சென்னை: ஐந்து நாட்களாக நடந்த ரெய்டின் முடிவில், ஜெயா டிவி சிஇஓ விவேக் ஜெயராமனை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர். சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள இல்லத்தில் சோதனையை அடுத்து விவேக்கை வருமானவரித்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்து சென்றனர். வருமான வரித்துறையினர் கைப்பற்றிய மொத்த ஆவணங்களின் ரூபாய் மதிப்பு 1430 கோடி ரூபாய் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மொத்த பினாமி சொத்துக்களில் ரூ. 1000 கோடி மதிப்புடைய ஜாஸ் சினிமா நிறுவனம், நாடு முழுவதும் உள்ள 350 திரை அரங்குகள் அவரது கட்டுப்பாட்டில் உள்ளன.
சிகலாவின் அண்ணன் மகன் விவேக் கட்டுப்பாட்டில்  ஜாஸ் சினிமா கம்பெனி இயங்கி வருகிறது. மேலும் ஜெயா டி.வி., நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் விவேக் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. 27-வயதான விவேக்குக்கு ஏராளமான சொத்து வந்தது எப்படி என்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் நடந்த வருமானவரி சோதனையில் விவேக் தான் மையப்புள்ளி. ஜெயலலிதாவின் முழு நம்பிக்கையைப் சசிகலா அண்ணன் மகன் விவேக் பெற்று இருந்தார். ஜெயலலிதா ஜெயைலில் களி தின்றபோது அடிக்கடி வந்து போவார். சிறையில் இருந்த அவர்களுக்கு மருந்து வாங்கி வந்து கொடுக்கும் பணியை விவேக் செய்து வந்தார். ஜெயலலிதா, சசிகலாவின் பினாமி சொத்து விவரம் பற்றி விவேக்கிடம் அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்க உள்ளனர்.
சென்னை வருமானவரி புலனாய்வு அலுவலகத்தில் விவேக்கிடம் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை மேற்கொண்டுள்ளனர். விவேக் வீட்டில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் பற்றி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தை சத்யம் சினிமாஸிடமிருந்து வாங்கியது எப்படி? என்றும் 27 வயதான விவேக்குக்கு கோடிக்கணக்கில் சொத்து வந்தது எப்படி என்றும் அதிகாரிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து சிறையில் சின்னம்மா டிவியில் செய்தியை பார்த்து கதறி அழுதுள்ளார். “அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா தொடங்கியது போல் சிறுதொழிலாக தான் சில தியேட்டர்களை மிரட்டி வாங்கி அண்ணன் மகன் விவேக்கிடம் கொடுத்து தொழில் பண்ண் சொன்னேன். அது ஒரு குத்தமா? 50 ஆயிரம் ரூபாய் வரவு செலவு கணக்கு காட்டிய ஒரு நிறுவனம் ஒரே ஆண்டில் அசுர வளர்ச்சியாக 16000 மடங்கு வளரும்போது, 33 ஆண்டு காலம் நான் அக்காவுக்கு சேவை செய்து , குருவி சேர்ப்பது போல் சிறுக சிறுக சேர்த்த பணத்தில் தொடங்கிய சிறு தொழில் மத்திய பாஜகவின் கண்ணை உறுத்துகிறது. ஒன்றும் அறியாத பச்சைப் பாலகன் விவேக்கிடம் கிடுக்கிப்பிடி போட்டு மடக்கப்பார்க்கிறார்கள் எங்களை ஒரு 20 ஆண்டு காலம் சிறையில் தள்ளினாலும் தற்போது 27 வயதே ஆகும் விவேக் 47 வயது வாலிபனாக மன்னார்குடி மாபியாவின் அரணாக வந்து நிற்பான்.” என்று நீலிக்கண்ணீர் சிந்தியபடி ஜெயலலிதா சமாதியில் செய்தது போல் தரையில் 3 முறை அடித்து சபதம் செய்தார்.
பகிர்

There are no comments yet