விவேக்கை கைது செய்து ஜெயா டிவியை முடக்க டெட் பாடி மோடிக்கு பிரஷர் – சரிகிறதா சசி சாம்ராஜ்யம்?

210

சென்னை : ஜெயா டிவியின் சிஇஓவும் இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமனை அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தினகரனுக்கும், சசிகலாவுக்கும் எல்லாமுமாக உள்ள விவேக் ஜெயராமனை சிக்க வைப்பதற்காகவே இந்த மாபெரும் ரெய்டு நடைபெறுவதாக கூறப்படுகிறது.

டந்த 2015-ஆம் ஆண்டு வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் வணிக வளாகத்தில் 11 தியேட்டர்களை ஜாஸ் சினிமாஸ் என்ற பெயரில் விவேக் வாங்கியுள்ளார். இதேபோல் விவேக்கிற்கு சொந்தமாக 136 தியேட்டர்கள் உள்ளனவாம். ஆனால் தியேட்டர்களை குத்தகைக்கு எடுத்ததாக கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 3 தினங்களாக நடந்து வரும் வருமான வரித் துறை விசாரணையில் அந்த தியேட்டர்களை குத்தகைக்கு வாங்க கோடிக்கணக்கான பணம் எங்கிருந்து வந்தது என்று அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் ஜெயா டிவி கணக்குகளையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக ஜெயா டிவியின் மேலாளர்கள், கணக்காளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விவேக் வீட்டில் சோதனை நடத்திய போது, விவேக், அவருடைய மனைவி கீர்த்தனா மற்றும் மைத்துனர் பிரபு ஆகியோரை தனித்தனியாக அறையில் வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் ஒரு பெண் அதிகாரி உள்பட 4 அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை நடத்தினர். தொடர்ந்து, மாலை 5.10 மணி வரை விசாரணை மற்றும் சோதனை தொடர்ந்தது. இதையடுத்து மேல் விசாரணை நடத்துவதற்காக விவேக் மற்றும் அவருடைய மைத்துனர் பிரபுவை 5.15 மணி அளவில் மகாலிங்கபுரத்தில் உள்ள இல்லத்தில் இருந்து நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உள்ள வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்துக்கு அதிகாரிகள் அழைத்துச்சென்றனர்.

ஜெயா டி.வி., நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை அலுவலகம் மற்றும் விவேக் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், வருமான வரி அலுவலகத்தில் விவேக்கிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை நேற்று இரவு 10 மணி வரை நீடித்தது. அதன் பிறகு விவேக் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

கர்நாடக மாநில அ.தி.மு.க. (அம்மா) அணி செயலாளர் புகழேந்தி, சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமார் மற்றும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆகியோருக்கு வருமான வரித்துறையினர், சென்னை நுங்கம்பாக்கம், உத்தமர் காந்தி சாலையில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தனர்.

அதன்படி நேற்று காலை டாக்டர் சிவகுமார், வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவரிடம், அவருடைய வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் உள்ளிட்ட தஸ்தாவேஜூகள் மற்றும் பணபரிமாற்றம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து பகல் 12.30 மணி அளவில், மீண்டும் அழைக்கும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

பகிர்

There are no comments yet