சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் பாஜக தமிழிசையின் தந்தை ஆவார். வசந்த் அன் கோ நிறுவனர் எச்.வசந்தகுமாரின் சகோதரரும் ஆவார். “சமத்துவப் பொதுக்கோயில் ஒன்றை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தருமபுரியில் உண்ணாவிரதம் இருந்து வந்த குமரி அனந்தன் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். ஆனால் அலைச்சல் மற்றும் உண்ணாவிரதம் இருந்ததன் காரணமாக குமரி அனந்தனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தனி ஆளாக சிகிச்சை பெற்று வருகிறார்.
சேலத்தில், இலக்கிய செல்வர் குமரி அனந்தன் வழியில், மது ஒழிப்பு சட்ட விழிப்புணர்வு நடைப்பயணம், நேற்று நடந்தது, அதுவும் ஒரு காரணம். சிகிச்சை பெற்று வரும் குமரி ஆனந்தன் கூறுகையில், “சமத்துவப் பொதுக்கோயில் ஒன்றை தமிழக அரசு கட்ட வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறேன். இந்தக் கோரிக்கையைத் தமிழக அரசிடம் முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து வந்தேன். தருமபுரியில் நான் உண்ணாவிரதம் இருந்து வந்த போது மாவட்ட அளவிலான அதிகாரிகள் என்னிடம் வந்து உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டனர். நான் மறுத்த போது கைது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கையும் வந்தது. ஆனால் என்னுடைய போராட்டத்தில் நான் உறுதியாக இருந்தேன். ஆனால், ஒரு நாள் திடீரென என்னை ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றில் ஏற்றி தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து நான் ராயப்பேட்டையில் வசித்து வரும் என்னுடைய வாடகை வீட்டில் வந்து என்னை விட்டுச்சென்றனர். தொடர் அலைச்சல், உண்ணாவிரதம் என என் கோரிக்கைகாக நான் போராடி வரும்போது திருநாவுக்கரசர், ஸ்டாலின், திருமாவளவன், வைகோ போன்றோர் வந்து உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். அதன் காரணமாகவே நான் கையிலெடுத்த போரை கைவிட்டேன். தற்போது உண்ணாவிரதம், அலைச்சல் காரணமாக உடல் நலமில்லை. அதனால் இங்கு சிகிச்சைக்காக வந்துள்ளேன்.
எனது மகள் தமிழிசை பாஜகவில் ஐக்கியமாகி விட்டாள், நிற்க அவள் அவ்வரசு கொண்டு வந்த நீட் தேர்வு எழுதாமல் டாக்டர் ஆனவள், பல கேள்விகளை சாய்சில் விட்டு விடைத்தாளை சேஸ் செய்து பாஸ் மார்க் வாங்க் பார்டரில் பாசானவள், அவளால் எனக்கு தரமான சிகிச்சையை வழங்க முடியாது, வெறும் வாய்ச்சவடால் பேர்வழி, அதனால் என் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தள்ளாட்டமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வந்து சேர்ந்து விட்டேன். இந்தியாவின் நம்பர் ஒன் டீலரான என தம்பி வசந்த் தனது மகன் விஜய் வசந்தை நம்பர் ஒன் ஹீரோவாக்கும் முயற்சியில் சினிமா தயாரிப்பாளர்களுடன் டீல் பேசிக் கொண்டிருக்கிறான், என் வந்து எட்டிக் கூட பார்க்கவில்லை” என்று கப்சா நிருபரிடம் புலம்பினார்.. இவரது மகள் மருத்துவரான தமிழிசை சவுந்திரராஜன் தமிழக பாஜகவின் தலைவர் என்பதும் அவர் மோடி கொண்டு வந்த நீட் தேர்வுக்கு ஆதரவாக நீட்டி முழக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரத பிரதமர் இப்ப தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை தந்தையை பார்க்க தமிகம் வருவாரா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. தீவிர காங்கிரஸ் ஆதரவாளரான குமரி அனந்தனை ராகுல் காந்தி வந்து சந்தித்து மோடியை சந்தி சிரிக்க வைப்பார் என நம்பத்தகாத செய்திகள் தெரிவிக்கின்றன.
பகிர்

There are no comments yet