சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிறிஸ்தவராக மதம் மாறியதாக வீடியோ வைரலான நிலையில், அதை அவர் மறுத்துள்ளார். வைகோ கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டதாகவும், அவர் தினமும் இரு வேளைகள், பைபிளை வாசித்து வருவதாகவும் பிரபல கிறிஸ்தவ ஊழியர் ஒருவர் பேசிய மேடைப் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது. அரசியல் காரணங்களுக்காக அதை வைகோ வெளிப்படையாக கூறவில்லை என்றபோதிலும், தீவிர கிறிஸ்தவராக செயல்படுகிறார் என்று அந்த போதகர் குறிப்பிடுவதாக வீடியோ உள்ளது.
இதுகுறித்து ஆங்கில பத்திரிகையொன்றுக்கு விளக்கம் அளித்துள்ள வைகோ, நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன். என் மருமகள் வீட்டில் பூஜை அறை இருக்கிறது. அதில் எல்லா கடவுள்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. என் மகள் ஒரு கிறித்தவரைத் திருமணம் செய்துகொண்டார் என்பது உண்மைதான். ஆனால், நான் மதம் மாறிவிட்டதாக வெளிவரும் தகவல்களில் உண்மையில்லை. எங்கள் சொந்த ஊரில் உள்ள பிள்ளையார் கோவிலை நானும், என் தம்பியும்தான் பராமரிப்போம் என்று வைகோ கூறியுள்ளார்.
There are no comments yet
Or use one of these social networks