சசிகலா, அவரது உறவினர்கள் வீடுகளில் எந்த அடிப்படையில் இவ்வளவு பெரிய அளவில் சோதனை நடத்தப்பட்டது என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக வருமான வரித் துறையின் சென்னை மண்டல அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரி ஒருவரை தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் சந்தித்தார். அப்போது, அவரிடம் ரகசிய ‘பைல்’ ஒன்றைக் கொடுத்தார். அதில் சசிகலா, அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்கள், பினாமி சொத்துகள் எங்கெல்லாம் உள்ளன, போலி நிறுவனங்களின் விவரங்கள், அவற்றின் வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற அனைத்தும் ‘ப்ளூ பிரின்ட்’ போல தெளிவாக இருந்தன.

அதை வைத்துதான் இவ்வளவு பெரிய சோதனையை திட்டமிட்டபடி எங்களால் நடத்த முடிந்தது. முக்கிய ஆதாரங்களும் கிடைத்தன. அந்த பைலை வைத்துதான் சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அந்த முக்கிய பிரமுகர் ஆடிட்டர் குருமூர்த்தியாக இருக்கலாம் என்று நமது கப்ஸா நிருபர் தெரிவிக்கிறார்

பகிர்

There are no comments yet