சென்னை: விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் தேனாண்டாள் நிறுவன தயாரிப்பில் 120 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக மெர்சல் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். மெர்சல் திரைப்படம் வெளியாக சில நாட்களே இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் இன்று திடீரென சந்தித்தார். சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் உள்ள முதல்வர் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. மேலும் மெர்சல் படம் வெளியாக உள்ள நிலையில் முதல்வரை ஒரு மணி நேரம் சந்தித்து நடிகர் விஜய் பேசியுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மெர்சல் திரைப்படம் வரும் புதன்கிழமை தீபாவளியன்று திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் மெர்சல் என்ற தலைப்பில் முதல் சிக்கல் துவங்கியது. இது தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது. படத்தில் உள்ள சில காட்சிகளுக்கு விலங்குகள் நல வாரியம் சான்றளிக்கவில்லை எனக்கூறி இன்னும் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. இதனால், படம் குறிப்பிட்ட நாளில் வெளியாகுமா? என்ற கேள்வி அவரது ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று நடிகர் விஜய் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு வருகை தந்து, அங்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஒரு மணி நேரம் சந்தித்து பேசினார்.

அப்போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உடனிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த சந்திப்பு குறித்து நடிகர் விஜய் கப்சா நிருபரிடம் கூறுகையில் திரையரங்கு கட்டண நிர்ணயம் தியேட்டர்காரர்கள் இஷ்டம், கேளிக்கை வரி அரசுகஜானாவை நிரப்புவது. எனக்கு வாரிக் கொடுக்க முட்டாள் ரசிகன் இருக்கான். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் எனது தலைவா படம் பல சிக்கல்களை சந்தித்ததை நாடறியும். கேரளாவில் படம் ரிலீஸ் ஆனது ஆனால் தமிழகத்தில் ரிலீசாகவில்லை. அப்போது நான் அடைந்த துயரத்திற்கும் மன உளைச்சலுக்கும் அளவில்லை. அது போல் இப்போது மத்திய நிறுவனமான சென்சார்போட்டு உதவியுடன் மெர்சல் படத்திற்கு சிக்கல் கொடுக்கிறார்கள். தற்போது மக்கள் விரோத ஆட்சி செய்யும் எடுபிடி பழனிசாமி நேரில் சந்தித்து எச்சரிக்கை விடுத்துள்ளேன், ‘ஒரு குழந்தை உருவாக 3 மாசம் தேவைபடுது, ஒரு பட்டதாரி உருவாக 3 வருஷம் தேவைப்படுது, ஒரு தலைவன் உருவாக ஒரு யுகமே தேவைபடும்.. உங்களுக்கு முதல்வராக இருக்க பிரபலம் பத்தாது’ என்று மெர்சல் பட வசனம் பேசிக் காட்டினேன். அவர் மிரண்டு (மெர்சலாகி) விட்டார். மேலும் தலைவா படத்தில் வருவது போல் அண்ணாதுரையின் வாரிசாக எல்லாம் நடிக்கவில்லை, எனது சுறா படம் போல கமர்சியலாக ரஜினியின் மூன்று முகம் படத்தை பீலா மன்னன் இட்லிகுண்டா அட்லி டைரக்சனில் உல்டா செய்து நடித்துள்ளேன். தினகரன் ஆட்சியை கவிழ்க்கும் வரை ஒன்றும் செய்ய மாட்டேன். ரஜினி மறைமுகமாக சொன்னது போல் போர் வரும் வரை என்று சொல்லாமல் நேரடியாகவே தேர்தலில் குதிப்பேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.” இவ்வாறு விஜய் கூறினார்.

பகிர்

There are no comments yet