மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா வாழ்ந்த சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதையடுத்து போயஸ் தோட்டத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரி விவேக் போயஸ் தோட்ட இல்லத்துக்குள் சென்றிருக்கிறார். விரைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதிமன்றத்தின் அனுமதி பெற்று இந்த வருமானவரித்துறை சோதனை நடைபெறுவதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

வேதாநிலையத்திலிருந்து சிலர் ஆதாரங்களை அகற்றுவதாக குறிப்பிட்ட தகவல் ஒன்று கிடைத்தனால் இந்தத் திடீர்ச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சசிகலா பயன்படுத்திய அறைகளில் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, லேப்டாப், 4 பென் ட்ரைவ்கள், கணினி உள்ளிட்ட மின்னணுப் பொருட்களையும், தகவல் சேமிப்புச் சாதனங்களைக் கைப்பற்றியதாகத் தெரிகிறது.

அனைத்து அறைகளையும் சோதனை செய்யவில்லை என்று வருமானவரித்துறையினர் கூறுவதாக சில தொலைக்காட்சி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சென்னை போயஸ் தோட்டம் அருகே தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் மீண்டும் வருமான வரிச் சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது

பகிர்

There are no comments yet