சென்னை: தமிழ்நாட்டில் உயிருடன் இருப்பவர்களின் படங்களுடன் பேனர்கள், ஃப்ளெக்ஸ் போர்டுகளை, பதாகைகளை வைப்பதற்கு தடைசெய்யும் வகையில் விதிகளை உருவாக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேனர் வைப்பதைத் தடைசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழ்நாட்டில் திறந்தவெளி இடங்களை அழகாக வைத்துக்கொள்ளும் நோக்கில், எந்த ஒரு சுவற்றிலும் அனுமதி இல்லாமல் எழுதுவதைத் தடுக்கவும், பேனர்கள் வைக்கும்போது உயிருடன் இருப்பவர்களின் படங்களை அதில் பயன்படுத்தாமல் இருக்கவும் ஏற்ற வகையில் தமிழ்நாடு திறந்தவெளி இடங்களை சீர்குலைப்பதைத் தடுக்கும் சட்டத்தை திருத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இம்மாதிரி பேனர்களை வைப்பவர்கள், தங்களை படங்களையே அதில் போட்டுக் கொள்ளக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இது தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திரு லோச்சன குமாரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். தனக்குச் சொந்தமான இடத்தின் முன்பாக ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்கள், அந்த அமைப்பின் பெயர்ப் பலகையுடன் கொடி ஒன்றை வைத்திருப்பதாகவும் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவித்தபோது, காவல்துறையினர் தன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியதாகவும் தனது மனுவில் திரு லோச்சன குமாரி கூறியிருந்தார். ஆகவே, தனக்குச் சொந்தமான இடத்தின் முன்பாக உள்ள பலகை, கொடி ஆகியவற்றை மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற வேண்டும், அதற்கு காவல்துறை உதவ வேண்டுமென உத்தரவிடக் கோரி இந்த மனுவை திருலோச்சன குமாரி தாக்கல் செய்திருந்தார். நீதிமன்ற உத்தரவில் இனிமேல் உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இந்த விஷயத்தில் தலைமைச்செயலாளர் கண்காணிப்பாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து தகவலறிந்த செயல் தலைவர் ஸ்டாலின் கப்சா நிருபரிடம் கூறியது: ” எனது சிங்கார சென்னை திட்டத்தை பட்டி டிங்கரிங் பார்த்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மட்டுமின்றி உச்ச நடிகர்களின் ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். குறிப்பாக இனிமேல் உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது அவர்களுடைய ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு 100 அடி, 150 அடி உயர பேனர்கள் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் இன்று சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு காரணமாக இனிமேல் யாரும் பேனர்கள் வைக்க முடியாது. அடுத்து ரஜினி நடிக்கும் 2.0, காலா கமல் நடிக்கும் விஸ்வரூபம் 2 இந்தியன் 2 மற்றும் இதர நடிகர்களின் படங்கள் மெர்சல் காட்டாமல் இருக்க இந்த அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைவர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா இருவருக்கும் ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் வீட்டில் இருக்கும் தமிழீன தரகர் கருணாநிதிக்கு கட் அவுட் வைக்க இன்னும் சில வருடங்கள் ஆகும் போலிருக்கிறது. எதிர்வரும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டாங்களில் மோடியிடம் கையேந்தி நடைபிணமாக வாழும் ஓபிஎஸ் ஈபிஎஸ் படங்கள் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை..” என்று புலம்பினார்.

பகிர்

There are no comments yet