அன்புச்செழியன் (எ) மதுரை அன்பு என்பவர் பிரபல ஃபைனான்ஸியர். பண பலம், அரசியல் பின்னணி, மாவட்டச் செயலாளர்களைக் கைக்குள் வைத்திருப்பது என எல்லா வேலைகளையும் சைலன்ட்டாக இருந்து மூவ் பண்ணுவதில் கில்லாடி. படம் தயாரிக்க நிறைய தயாரிப்பாளர்கள் இவரிடம்தான் பணம் வாங்குவார்கள். ஆனால், படத்தின் பூஜைகள், இசை வெளியீட்டு விழாக்கள், வெற்றி விழாக்கள் என எதிலும் தலைகாட்டாமல் வலம் வருபவர். ஒருவருக்குப் பணம் தேவைப்படுகிறது என்றால் அவர் வீடு தேடி பணம் வரும். ‘உங்களுக்குப் பணத் தேவை இருப்பது எனக்குத் தெரியும். இந்தப் பணத்தை எடுத்துக்கோங்க. முடியும்போது திருப்பிக் கொடுங்க’ என்று தானாகவே முன்வந்து அவரது வலைக்குள் சிக்கவைப்பது இவரது யுக்தி. ஒருவர் இவரிடம் பணம் வாங்கினால் சொன்ன தேதியில் திருப்பித்தர வேண்டும். அப்படித் தராவிட்டால், தொடர்ந்து நூற்றுக்கணக்கான போன் கால்கள் வரும். அதைத் தவிர்த்தால் மிரட்டல்கள், வீட்டில் உள்ள பெண்களை, பெரியவர்களை, குழந்தைகளைத் தூக்கிச்சென்று பணத்தைக் கொடுத்துட்டு கூட்டிக்கிட்டு போ என்ற நிபந்தனை வைப்பார். இவரின் மிரட்டல்களுக்கு ஆளானவர்கள் தமிழ்சினிமாவில் ஏராளம். பல முன்னணி நடிகைகள்கூட இதில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மெளனராகம்’, ‘நாயகன்’ போன்ற வெற்றிப் படங்களின் தயாரிப்பாளர் ஜி.வியும் இவர் கொடுத்த மன உளைச்சலினால்தான் தற்கொலை செய்துகொண்டார். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வட்டிக்குத் தரக்கூடிய அளவுக்கு எந்நேரமும் இவரிடம் பணப் புழக்கம் இருந்துகொண்டேதான் இருக்கும். 

அதிமுகவின் பெரும்பாலான அமைச்சர்கள் தங்கள் பணத்தை முதலீட்டுக்காக அன்பு செழியனிடம் கொடுத்து வைத்துள்ளார்கள் என்றாலும், இதில் பிரதானமாக முதலீடு செய்துள்ளவர், உத்தமர் பன்னீர்செல்வம். பன்னீர்செல்வம் முதலீட்டில் தயாரிக்கப்பட் முதல் திரைப்படம்தான் வெள்ளைக்கார துரை ஆனால் தயாரிப்பாளர் என்ற இடத்தில் அன்புசெழியன் பெயர்தான் வரும்.
வெள்ளைக்கார துரை படத்தின் அசல் தயாரிப்பாளர் உத்தமர் பன்னீர். அந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுத கவிஞர் யுகபாரதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். திடீரென்று ஒரு நாள் அன்பு செழியனிடமிருந்து போன். படத்தில் ஒரே ஒரு பாடலை மட்டும் கருப்பு சொம்பு வைரமுத்து எழுதிக் கொள்ளட்டும் என்று கூறியிருக்கின்றனர். எல்லா பாடல்களையும் எழுத என்னை ஒப்பந்தம் செய்து விட்டு, திடீரென்று ஒரு பாடலை மட்டும் வைரமுத்துவிடம் கொடுத்தால் என்ன அர்த்தம் என்று அவர் கோபப்பட்டதும், படத்தின் உண்மையான தயாரிப்பாளர் உத்தமர் பன்னீர்தான். பன்னீர் குடும்பத்தை வைரமுத்து அணுகி மிகுந்த அழுத்தம் தந்திருக்கிறார். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் என்று கூறியதும், ஒரே ஒரு பாடலை மட்டும் கருப்பு சொம்பு எழுதினார்.

With due credits to Vikatan and Sankar A

பகிர்