விஜய் நடித்த மெர்சல் படம் தீபாவளி பண்டிகை அன்று வெளியானது. இந்த படத்தில் ஜிஎஸ்டி, மருத்துவத் துறை, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவை குறித்து நடிகர் விஜய் பேசும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இது பாஜகவை கோபத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டது. ஆட்சேபகரமான வசனங்களை நீக்க வேண்டும் என்று தமிழிசை கண்டணம் தெரிவித்தார். பின்னர் எச்.ராஜா ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கண்டனம் தெரிவித்தார். ஆண்டி இண்டியன் முழக்கமும் இட்டார். ‘மெர்சல்’ படத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில் நடிகர் விஷால் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் நடிகர் விஷால் மெர்சலை பாராட்டி அறிக்கை விடுத்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், மெர்சல் படத்தில் சமூக கருத்துகளை எடுத்துக் கூறியதற்கு நடிகர் விஜய், இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் முரளி ஆகியோருக்கு நன்றிகளும், பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் சில வசனங்களையும், காட்சிகளையும் ரத்து செய்ய கோரியிருப்பது கருத்து சுதந்திரத்துக்கு விடப்பட்ட மிரட்டல் ஆகும். ஹாலிவுட் படங்களில் அமெரிக்க அதிபரையே கிண்டல் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதுதான் ஜனநாயக சட்டம் அனைவருக்கும் வழங்கியிருக்கும் கருத்து சுதந்திரம். சென்சார் செய்யப்பட்ட ஒரு படத்தை மறு சென்சார் செய்ய கூறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. தான் நினைத்ததை செய்யும் முழு கருத்து சுதந்திரம் எல்லாருக்கும் உண்டு. எல்லோரையும் திருப்திப்படுத்தும் முறையில் படம் எடுப்பது இயலாத காரியம். திரைப்படத்தில் இடம்பெறும் வசனங்களை அரசியல் கட்சிகளே தீர்மானித்தால் பின்னர் சென்சார் போர்டு எதற்கு என்று நடிகர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையே ஆளும்கட்சிக்கு எதிராக பேச ஆட்சியை கவிழ்க்க இலவு காத்த கிளியாக இருக்கும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் கட்சி திமுக என்று “விமர்சனங்களுக்கு எதிரான பாஜகவின் நடவடிக்கை மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமானது. பேச்சு மற்றும் படைப்பு சுதந்திரத்திற்கு திமுக எப்போதும் துணை நிற்கும்” என்று ஆங்கிலத்தில் ட்வீட் செய்துள்ளார். ’மெர்சல்’ விவகாரம் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ‘மெர்சல்’ திரைப்படத்துக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார். ‘மிஸ்டர் மோடி, திரைப்படம் என்பது தமிழ் கலாசாரம் மற்றும் மொழியின் பெருமையைப் பிரதிபலிப்பதாகும். தமிழர்களின் பெருமையை மதிப்பிழக்கச் செய்ய முயல வேண்டாம்’ என்று ட்வீட் செய்து, ‘மெர்சல்’ திரைப்படத்தை எதிர்க்கும் பா.ஜ.க-வினருக்கு, பதிலடிகொடுத்துள்ளார் ராகுல் காந்தி. மேலும், பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாகக் குறிப்பிட்டு ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளதால், மெர்சல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஈழப் படுகொலையை பேசும் படத்தையும், ராஜிவ் காந்தி கொலை வழக்கை பற்றி பேசும் ‘குற்றப்பத்திரிகை’ படத்தையும் காங்கிரஸ் நசுக்கியதை ராகுல் மறந்து விட்டார் போலும் என்று அங்கலாய்த்த கப்சா நிருபரிடம் விஷால் பேசுகையில், கோடிக்கணக்கில் செலவு செய்து டாக்டருக்கு படிக்கிறவர்கள் 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க வேண்டும், நாங்கள் (நடிகர்கள்) மூணாவது படத்திலேயே 12 கோடி சம்பளம் கேட்போம். அது எங்கள் இஷ்டம். எனது துப்பறிவாளன் படம் போல் மெர்சலும் முதல் நாளே தமிழ்ராக்கர்சில் வெளிவந்துவிட்டது. விமர்சனம் செய்வதற்காக தமிழிசை, ராஜா, பொன்.ராதா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தில் பார்த்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்து சைபர் கிரைமில் நடிகர் சங்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்படும். என்றார்.

பகிர்

There are no comments yet