சென்னை: சென்னை: ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வு சாதாரணமானதுதான் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை ரூ.13.5 என்று வழங்கப்பட்டு வந்த நிலையில், திடீரென ஒரு கிலோ சர்க்கரை விலையை ரூ.25 என தமிழக அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் இந்த விலை உயர்வு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கூட்டுறவு சங்க கடைகளில் போதுமான கையிருப்பு உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கப்படும். நியாயவிலை கடைகளில் பருப்பு, பாமாயில் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ரேஷன் கடைகள் மூடப்பட்டால் கூட, அருகேயுள்ள பிற பகுதிகளில் திறக்கப்படும். சர்க்கரை விலையேற்றம் சாதாரணமானதுதான். எதிர்க்கட்சிகள் என்றால் குறை சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். டெங்கு பிரச்சினை பெரிதான நிலையில், இப்போது அது சரி செய்யப்பட்டுள்ளது

சர்க்கரைக்கான மானியத்தை மத்திய அரசு குறைத்த காரணத்தினால் தான் ரேசன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இதனால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றார். தேவையான அளவு அரிசி, கோதுமை, பாமாயில் ஆகியவை ரேஷன்கடைகளுக்காக பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். வடகிழக்கு பருவமழை காலத்தில் விவசாயிகளுக்கு தேவையான விதைகள் உரங்கள் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நமது கப்ஸா நிருபரிடம் பேசும்போது, தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே சர்க்கரை வியாதி எனப்படும் டயபெடீஸ் நோய் அதிகரித்துள்ளது. இதற்க்கு காரணம் குறைந்த விலையில் சர்க்கரையை ரேஷனில் விற்பதுதான். சர்க்கரை விலையை உயர்த்துவதன் மூலம் வெங்காய முடியாத அளவுக்கு செய்து, சர்க்கரை நோயை குறைத்து விடலாம். இதற்காக சுகாதார அமைச்சர் உத்திரவின் பேரில் இந்த விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது எ

பகிர்

There are no comments yet