சென்னை: தினத்தந்தி பவளவிழாவுக்கு வந்த மோடி, உடல்நிலை குன்றி வீட்டில் ஓய்வில் இருக்கிற தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்துவிட்டுச் சென்றிருக்கிறார். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள், சரச்சைக்குரிய பிரபலங்களுடனான சந்திப்புகளை மிகக் கவனமாகத் தவிர்ப்பவர் பிரதமர் மோடி. அப்படிப்பட்டவர் இன்னும் சில தினங்களில் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தப்போகும் ஒரு வழக்குடன் தொடர்புடைய கட்சியின் தலைவரைச் சந்தித்துவிட்டுச் சென்றிருப்பது ஆச்சர்யமளிக்கிறது. தமிழகத்தில், ஜெயலலிதா மறைவுக்குப்பின் அ.தி.மு.க இரு அணிகளாக பிளவுபட்டது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான கண்துடைப்பு விசாரணை கமிஷன் அமைத்தால் ஒன்றுசேர்வது பற்றி பரிசீலிப்பதாகச் சொன்ன ஓ.பி.எஸ் அணி அவ்வாறே கமிஷன் அமைக்கப்பட்டதைத்தொடர்ந்து தனது அணியுடன் அ.தி.மு.க-வில் ஒன்றிணைந்தார். தமிழக அரசியிலில், கடந்த10 மாதங்களாக நிகழ்ந்துவரும் இந்தச் சம்பவங்களின் பின்னணியில் பி.ஜே.பி இருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி என புலனாகிறது.

மத்திய அரசுடகூட்டணியால் ன் அ.தி.மு.க அமைச்சர்களின் அணுகுமுறையும் ஜெயலலிதாவுக்குக் காட்டிய அதே பவ்யத்தை அவர்கள், கூன்முதுகுடன் மோடிக்கும் காட்டிவருவது இதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன் ”பாராளுமன்றம் மற்றும் தமிழக சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம்” என பி.ஜே.பி எம்.பி இல.கணேசன் கருத்துத் தெரிவித்திருந்தார். இதன்படி ”தமிழகத்தில் ஒன்றுபட்ட அ.தி.மு.க-வுடன் கூட்டணி கண்டு கணிசமான இடங்களைத் தமிழக சட்டசபையில் பெறுவது பி.ஜே.பி-யின் எதிர்காலக் கணக்கு” என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், இன்று தமிழகம் வந்த பிரதமர் மோடி, தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்துவிட்டுச் சென்றிருக்கிறார். கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த அவரை ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் வரவேற்றனர். நாடே பரபரப்பாக எதிர்நோக்கியிருக்கும் ஒரு வழக்குடன் தொடர்புடையவர், பிதரமரைச் சந்தித்து சால்வை வழங்குவது நல்ல மரபல்ல. ”தனிப்பட்ட சந்திப்பு என்பதால், பிரதமர் வட்டாரத்தினால் அவற்றை தவிர்க்கமுடியவில்லை” என்கிறார்கள். ஆனால், ”தி.மு.க தலைவருடனான இந்தச் சந்திப்பு பல அரசியல் வியூகங்களுக்கும் அடித்தளம் வகுத்திருக்கிறது” என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். இதுகுறித்து பி.ஜே.பி பிரமுகரும் நடிகருமான எஸ்.வி சேகரிடம் கப்சா நிருபர் அளவளாவிய போது, “5 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த ஒருவர், பழுத்த அரசியல்வாதி, உடல்நிலை குன்றியிருக்கும் நிலையில், அவரைச் சந்திக்க விரும்பி இது நிகழ்ந்தது. அதுமட்டுமன்றி தமிழகத்தில் கடந்த கால அரசியலில், கருணாநிதியின் பணிகளை, ஊழல் பித்தலாட்டாங்களை அறிந்து அவர் மீது பிரதமருக்குப் பெருமதிப்பு உண்டு..ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான தி.மு.க-வின் கனிமொழி போன்ற ஒருசில தலைவர்கள் தவிர, தி.மு.க. மீதோ அதன் தலைமை மீதோ பிரதமருக்கு எந்த வெறுப்பும் கிடையாது. வட இந்தியாவில் கொள்கை அடிப்படையில், தலைவர்கள் ஒருவருக்கொருவர் மேடையில் மோதிக்கொண்டாலும் தனிப்பட்ட கொள்ளை பற்றிய திட்டங்களை பகிர்ந்து கொள்ள இம் முறையிலான சந்திப்புகளில் நட்பு பாராட்டுவார்கள். இந்தச் சந்திப்பில், கருணாநிதிக்குப் புதிய உடைகள் அணிவித்து தயார் நிலையில் அவரது வழக்கமான அறையில் காத்திருக்கவைத்தார்கள்.

