சென்னை: சர்ச்சைக்குரிய பத்மாவதி படத்துக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். நடிகை தீபிகா படுகோனை பாதுகாக்க வேண்டும் எனவும் கமல்ஹாசன் தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் பத்மாவதி திரைப்படத்தை இயக்குநர் பன்சாலி உருவாக்கியுள்ளார். ஆனால் இப்படத்தில் ராணி பத்மினி பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்பது ராஜபுத்திரர்களின் குற்றச்சாட்டு. தற்போது இந்த விவகாரத்தை இந்து அமைப்புகள் கையிலெடுத்துள்ளன. நடிகை தீபிகாபடுகோனே, இயக்குநர் பன்சாலி ஆகியோர் தலைக்கு அதிகபட்சமாக ரூ10 கோடி என உச்சகட்ட வெறியையும் வெளிப்படுத்தியுள்ளனர் இந்து அமைப்புகள். இந்நிலையில் பத்மாவதி திரைப்படத்துக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பதிவில், தீபிகாபடுகோனை நாம் பாதுகாக்க வேண்டும். உடலுக்கு தலை எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமான தீபிகாவின் சுதந்திரத்தை நாம் மறுக்கக்கூடாது. என்னுடைய படத்துக்கும் கூட எதிர்ப்புகள் வந்துள்ளன; வன்முறையுடன் கூடிய எந்த விவாதமுமே மோசமானது. நாங்கள் போதுமான அளவு சொல்லிவிட்டோம். இனி யோசித்து விழித்தெழ வேண்டிய தருணமிது என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, பத்திரிகை பேட்டி ஒன்றில்  ‘இந்து தீவிரவாதம்’ குறித்து சர்ச்சை கருத்தை கூறியதால் கமல்ஹாசனை சுட்டு தள்ள வேண்டும் என பாஜக சார்பாக கொலை மிரட்டல் விடுக்கும் விதமாக சர்ச்சை கருத்து பரவியது. தற்போது அதேபோல் பத்மாவதி திரைப்படத்தில் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டதாக தீபிகா, பன்சாலி தலைகளுக்கு விலை வைக்கப்பட்டுள்ளதை அறிந்த கமல் கவுதமியை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருவதால் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தீபிகாவுக்கு கொக்கி போட்டுள்ளார். முதலில் நாட்டியக் கலைஞர் வாணி கணபதியை கமல்ஹாசன் திருமணம் செய்து கொண்டார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, விவாகரத்து பெற்று, சரிகாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன், அக்‌ஷராஹாசன் என 2 மகள்கள் உள்ள னர். கமல் சரிகா இருவரும் 2002-ல் விவாக ரத்துக்கு விண்ணப்பித்து, 2004-ல் அதிகாரப் பூர்வமாக விவாகரத்து பெற்றனர். இதற்கிடையில், 1992-ல் வெளிவந்த ‘தேவர் மகன்’ படத்தின்போதே கமல் – கவுதமி இடையே நெருங்கிய நட்பு இருந்தது. 1998-ல் சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்துகொண்ட கவுதமிக்கு சுப்புலெட்சுமி என்ற மகள் உண்டு.
திருமணமான ஒரே ஆண்டில் கவுதமி விவாகரத்து பெற்றார். 2003-ம் ஆண்டில் இருந்தே கவுதமியுடன் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார் கமல். அவர்களது 13 ஆண்டுகால நட்பு முடிவுக்கு வந்தது. இது குறித்து கப்சா நிருபரிடம் பேசிய கமல். “கவுதமி பிரிந்து சென்றபோது, எப்போது வேண்டுமானாலும் கவுதமியும் அவரது மகளும், என்னிடம் வரலாம், என் வீட்டுக் கதவுகள் திறந்தே இருக்கு என சொல்லி இருந்தேன், தற்போது தீபிகாவிற்கும் திறந்திருக்கும் என சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். இந்து தீவிரவாதம் கருத்தால் ‘எனக்கு எதாவது காயம் என்றால் அது தன்னால ஆறிவிடும், என்ன மாயமோ மந்திரமோ தெரியல எனக்கு ஒன்னுமே ஆவறதில்ல காரணம் நான் எழுதுற தமிழ் யாருக்கு புரியறதில்ல, ஆனா தீபிகாவிற்கு காயம்னா என் மனசு தாங்காது, அவங்க உடம்பு தாங்குமா தாங்காது அபிராமி அபிராமி.. என குணா ஸ்டைலில் அழுது நடித்து காண்பித்தார்.
பகிர்