தமிழகம் முழுதும் உள்ள சசிகலா, தினகரன், திவாகரன், விவேக் மற்றும் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் கடந்த 9-ம் தேதி அதிகாலை 5-30 மணிக்கு ஆரம்பித்த வருமான வரித்துறை சோதனை, 5 வது நாளாக இன்று வரை தொடர்கிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் சொத்துக்களை கணக்கிடும் பணி இன்றும் நடந்து வரும் நிலையில் இன்றும் சோதனை தொடர்கிறது.
ஜெயா டிவி அலுவலகத்தில் 100 மணி நேரமாக வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை காலை 5.30 மணிக்கு ஆரம்பித்த சோதனை 100 மணி நேரமாக இன்றும் நடைபெற்று வருகிறது. இந்தச் சோதனைகளில் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிடாஸ் மது பான ஆலையில் 9 ம் தேதி முதல் ஐந்தாவது நாளாக சோதனை தொடர்கிறது. மிடாஸ் முக்கிய நிர்வாகி காமராஜ் மற்றும் சில ஊழியர்களை விசாரித்து வருகின்றனர். டே நைட், அரேபியன் டிரம் முதலான மிடாஸ் கம்பெனி மது வகைகள், அரசு மது பானக் கடைகளுக்கு அதிக அளவில் சப்ளை செய்யப்படுகிறது.
இரவு 1.00 மணிக்கு முடியும் வருமான வரித்துறை சோதனை, மீண்டும் அதிகாலையில் துவங்குகிறது. ஆயிரக்கணக்கான ஆவணங்கள் இதில் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிருஷ்ணப்பிரியா இல்லம், ஜெயா டிவி, நமது எம்ஜிஆர், ஜாஸ் சினிமாஸ் முதலான இடங்களில், ஐந்தாவது நாளாக சோதனை நடத்தப்படுகிறது. விவேக் வீட்டிலும் ஐந்தாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. கொடநாடு கர்சன் எஸ்டேட்டிலும, புதுவை லட்சுமி ஜுவல்லரியிலும் விசாரணை முடிந்து, கணக்கிடும் பணிகள் நடக்கின்றன.
ஆவணங்கள் சிக்கும் போது, அதில் கிடைக்கும் கூடுதல் தகவல்களை வைத்து மேலும் நடவடிக்கை எடுக்கும் விதமாக, வருமான வரித்துறை அதிகாரிகள் அடுத்தகட்ட விசாரணைக்கு செல்கின்றனர். இதனால் சோதனை நிறைவு பெறாமல் தொடர்வதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 18 ல் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அப்போது எதிர்கட்சித் தலைவர் முகஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்களான ஓ.பன்னீர்செல்வம், ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், கே.பாண்டியராஜன், மனோரஞ்சிதம், சரவணன், செம்மலை, சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 பேரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பை கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவான அருண்குமார் கட்சியின் அனுமதியின்றி புறக்கணித்தார்.
இதில் ஆட்சிக்கு எதிராக அரசு கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்ட இந்த எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த மார்ச் 20ம் தேதி பேரவைத் தலைவரிடம் புகார் மனு அளிக்கப்பட்டு அவர்கள் மீது அரசியலமைப்பு சட்டத்தின் 10வது அட்டவணைப்படி தமிழ்நாடு சட்டப்பேரவை கட்சி தாவல் தடை சட்டவிதிகள் 1986ன் படியும் 15 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பித்தது. இதையடுத்து அவர்களை தகுதிநீக்கம் செய்து பேரவை தலைவர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் 6 மாதங்கள் தாண்டியும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்கக் கோரி சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், திமுகவின் செயல் தலைவருமான முக.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியை சார்ந்த செம்மலை தகுதி நீக்கம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது செம்மலை தரப்பில் மீண்டும் வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு திமுக தரப்பு வக்கீல் அபிஷேக்சிங்வி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து தலைமை நீதிபதி உத்தரவில்,” எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக வரும் 16ம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள விசாரணைக்கு தடை விதிக்க முடியாது. அடுத்தக்கட்ட விசாரணையை 2 வாரத்திற்கு பின் நடைபெறும்” என்றார்.
இதனால் டெட் பாடி அரசு கவிழ்வது உறுதியாகியுள்ளது. அதற்க்கு முன்பு சசிகலா தினகரன் பழிவாங்கவே இந்த வருமானவரி சோதனை நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
There are no comments yet
Or use one of these social networks