சசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த வியாழக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் இல்லம், ஜெயா டி.வி இயக்குநர் விவேக் இல்லம், மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் இல்லம் என சோதனை நடைபெறும் இடங்கள் நீண்டு கொண்டே போயின.

பல்வேறு இடங்களில் சோதனை முடிந்த நிலையில், அங்கிருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சென்னையில் உள்ள சசிகலாவின் உறவினர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் நான்காவது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜெயா டி.வி அலுவலகம், கிருஷ்ணபிரியா இல்லம் என பல இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆர்வக் கோளாறில் சசிகலாவின் பெங்களூர் சிறையிலும் இல்லாத பாதாள அறையை சோதனையிட்ட தாக கப்ஸா நிருபர் தெரிவிக்கிறார்.

பகிர்

There are no comments yet