சென்னை: கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கருணாநிதியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. நுரையீரல் மற்றும் தொண்டை தொற்று காரணமாக, சுவாசக் கோளாறு ஏற்பட்டதால், ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஜெயலலிதாவிற்கு வைத்தது போக மீதமிருந்த ட்ரக்கியாஸ்டமி குழாய்களை வைத்து செய்த தீவிர சிகிச்சைக்குப் பிறகு நலம் பெற்று தற்போது ஓய்வில் இருக்கிறார். அதனால் தேய்ந்து போன் ரெக்கார்டு குரலை கேட்காமல் திமுக தொண்டர்கள் கவலையில் உள்ளனர். மூத்த மகன் மூர்க்கத்தனமான அழகிரி குறித்த, ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் அமர இயலாத மன வருத்தமே அவருடைய உடல்நிலை பாதிக்கக் காரணம் என்றும் சொல்லப்பட்டது. இதனால் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை அவர் தவிர்த்து வந்தார்.
தற்போது கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, வைகோ உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அவரை சந்தித்து நீலிக் கண்ணீர் வடித்து வருகிறார்கள். சமீபத்தில் அரங்கேறிய சுய தம்பட்டமான முரசொலி விழாவில் கலந்து கொள்ள முடியாத கருணாநிதி, புகைப்படக் கண்காட்சியை வீல் சேரில் அமர்ந்த படி கண்டு களித்தார். தற்பொழுது, அவரது மகன் அழகிரி வயிற்றுப் பேரனுக்கும், மகள் வயது நடிகைகளை கட்டிப்பிடித்து நடித்து வரும் நடிகர் விக்ரமின் மகளுக்கும் நடந்த திருமணம் மூன்று மனைவிகளை கட்டிய கருணாநிதி தலைமையில் நடந்தது. இது தி.மு.க. தொண்டர்களுக்கு உற்சாகம் தந்தது. இந்தநிலையில், சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதற்காக கோபாலபுரம் வந்த ராமதாஸை வீட்டு வாசல் வரை வந்து ஸ்டாலின் வரவேற்றார். ராமதாஸுடன் ஜி.கே. மணி மற்றும் மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். சுமார் 15 நிமிடங்கள் அளவு நீடித்தது இந்தச் சந்திப்பு.
பின்னர் கப்சா நிருபரிடம் பேசிய ராமதாஸ், ‘ நான் சென்ற வர்தா புயலில் மரம் வெட்டும் போது எனது கோடாலியை தொலைத்து விட்டேன். அதனால் கோடாலி இல்லாமல் கோபாலபுரம் சென்றேன். கோடாலி இல்லாமலேயே கருணாநிதி என்னை அடையாளம் கண்டுகொண்டார் என்பதில் எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. என்னை யார் என்று கருணாநிதியிடம் ஸ்டாலின் கேட்டபோது, அவருக்கு எனது பெயரை முழுமையாக உச்சரிக்க முடியவில்லையே தவிர, என்னைப் புரிந்துகொள்கிறார். கையை செங்குத்தாக மரக்கிளை வெட்டுவது போல் சைகை காட்டினார். கருணாநிதி பேச முயற்சி செய்கிறார். புரட்டுக் கதைகளை மேடையில் அவிழ்த்துவிடும் பழைய நிலைக்கு நிச்சயம் வருவார். ஜி.கே. மணி, மூர்த்தி ஆகியோர்களின் தலையில் கைவைத்து அவர் ஆசீர்வாதமே செய்தார். முன்னைவிட தற்போது அவர் உடல்நிலம் தேறிவருகிறது. மேலும், அவர் உடல்நிலை தேறி பழைய நிலைக்கு அதாவது ஊழல் ஆசானாக உன்னத நோக்கோடு தமிழகத்தை சுரண்ட மீண்டு வருவார் என்று நம்புகிறேன். நீங்கள் நூறு வயதைக் கடந்தும் ஊழல் அரசனாக வாழ வேண்டும் என்று அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறும்போதும், தொலைபேசியில் வாழ்த்துக் கூறும்போதும் நான் கூறுவதுண்டு’ என்று ராமதாஸ் தெரிவித்தார்
பகிர்

There are no comments yet