அப்போது மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்க சென்றதால் மோடியை சந்திக்க முடியவில்லை.

இது குறித்த உங்கள் நியூஸ் எஸ்க்க்ளுசிவ் இங்கே..

பல் பிடுங்கிய பாம்பாக பன்னீர், டெட் பாடிக்கே எடுபிடியான அவலம் – மீண்டும் தியானம்.. தர்மயுத்தம் 2.0..!

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு நாளை பிரதமருடன் சந்திக்க நேரம் கிடைத்துள்ளதை அடுத்து இன்றிரவு டெல்லி செல்கிறார். ஓபிஎஸ் உடன் அவரது ஆதரவாளர்கள் மைத்ரேயன், கே.பி. முனுசாமி ஆகியோர் உடன் செல்கின்றனர்.

எடப்பாடியின் வெளிப்படையான போர் தினகரனுக்கு எதிராகவும், மறைமுக போர் ஓ.பி.எஸ்.க்கு எதிராகவும், நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. அணிகள் இணைப்புக்கு முன்னதாக தனக்கு எதிராக செயல்பட்ட சில காவல் துறை அதிகாரிகளை மாற்ற ஓ.பி.எஸ். முற்பட்டதாகவும், அதற்கு எடப்பாடி முட்டுக்கட்டை போட்டதாகவும் தெரிகிறது. இதனால் கடுப்பாகிப் போன ஓ.பி.எஸ் தனக்கு நியாயம் கேட்டு மோடியை சந்திக்க இருப்பதாகவும் தெரிகிறது.

 

பகிர்

There are no comments yet