கோபாலபுரம் வீட்டுக்கு வருகைதந்த மோடி, கருணாநிதியின் அருகில் வந்ததும் அவரை கருணாநிதிக்கு அறிமுகம் செய்தார் ஸ்டாலின். உற்றுப்பார்த்த கருணாநிதியிடம் ”ஹவ் ஆர் யு…?” என ஆங்கிலத்திலும் பின்னர் இந்தியிலும் சில வார்த்தைகளைப் பேசினார் மோடி. கருணாநிதி பாதி புரிந்தும் பாதி புரியாமலும் அவருக்குப் பதிலளிக்க முனைந்தார். ட்ரக்கியஸ்டமி குழாய் தடுத்ததால் பேச முடியவில்லை. 2ஜி வழக்கு தீர்ப்பு ஹிந்தியில் தான் வரும் அதை படிக்க கருணாநிதிக்கு ஹிந்தியில் பேச்சுப் பயிற்சி அளிக்க சொல்லிவிட்டு, கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடமும் நலம் விசாரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் மோடி. தனிப்பட்ட முறையில், ஒரு தலைவரை நலம் விசாரிப்பதற்காக நிகழ்ந்த இந்தச் சந்திப்பில், வழக்கைக் காரணம் காட்டி அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரை (கனிமொழி) ஒதுக்கும் அளவு அரசியல் நாகரிகம் தெரியாதவர் அல்ல மோடி” என்றார் அவர். தேர்தல்கமிஷனில் தங்களின் தேர்தல் சின்னத்திற்கு உரிமைக்கோரி அதிமுகவின் இரு அணிகளும் மல்லுக்கட்டி வரும் நிலையில், ஆவணங்களின்படி டி.டி.வி தினகரன் அணிக்கே தற்போது வாய்ப்பு சாதகமாக உள்ளதாக மத்திய அரசுக்குத் தகவல் சென்றதாகச் சொல்லப்படுகிறது. ஆளும்கட்சியானாலும் ஓர் எல்லையைத்தாண்டி தேர்தல் கமிஷனை அதிகாரம் செய்வது இயலாத காரியம் என்பதால் மத்திய அரசுக்கு இது சற்று கிலி கொடுத்துள்ளது. சின்னம் தினகரன் அணிக்குச் சென்றால் தானாகக் கட்சியின் அதிகாரங்களும் தொண்டர்களும் தினகரன் அணிக்குச் செல்வார்கள். சின்னம்மா பிடி கொடுக்க மாட்டார். அப்போது அதிமுகவின் எடப்பாடி அணி பலமிழக்க வாய்ப்புண்டு. அப்போது அதிமுகவுடன் தேர்தல் உடன்பாடு வைத்து தமிழகத்தில் காலுான்ற நினைத்த தங்கள் எண்ணமும் ஈடேறாது என்பதோடு கடந்த காலச் கைது மற்றும் ரெய்டு சம்பவங்களால் தினகரன் தலைமையிலான அதிமுகவுடன் சமரசம் செய்துகொள்ளவும் முடியாது என்பது பா.ஜ.க மேலிடத்திற்கு நன்கு தெரியும். தி.மு.க வுடன் ஓர் இணக்கத்தை இப்போதே கடைபிடித்தால் அது தேர்தல் நேரத்தில் பயன்படும் எனக் கணக்குபோட்டு இந்தச் சந்திப்பைப் பயன்படுத்திக்கொண்டது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். பா.ஜ.கவின் இந்த மூவ் அறியவந்ததால்தான் ஸ்டாலின் தன் எழுச்சிப்பயணத்தை மழையைக்காரணம் காட்டி ரத்து செய்தார் என்கிறார்கள். இது குறித்து தகவலறிந்த எடப்பாடி கப்சா நிருபரிடம் கண்ணீர் விட்டார்..” தினத்தந்தி பவள விழாவில் கலந்து கொள்ள வரும்போது, பத்திரிகை சுதந்திரத்திற்கு ஒரு பன்ச் வைக்க வேண்டும் என்று பல நாள் பங்காளி கார்டூனிஸ்ட் பாலாவை கைது செய்து அலைக்கழித்தேனே, எல்லாம் மோடிக்காக தான், ஆனால் என் நிர்வாணப் படம் உலக அளவில் பிரபலமாகியது தான் மிச்சம் என்றார்..”

பகிர்

There are no comments yet