Translated from The Hindu for better reach, not to violate copyright.

சமீபத்தில் நரேந்திர மோடி திமுக தலைவர் கலைஞரை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்த நிகழ்வு எட்டாவது அதிசயமாக 16 வருடங்கள் கழித்து திமுக ஆதரவு செய்தி ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து திமுக து.பொது செயலாளர் துரைமுருகன் அரை மணிநேர பேட்டியும் ஒளிபரப்பானது. இந்த முடிவுகளை எடுத்தது சமீபத்தில் ரெய்டுக்கு உள்ளான ஜெயலலிதாவின் செல்லப் பிள்ளை விவேக் ஜெயராமன் என்று கூறப்படுகிறது. 1990 ஆண்டு ஒன்றரை வயது இருக்கும் போது, விவேக்கின் தந்தை மின்கசிவின் காரணமாக ஜெயாவின் ஐதராபாத் திராட்சை தோட்டத்தில் காலமானார்.

அப்போது முதல் ஜெயாவின் கண்ணசைவில் விவேக் போயஸ் கார்டன் இல்லத்தில் வளர்ந்து வந்தார். தாயார் இளவரசி, சின்னத்தை சசிகலா பெரியத்தை ஜெயா என ஒரு உண்மைத்தாய்க்கும் இரண்டு வாடகைத் தாய்களுக்கும் சேர்த்து மூன்று தாய்களின் கண்காணிப்பில் வளர்ந்தேன் என்று விவேக் பெருமைபட தெரிவித்தார். போயெஸ் கார்டன் மொட்டை மாடியில் போலீஸ் பாதுகாப்புடன் பட்டம் பறக்கவிட்ட சிறுவன் இன்று 11 சினிமா தியேட்டர்க்ளுக்கு ஓனராக வார்த்தெடுக்கப் பட்டுள்ளார். இதற்கு காரணம் ஜெயா ஆட்சியில் கொள்ளை அடித்த மக்கள் பணம். ஜெயாவின் செல்லப்பிராணியாக இருந்தாலும் சசிகலாவின் கடிவாளம் கட்டிய குதிரைக் குட்டியாக வளர்ந்தார் விவேக். விவேக்கிற்கு 10 வயது ஆகும்போது கோவையில் உள்ள பிளாக் தண்டர் தீம்பார்க்கிற்கு அழைத்து சென்று மிட்டாய் வாங்கி கொடுத்து ஏமாற்றி சின்மயா ரெசிடன்சியல் பள்ளி மாணவர் விடுதியில் தங்கி படிக்கும் வண்ணம் கண்டிப்பான பள்ளியில் சேர்க்கப்பட்டார். சின்னத்தை சித்தி உருவத்தில் செய்த சித்து வேலையால் நான் ஹாஸ்டலில் சிறு வயதில் கஷ்டப்பட்டேன்.

பின்னர் ஆஸ்திரேலியா சிட்னி நகரில் பிபிஏ படிப்பை படித்தேன்.. சின்னத்தையின் சித்தி கொடுமையால் நான் படிக்கும்போதே பார்ட் டைம் வேலையாக மூட்டை தூக்கும் வேலையும், பீட்சா டெலிவரி செய்யும் வேலையும் செய்ய வேண்டியதாயிற்று. மீண்டும் இந்தியா திரும்பி புனேயில் சிம்பயாசிஸ் இன்ஸ்டிடியூட்டில் எம்பிஏ படித்து கேம்பஸ் செலகசனில் புகையிலை பொருட்களால் இந்திய மக்களை கேன்சர் நோயாளிகளாக்கும் ஐடிசி நிறுவனத்தில் ஆறு மாதம் சிகரெட் உற்பத்தியை கற்றேன். பின்னர் காலை 6.00 மணிக்கு எழுந்து ஒவ்வொரு பெட்டிக் கடையாக சென்று பீடி சிகரட் சப்ளை செய்வேன். பயிற்சிக்கு பிறகு பெங்களூரு வந்தேன். சென்னைக்கு மாற்றல் கேட்டு பார்த்தேன். ஆனால் சின்னத்தை சசி என் உயிருக்கு எதிர்க்கட்சிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் அப்பல்லோவில் ஜெயா இருந்த (இறந்த) போது யாரையும் அண்ட விடாதது போல் என்னையும் போயஸ் கார்டனை அண்டவிடவில்லை. 2014 வரை ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு பெரியத்தையின் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு வாழ்க்கையில் திருப்புளி முனை போல் குத்திக் கிழித்தது. அப்போது பாட்ஷா படத்தில் வருவது போல் என் பெயர் விவேக், எனக்கு இன்னொரு பேர் இருக்கு ‘ஜெயாவின் செல்லப்பிராணி’ என்று என் முதலாளியிடம் லீவு கேட்டேன். உடனே லீவு கிடைத்தது. பின்னர் பணிக்கு திரும்பியபோது முதலாளி எனக்கு சலாம் போட்டு டீ காபி வாங்கி வரட்டுமா சார் என்றார். எனக்கு கர்வம் தலைக்கேறியது. வேலையை ராஜிநாமா செய்தேன். கோடிக்கணக்கான சொத்து இருக்கும் போது ஒன்றும் இல்லாதவன் போல் வெளி உலகிற்கு போக்கு காட்டினேன். பின்னர் சின்னத்தை மிரட்டி வாங்கிய ஹாட்வீல்ஸ் என்ற பெயருடைய ஜாஸ் சினிமாஸ் கம்பெனி ஓனரானேன்.

