கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக சசிகலாவின் உறவினர்கள் வீடு, அலுவலகங்களில் இன்று சோதனை நடைபெற்று வரும் நிலையில், டிடிவி தினகரன் திருவண்ணாமலை வந்தார். அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலர் சசிகலாவின் வழக்குரைஞர், ஜோதிடர் என பலரது வீடு மற்றும் அலுவலகங்களிலும், தினகரன் வழக்கமாக சாப்பிடும் ஓட்டல் உட்பட வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டை தவிர்த்து தமிழகம் பெங்களூரு என 187 இடங்களில் சோதனை நடைபெற்றது.
திருவண்ணாமலையில் கப்சா செய்தியாளர்களை சந்தித்த தினகரன் கூறியதாவது: வருமான வரித்துறை சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. சோதனைக்கு எதிராக குரல் கொடுத்த தலைவர்களுக்கு நன்றி, நாளை அவர்களுக்கு இதே நிலை வரும்போது நான் குரல் கொடுப்பேன். சோதனையை நான் எதிர்க்கவில்லை, அவர்கள் கடமையைத்தான் செய்துள்ளனர், என தொண்டர்கள் எனப்படும் குண்டர்கள் தான் அதிகாரிகள் கொண்டு வந்த சோத்து போட்டலங்களை பிரித்து தின்று விட்டார்கள். புதுச்சேரியில் என வீட்டில் பாதாள அறை இருப்பதாக ஊடகங்கள் செய்தி பரப்பின. அங்கு தரைதளமே இல்லை கட்டடம் வானத்தில் பறந்து கொண்டிருக்கிறது. நான் ஒன்றும் காந்தியின் பேரன் அல்ல, அப்படி பேசவும் இல்லை, நானும் ஒரு சாதாரண அரசியல் பெருச்சாளி, கட்டப்பஞ்சாயத்து சோக்காளி. மேலும் என் வீட்டில் நடந்து சோதனையில் நான் தூய்மையானவன் என்று என்னால் சொல்ல முடியும் அதனால் தான் சட்டையை நீலம் போட்டு துவைக்க சொல்கிறேன். வீடு மற்றும் அலுவலகங்களில் கைப்பற்றபடும் பணம் எல்லாமே கணக்கில் காட்டப்பட்டது. ஒரே நேரத்தில் 1800 அதிகாரிகளை களமிறக்கி சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன? எங்கள் அடியாட்களின் மீதுள்ள பயம் தான். ஒரே நிறுவனத்தின் காரை முன்பதிவு செய்திருப்பதும் சந்தேகம் எழுப்புகிறது. 3 மணி நேரத்தி முடிக்க வேண்டிய சோதனையை 3 நாட்களாக நடத்தி வருகிறார்கள், 30 ஆண்டுகளாக திட்டமிட்டு கொள்ளையடித்து சொத்துக்கள் அவை. என் வீட்டில் இருக்கும் கற்கண்டை சில அதிகாரிகள் வைரக்கற்கள் என்று பறிமுதல் செய்துள்ளதாக தெரிகிறது. அது கற்கண்டும் அல்ல வைரக்கற்களும் அல்ல, ஜெயலலிதாவிடம் திருடித்தின்ன உப்பு.

எம்ஜிஆர் இறப்புக்கு பிறகு ஜானகி கட்சியும் ஜேப்பியார் போன்றவர்களும் அம்மாவை நாட்டைவிட்டே துரத்த எத்தனித்தார்கள், எங்கள் குடும்பம் தான் அரணாக நின்று தமிழகத்தில் ஒரு ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி வளர்ப்பு மகனுக்கு 100 கோடி திருமணம் செய்யும் உன்னத தலைவியாக அம்மாவை உருவாக்கினோம். ஜெயலலிதா எங்கள் ரவுடியிச பலத்தையும் நாங்கள் அவரது அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி, திமுகவை போலவே தமிழ்நாட்டை சுரண்டினோம்” என்று மனம் திறந்து கண்ணீர் சிந்தினார்.
There are no comments yet
Or use one of these social networks