சென்னை: வரி ஏய்ப்பின் புகலிடமே போயஸ்கார்டன் தான் என்றும் சசிகலாவிடம் சாவி இருப்பதால் ஜெ. கோட்டைக்குள் நுழைய முடியாது என்று தப்புக் கணக்கு போட்டு விட்டார்கள் என்றும் ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் நடந்த வருமான வரித்துறையின் சோதனை தமிழக அரசியல் களத்தில் அடுத்த அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் வீடு கோயில் என்ற சென்டிமெண்டை பயன்படுத்தி தப்பிக்கலாம் என்று சசிகலா குடும்பம் நினைக்கிறது. அதிமுகவில் மைத்ரேயன், தம்பிதுரை உள்ளிட்ட சிலரே ஜெயலலிதாவின் வேதா நிலையத்தில் நடந்த வருமான வரி சோதனைக்கு வேதனை தெரிவிக்கின்றனர். ஆனால் அமைச்சர்கள் எல்லாம் தெளிவாகத் தான் இருக்கிறார்கள். சசிகலா குடும்பத்தின் ஊழலை வெளிக்கொண்டு வரவே போயஸ் கார்டனில் வருமான வரி சோதனை என்று அச்சுபிசமாகமல் கூறி வருகின்றனர். அமைச்சர்கள், எம்பிகள் தங்களது கருத்துகளை தனிப்பட்ட முறையில் தெரிவித்து வர அதிமுக கட்சி மற்றும் ஆட்சியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இது குறித்து இன்னும் வாய் திறக்கவே இல்லை.

இது குறித்து ஜெயா டிவியின் சி.இ.ஓ விவேக் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஜெயலலலிதா அறையில் சோதனை நடத்த, அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கவில்லை. சோதனையில் சில கடிதங்கள், 2 பென் டிரைவ், ஒரு லேப்டாப்பை மட்டும் அதிகாரிகள் எடுத்து சென்றனர் என்றார். இதுகுறித்து, ஆடிட்டர் குரூமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

‘‘ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரி சோதனை. வரி ஏய்ப்பில் ஈடுபட்ட மன்னார்குடி மாபியா மோசடிக்கான ஆதாரங்களை மின்னணு வடிவில் வைத்திருந்தது. சசிகலாவிடம் சாவி உள்ளதால், ஜெயாவின் கோட்டைக்குள் யாரும் நுழைய முடியாது என அவர்கள் நினைத்திருந்தனர். வருமான வரித்துறை சோதனை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. வருமான வரித்துறைக்கு பாராட்டுகள்’’ என ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.

பகிர்

There are no comments yet