குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தோல்வி பயத்தால் அமல்படுத்தப்பட்ட 4 மாதங்களிலேயே 213 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை அரசு குறைத்துள்ளது.
எந்த ஒரு விவகாரத்திலும் அரசியல் இலாபம் பெறுவதிலும் விளம்பரம் பெறுவதிலும் பாஜக நிபுணத்துவம் பெற்றவர்கள். போராட்டங்களை புறந்தள்ளி, இந்த ஜி.எஸ்.டி விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று கூறி வந்த மத்திய அரசு, தற்போது பணிந்துள்ளது. இதற்கான விடை குஜராத் தேர்தலில் பாரதீய ஜனதா கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொண்டுள்ளது என்பதில் அடங்கியிருக்கிறது. குஜராத்தின் கிராமங்களுக்குள் பாஜக தலைவர்கள் செல்ல மக்கள் அனுமதி அளிக்கவில்லை. பாஜக தலைவர்களின் போஸ்டர்கள் அகற்றப்படுகின்றன. ஜி.எஸ்.டி பணவீக்கத்தை அதிகரித்துள்ளது. சாதாரண மனிதனின் வரவு செலவு திட்டத்திலும் பெரும் அதிருப்தியை ஜி.எஸ்.டி உருவாக்கியுள்ளது. விரைவில் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி 213 பொருட்களூக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்புக்கு எதிராக பணமதிப்பிழப்பு நாடகத்தை அரங்கேற்றியது போல் தேர்தல் தோல்வி பயத்தில் இந்த வரிக்குறைப்பு நாடகம் அரங்கேறியுள்ளது. 28 சதவிகித வரி விதிப்பு பட்டியலில் இருந்து 80 சதவிகித போருட்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. 250 பொருட்களுக்கு 28 சதவிகித வரி விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது 50 பொருட்களுக்கு மட்டுமே 28 சதவிகித வரி தொடர்கிறது. சிகரட் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களும், ஆடம்பர பொருட்களுமே அந்த உயர் வரி விதிப்பு பட்டியலில் உள்ளன. இந்த வரி குறைப்பால் சிறு, குறு, தொழிலாளர்கள், ஏழை மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை. பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான நுகர்பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டாலும், சில்லறை வணிகர்கள் இலாப நோக்கில் விலையை குறைக்க மறுப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. நுகர்பொருட்களை வாங்கி விற்கும் சில்லறை விற்பனையாளர்கள் விலையைக் குறைக்கமுடியாது என்று அடம் பிடிக்கின்றனர். ஜிஎஸ்டி வரி குறைப்பால் ஏற்படும் இழப்பீட்டை நுகர்பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களே ஏற்கவேண்டும் என்று கூறிவருகின்றனர். அவ்வாறு இல்லாவிட்டால். தாங்கள் ஏற்கனவே கொள்முதல் செய்த பொருட்களை திரும்ப பெற்றுக்கொண்டு, புதிய குறைக்கப்பட்ட விலையில் பொருட்களை அளிக்கவேண்டும் என்று திரும்ப திரும்ப கூறிவருகின்றனர், இந்நிலையில் தீப்பெட்டி க்கான ஜிஎஸ்டி யில் மாற்றமில்லை 18% ஜிஎஸ்டி தொடரும் என்று தெரிகிறது.

இது குறித்து பாஜக அடிமையான ஆளுங்கட்சி கப்சா பிரமுகர் கூறும்போது, திருநெல்வேலியில் அக்.,23ல் கந்துவட்டி மிரட்டலால் இசக்கிமுத்து குடும்பத்தினர் 4 பேர் தீக்குளித்து இறந்தனர். நெல்லையைச் சோ்ந்த இசக்கிமுத்து என்பவா் கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 23ம் தேதி மாட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தனது இரண்டு குழந்தைகள், மனைவி என குடும்பத்துடன் தீக்குளித்தா். இந்த சம்பவத்தில் தீக்குளித்த அனைவருமே உயிரிழந்தனா். தன்பிறகு கந்துவட்டி குறித்து புகார் தெரிவிப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தில் புகார் எண் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.கடந்த 6ம் தேதி திங்கள்கிழமை கலெக்டரிடம் புகார் அளித்த 7 புகார்களின் மீது உடனடியா கவழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. “நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த இசக்கிமுத்து போன்றோர் தீப்பெட்டி சுலபமாக வாங்கும் விலையில் கிடைத்ததால் தான் தீக்குளித்து பரிதாபமாக உயிரிழந்தனர். ஏற்கனவே ஒவ்வொரு பருப்பாக நியாவிலைக் கடைகளில் ரத்து செய்து அநியாயம் இழைத்து வருகிறோம், முன்பு சர்க்கரை வியாதியை தடுக்க சர்க்கரையை ரத்து செய்தது போல் மக்கள் உயிரைக் காப்பாற்றவே தீப்பெட்டி விலையையும் குறைக்க முடியவில்லை, அந்த எண்ணமும் இல்லை” என்றார்.

பகிர்

There are no comments yet