சென்னை: இந்து தீவிரவாதிகள் என விமர்சித்ததால் நடிகர் கமல்ஹாசன் மீது வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதை வரவேற்று நடிகர் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்னையில் மோதிக்கொள்ளும் எஸ்.வி.சேகரும், கமல்ஹாசனும் கிட்டட்தட்ட 40 ஆண்டுகால நண்பர்கள். எஸ்.வி.சேகர் சினிமாவில் நடிக்கத் தொடங்கியதே கமல் படத்தில் தான். அரசியல் மற்றும் கொள்கை ரீதியாக மோதிக்கொள்ளும் இவர்கள் ஆரம்ப காலத்தில் நெருங்கிய நண்பர்கள். இந்து தீவிரவாதம் என வார இதழ் கட்டுரை ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பா.ஜ.க-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் நடிகர் கமல்ஹாசன் மீது உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி நீதிமன்றத்தில் கமல் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அதை குறிப்பிட்டு நடிகர் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: ‘காசிக்கு போய் கங்கையில் மூழ்கி வர இது ஒரு நல்ல சந்தர்ப்பம். வாரணாசி ஹோட்டல் ரூம்ல பைப்புல வர தண்ணி கூட கங்கை நீர்தான்’ என குறிப்பிட்டுள்ளார். நண்பராயினும், கமல் அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கு முன்பே, இப்போது கமலுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.
விசு இயக்கிய ‘சிம்லா ஸ்பெஷல்’ படத்திற்குப் பிறகு எஸ்.வி.சேகர் சிறு பட்ஜெட் குடும்பப் படங்களில் நடிக்கத் தொடங்கி பிரபலமானார். எஸ்.வி. சேகர் சிம்லா ஸ்பெஷல் படத்தில் துரோகி சுயநலவாதி வில்லனாக நடித்தார், இன்றும் அதே. பா.ஜ.க-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் கமலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். தற்போது எஸ்.வி.சேகருடன் இணைந்து, இயக்குநர் விசு, கமலின் செயல்களை விமர்சித்து ஃபேஸ்புக்கில் பதிவொன்றை எழுதியுள்ளார். “ஹலோ கமல்ஜீ… நீங்க நடிச்ச ‘சிம்லா ஸ்பெஷலுக்கு’ கதை திரைக்கதை வசனம் எழுதின விசு நான். பெரிய அரசியல்வாதி ஆயிடுவீங்க வாழ்த்துக்கள். இந்து மதமும், இந்துக்களும் வடிவேலுவோட பாஷைல சொல்லப் போனா ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க’ ங்கறதைப் புரிஞ்சுண்டு, அவங்களை சீண்டி விட்டா, யாராவது எங்கேயாவது எகிறுவான், அவனை வச்சு பாலிடிக்ஸ் பண்ணலாம்னு யாரோ ஒரு குள்ள நரி உங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கு. ‘இந்து மதம் தீவிரவாதிகள் இல்லாத மதம் இல்லைன்னு சொல்ல முடியாது’ ன்னு நீங்க எதையோ வழக்கம் போல தலைய சுத்தி வளைச்சு மூக்கைத் தொடப்போக, யாரோ ஒருத்தன் எங்கேயோ மூலைல ‘உங்களைத் தூக்கில போடணும், சுட்டுக் கொல்லனும்னு’னு கதறப்போக, அரசியல்ல போணி ஆனவன் ஆகாதவன், அரசியல்ல விளங்கினவன் விளங்காம போனவன், அரசியல்ல கொடிகட்டி பறக்கறவன் கொடியை ஆடுமாடு மேய விட்டவன் எல்லாரும் நான் / நீன்னு போட்டி போட்டுக்கிட்டு டிவி முன்னாடி வந்து வரிசைல நிக்கறாங்க.. உங்களுக்கு பொழுது போக வேணாமா, அவங்கவங்க மேதா விலாசத்தைக் காட்ட… ஊடகத்துக்கு அடுத்த 15 நாளைக்குத் தீனி கிடைச்சாச்சு.. அடுத்தது இருக்கவே இருக்கு..