சென்னை: விஜய் நடித்த மெர்சல் படம், பல்வேறு தடைகளை தாண்டி தீபாவளிக்கு வெளியானது. அது முதலே அணுகுண்டு வெடித்தது போல் சர்ச்சையும் சண்டை சச்சரவுகளும் ஆரம்பமாகி விட்டன. கிளிமாக்ஸ் காட்சியில் ஏழு சதவிகிதம் ஜி.எஸ்.டி. வசூலிக்கும் சிங்கப்பூர் அரசு இலவச மருத்துவ வசதி அளிக்கிறது, ஆனால் இந்தியாவில் 28 சதவிகித ஜி.எஸ்.டி. வசூலிக்கும் இந்திய அரசு இலவச மருத்துவம் தர மறுக்கிறது என விஜய் வசனம் பேசி உள்ளார். அதற்கு பாஜக தலைவர்கள் தமிழிசை, எச்.ராஜா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து ட்விட்டர் வலைதளத்தில் கருத்து பதிவிட்ட எச்.ராஜா நடிகர் விஜய் வருமான வரி ஏய்ப்பு செய்தார் எனவும் குற்றஞ்சாட்டி இருந்தார். ஆனால் விஜய் முறையாக வருமான வரி செலுத்தி உள்ளார் என அவரது தரப்பினர் கூறிவருகின்றனர். 2015ல் நடிகர் வரி ஏய்ப்பு செய்தது உண்மை தான் என வருமான வரித்துறையினர் தெரிவித்து உள்ளனர். புலி என்ற டப்பா படத்தில் நடித்து ரசிகர்களை கொன்ற விஜய் அதில் நடித்ததிற்காக பெற்ற சம்பளத்தில் 5 கோடி ரூபாயை கணக்கில் காட்டவில்லை. இது சோதனையில் உறுதியானது. ஒப்புக்கொண்ட விஜய் வரி பாக்கியை செலுத்தியது தெரியவந்துள்ளது. விஜய் கூடுதல் வரி செலுத்துவதற்கான ஆவணத்தை 2016 துவக்கத்தில் தாக்கல் செய்தார். அதனால் அவர்மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை,

ஆனால் காம்பவுண்டிங் டேக்ஸ் கட்டிய நபர் மீண்டும் வரி ஏய்ப்பு செய்தால், சிறைக்கு செல்ல வழிவகை உண்டு. விஜய்க்கு கடைசி வாய்ப்பு, இளம் வயதிலேயே முடிந்து விட்டது. இனி ஒருமுறை மீறினாலும் நடவடிக்கை எடுக்கப்படும். என தெரிவித்தனர். இதற்கிடையே மெர்சல் படத்தை இணையத்தில் பார்த்ததாக எச்.ராஜா தொலைக்காட்சி பேட்டியில் கூறியதை கண்டித்தார் விஷால். எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என மிரட்டல் விடுத்தார். அதை தொடர்ந்து நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் உள்நோக்கம் இருந்தால் அதை சந்திக்க தயாராக இருப்பதாகவும், நேர்மையாக தொழில் செய்வதால் எந்த பயமும் இல்லை என்றும் விஷால் தெரிவித்தார். விஷால் சினிமா தயாரிப்பு நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தியுள்ளதா என்பதை சரிபார்க்க டிடிஎஸ் பிரிவு அதிகாரிகள் 4 பேர் வந்து சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. விஷால் கூறும்போது, ‘‘ஒரு திரைப்படத்தில் தயாரிப்பாளரின் உழைப்பும், பங்கும் பெரியது. எனவே, அனைவரும் தயவுசெய்து திரைப்படத்தை திரையரங்குக்கு சென்று பார்க்க வேண்டும். பெரிய பொறுப்பில் இருப்பவர்களே ஆன்லைனில் படம் பார்ப்பதாக சொல்லும்போது வலிக்கிறது. வருமான வரித் துறையினர் டிடிஎஸ் குறித்த சோதனைக்காக என் அலுவலகத்துக்கு வந்ததாகத்தான் தெரிவித்தனர். ‘சண்டக்கோழி 2’ படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் அப்போது அலுவலகத்தில் நான் இல்லை. இந்த சோதனையை சாதாரணமாகவே கருதுகிறேன். உள்நோக்கத்துடன் வருமான வரி சோதனை நடந்திருந்தால் அதை சந்திக்கத் தயாராகவே இருக்கிறேன். நேர்மையாக தொழில் செய்து வருகிறேன். வருமான வரியும் செலுத்தி வருகிறேன். அதனால் நான் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை’’ என்றார்.

இந்நிலையில், விஷாலை மிரட்டுவதற்காகவே அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று திரைப்படத் துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். நமது கப்சா நிருபர் கூறும்போது. “சினிமாக்காரர்கள் பேச்சும் குடிகாரர்கள் பேச்சும் ஒன்று, அது விடிஞ்சா போச்சு இது படம் முடிஞ்சா போச்சு.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சொன்னது போல் கோடிக்கணக்கில் செலவு செய்து டாக்டருக்கு படிக்கிறவர்கள் ஐந்து ரூபாய் மருத்துவம் பார்க்கணும் ஆனால் மூணாவது படத்துலேயே இவனுக பன்னிரண்டு கோடி சம்பளம் கேட்பார்கள். சம்பாதிப்பதிப்பதற்கே வரிகட்டாமல் ஏய்ப்பவர்கள் ஆட்சிக்கு வந்தால் வரிப்பணத்தைதான் சுருட்டுவார்கள். கள்ள பணம் மிக விளையாடும் துறைகளில் தமிழக திரையுலகமும் ஒன்று. நாட்டிற்கு விரோதமாக செயல் பட்டு கொண்டே நாட்டு பற்றை பற்றி பேசுவார்கள் நமது ஹீரோக்கள். ஊழலுக்கு வீர வசனம் பேசி, கள்ள பணம் வாங்கும் புனிதர்கள் இவர்கள். வெறும் 50 ரூபாய் பெறாத டிக்கெட்டை 1000 ரூபாய்க்கு விற்பார்கள். 10 ரூபாய் பாப் கார்ன் 60 ரூபாய். தண்ணீர் பாட்டில் விலை அநியாயம். இந்த கொள்ளைகளை எதிர்த்த போராட மாட்டார்கள். ஏன் எனில் இவர்களும் அந்த கொள்ளையில் கூட்டு .
இவர்கள் ஊர் மெச்ச, ஊழலை எதிர்த்து அநியாயத்தை எதிர்த்து திரையில் மட்டும் போராடுவார்கள்.” என்றார்

பகிர்

There are no comments yet