பின்னர் சத்யம் சினிமாஸ் இடம் இருந்து லக்ஸ் சினிமாஸ் 11 தியேட்டர்கலை கொடநாடு எஸ்டேட் போல் மிரட்டி வாங்கினோம். பின்னர் தான் இந்த வருமான வரி சோதனை வந்தது. இதற்கு முன் இப்படி சோதனைக்கு ஆளானதில்லை, என் மாமனார் மனைவிக்கு வரதட்சணை கொடுத்த நகைகளை வருமான வரித்துறையினர் டிசைன் பிடித்ததால் எடுத்து சென்று விட்டனர். என் தாயாரும் சின்னத்தையும் ஜெயிலில் வாடுகிறார்கள். முதன் முறையாக சின்னத்தையை கிழட்டு பெண் சிங்கமாக வனவிலங்கு சரணாலயத்தில் பார்ப்பது போல் பார்த்து கண்ணீர் முட்டிக் கொண்டு வந்து விட்டது. இதுவரை ராஜ போக வாழ்க்கை வாழ்ந்து வந்த நான், டெட்பாடி பன்னீர் தினகரன் சண்டையில் யார் மண்டை உடைந்தாலும், ஆட்சி கவிழ்ந்தாலும் ‘தொபுக்கடீர்’ என்று அரசியலில் குதித்து, மன்னார்குடி மாபியாவின் மிச்ச மீது சொத்துக்களை மோடி மஸ்தானிடம் இருந்து காப்பாற்றி, வருங்கலா முதல்வராக முடிவு எடுத்து விட்டேன். அந்த துணிச்சல் எனக்கு வர இந்த ரெய்டுகள் தான் காரணம். என்றார் விவேக்.
21 நவம்பர் இந்து நாளேட்டில், மேற்கண்டவிவேக் ஜெயராமனின் பேட்டி வந்துள்ளது. அந்த பேட்டியில், சிறிய வயதிலேயே தந்தையை இழந்தவர், ஜெயலலிதாவின் கடுமையான கண்காணிப்பில் வளர்ந்தவர், வாழ்வில் பல துன்பங்களை சந்தித்த ஒரு இளம் தொழிலதிபர் என்று அவருக்கு ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டு, சூழல் ஏற்பட்டால் நான் அரசியலுக்கு வருவேன் என்ற அவரது கருத்தோடு அவருக்கு ஒரு களம் அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மன்னார்குடி கும்பலின் பேராசை உலகறிந்தது. ஊரை கொள்ளையடித்த பணத்தில் 11 தியேட்டர்களை வாங்கி, தமிழகத்தில் பல தியேட்டர்களை லீசுக்கு வாங்கி கொள்ளை லாபம் சம்பாதித்தும் விவேக்கின் பேராசை அடங்கவில்லை. கபாலி திரைப்படத்தின் மொத்த விநியோக உரிமையையும் வாங்கி, அரசு பின்புலத்தில் இருக்கும் துணிச்சலில் கபாலி படத்தின் டிக்கட்டுகளை 1000 ரூபாய்க்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதித்த நபர்தான் இந்த விவேக். பேராசை மன்னார்குடி குடும்பத்தின் ஒவ்வொரு அணுவிலும் உள்ளது. அதை ஒரு நாளும் மாற்றவே முடியாது. இவரை ஒரு வளரும் இளம் தொழிலதிபராக சித்தரிக்கிறது இந்து பேட்டி. இந்த பேட்டி பிரத்யேகமாக பேட்டி என்று இந்து நாளேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பேட்டியை எடுத்தவர் சந்தியா ரவிசங்கர். இன்றைய எகனாமிக் டைம்ஸின் பெங்களுரு பதிப்பில், விவேக்கின் இதே பேட்டி வெளியாகியுள்ளது. அதை எழுதியவர் பிரேம்சங்கர். இவர் சந்தியாவின் கணவர். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து, தாங்கள் வேலை பார்க்கும் இரண்டு ஊடகங்களிலும் பிரத்யேகம் என்று பேட்டியை வரவழைப்பது, விவேக் ஜெயராமனின் பிம்பத்தை கட்டமைப்பதற்கு இல்லாமல் வேறு எதற்கு என்ற கேள்வி எழுகிறது.

With inputs from A Sankar facebook post

மற்ற ஆதாரங்கள்The Hindu
பகிர்