பாயிண்ட்ஸ் நான் எடுத்துத் தரேன் .. பார்ப்பனன், ஆரியக்கூட்டம், கைபர்/போலன் கணவாய், ஆப்கானிஸ்தான்ல ஆடு மாடு மேய்ச்ச கூட்டம் .. இப்படி ஒவ்வொண்ணா எடுத்து விடுங்க, படம் பிச்சுக்கிட்டு போகும் பாவம் உங்களுக்கும் பொழுது போக வேணாமா… ஆமாம் உங்களுக்கு பி.ஜே.பி மேல அப்படி என்ன சார் கோவம்? சென்சார் போர்ட்ல லிவிங் டு கெதர் கவுதமியை அதிகாரி ஆக்கினாங்களே.. அதுவா? அதெல்லாம் இருக்காது அவர் இதுக்கெல்லாம் மேல பாத்தவர்ன்னு நான் சொல்லிட்டேன் இருந்தாலும் அது இருக்கட்டும் சார் ஒழுங்கா வரி கட்டறீங்களாமே அப்படியா? சூப்பர் புக்குல காட்டற வரவுக்குத் தானே? அதாவது 100 ரூபாய் வரும்படின்னா, அதை 40 ரூபாய்ன்னு புக்குல காட்டி, அந்த 40 ரூபாய்க்கு ஒழங்கா வரி கட்டறீங்க அதானே அப்ப மீதி 60 ரூபாய் கருப்பு தானே, பப்ளிசிட்டி ஸ்டன்ட் தானே, புரியும்படியா சொல்லுங்க.. நான் ஒரு ஞானசூனியம். ஒரு யோசனை… பையில ஒரு மைக் வச்சுக்குங்க… நாளைக்கே நெய்வேலி போங்க… பழுப்பு நிலக்கரி சுரங்கத்து மேல ஏறி நின்னு சும்மா சுத்தி வேடிக்கை பாருங்க… கூட்டம் கூடும் அது போதும் அதுக்குப் பேரு தான் பப்ளிசிட்டி ஸ்டண்ட், ‘உனக்கென்ன மேலே நின்றாய் ஓ கமலஹாசா’ ன்னு பாட்டு எங்கேயோ கேக்குது ஜமாய்ங்க, என்று திட்டி தீர்த்துள்ளார்.
__________________________________________________________________________
கமல் அவர்களே .. உங்கள் நடிப்பை ரசிக்கிறவன் என்பதற்காக தமிழனை மதிமயக்கத்திலேயே வைத்திருக்கலாமென்ற எண்ணம் இனி ஈடேறாது எழுபதுகளில் நடந்த தவறுகள் இனியும் இங்கே நடக்காதென்பதை காலம் உணர்த்தும்
..
கட்சி நடத்த நிதியை ரசிகர்கள் தருவார்கள் மிக கவனமாக காசை எடுக்காமல் அடுத்தவன் தலையை தடவுகிறீர்.. கொள்கைக்காக கட்சி தொடங்கினால் தாமாக முன் வருவார்கள். வெறும் டீயும் பண்னையும் தின்றுவிட்டு கட்சி பணியாற்றுவான் .. ரசிகன் தருவான் என்கிற போதே முதலீடு செய்ய சொல்வது புரிகிறது..
முதலில் எதேனும் ஒன்றில் தெளிவாக நில்லுங்கள்..
மிக தெளிவாக சிந்திக்கிற மக்கள் .. தனிகட்சி தொடங்குவதாக சொல்வது கல்லைக்கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் இறங்குவதைப்போல.. விரைந்து இறங்குங்கள்
பாஜகவை விமர்சிக்காமல் அங்கொரு காலும் இங்கொருகாலும் வைக்காமல் ஒரே இடத்தில் நிற்க பழகுங்கள்.. தீவிரவாதம் வேறு பயங்கரவாதம் வேறு .. இருபக்கம் அடிவாங்க நானென்ன மத்தளமா.. என்கிறீர் அதைதான் சொல்கிறோம்
ஏன் சங்கடபடவேண்டும்.. கறுப்புச்ச்டை போர்வில் காவி சிந்தனையோடு திரியவேண்டும் நேரடியாக பாஜகவில் சேர்ந்து எதிர்நின்று போராட வா.. மறைந்துநின்று தாக்கும் ராமசந்திரன் பரம்பரையே.. நேர் வா..
..
இல்லையெனில் வாய்மூடி போ..
..
Aalanci Spm
Mansoor Mohammed
There are no comments yet
Or use one of these social networks