சென்னை: நடிகர் சந்தானத்துக்கும் பாஜக பிரமுகருக்கும் இடையேயான சாதாரண கொடுக்கல் வாங்கல் பிரச்னையை அரசியல் மோதலாக்க பாஜகவும் வன்னியர் சங்கமும் திட்டமிடுகின்றன. சந்தானம் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார், சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவரும் வளசரவாக்கத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரும் இணைந்து மூன்றாம் கட்டளை என்ற இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டி விற்பனை செய்ய முடிவெடுத்தனர். அதற்காக மூன்று கோடி ரூபாயை சண்முகசுந்தரத்திடம் கொடுத்துள்ளார் சந்தானம். இந்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் வழக்கறிஞர் பிரேம் ஆனந்தை நடிகர் சந்தானம் தாக்கியதாக அவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். நிலப் பிரச்னை தொடர்பாக சமரசம் பேசச் சென்ற போது நீ யார் என்று கேட்டு நடிகர் சந்தானம் மூக்கில் குத்தியதோடு 4 முறை அடித்ததாக பிரேம் ஆனந்த் தெரிவித்துள்ளார். படுகாயமடைந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரேம் ஆனந்த் தாக்கப்பட்டதற்கு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் சந்தானத்திடம் அடி வாங்கிய பிரேம் ஆனந்த் பாஜகவின் தென்சென்னை மாவட்ட துணைத் தலைவராகவும் உள்ளார். நடிகர் சங்கத்தினரின் அழுத்தம் காரணமாக சந்தானம் கொடுத்த புகார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக பிரேம் ஆனந்த் கூறியுள்ளார். பிரேம் ஆனந்த் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சந்தானத்தின் மீது காவல்துறை உடனடியாக கைது நடவடிக்கை செய்ய வலியுறுத்தி மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோரின் புகைப்படத்துடன் தாக்குதலுக்கு ஆளான பிரேம் ஆனந்தின் புகைப்படமும் இதில் இடம்பெற்றுள்ளது. சந்தானம் இந்த விவகாரத்தில் தன்னை போலீஸ் கைது செய்யக்கூடும் என்று அஞ்சி சென்னை உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். நீதிபதி வழக்கை விசாரித்து, நடிகர் சந்தானத்திற்கு நிபந்தனை அடிப்படையில் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் இரு வாரங்களுக்கு தினமும் நடிகர் சந்தானம் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் சந்தானத்துக்கு ஆதரவாக வன்னியர் சங்கம் களத்தில் குதித்துள்ளது. சந்தானதை ஏமாற்றி மோசடி செய்த பிரேம் ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வன்னியர் சங்கம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்களால் இரண்டு பேருக்கும் இடையே உள்ள கொடுக்கல் வாங்கல் பிரச்னை, அரசியல் மோதலாக மாறுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது வரையில் நடிகர் சந்தானம் எந்த சமூகத்தை சேர்ந்தவராக இருப்பார் என்று அறியப்படாமல் இருந்தது. இப்போது அவருக்கு ஆதரவாக வன்னியர் சங்கம் களம் இறங்கியிருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாமக கட்சி பிரமுகர் கப்சா நிருபரிடம் பேசும்போது. “நிஜ வாழ்வில் ஸ்டண்ட் காட்சியை அரங்கேற்றியதால் சந்தானம் ஹீரோவாகி விட்டார் என்று ஆர்யா ஒரு மேடையில் கூறியுள்ளார். அவர்கள் இருவரும் இணைந்து சூப்பர் ஹிட்டான பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில், நாங்கள் (பாமக) மரம் வெட்டுவது போல..முடி வெட்டும் கலைஞராக ‘தல தளபதி’ சலூன் வைத்திருப்பார். இப்போது எங்கள் சைடு பிசினசான கட்டபஞ்சாயத்து அடிதடி லெவலுக்கு முன்னேறி விட்டார். காமெடி நடிகர் விவேக் மரம் நடும் இயக்கத்தை வழி நடத்துவதுபோல பாமக சார்பில் சந்தானத்தை வைத்து மரம் வெட்டும் இயக்கம் ஒன்றை அதிரடியாக துவக்கி தமிழகத்தை பொட்டல் காடாக்கி ஆட்சியைப் பிடிப்போம்.” என்றார்.

பகிர்

There are no comments yet